No icon

சீனிவாசன் ஜெயின்

கட்டாய மதமாற்றம் அடிப்படை ஆதாரமற்றது - NDTV

NDTV  தொலைக்காட்சியில் உண்மையும் மிகைப்படுத்தலும் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் சீனிவாசன் ஜெயின் அவர்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கும், இந்திய மக்களுக்கும் பெருமையை சேர்த்திருக்கிறார். 2022 நவம்பர் 19 ஆம் தேதி நடைபெற்ற உண்மையும் மிகைப்படுத்தலும் என்ற இந்த நிகழ்வில் கட்டாய மதமாற்றத்தை பற்றி ஒரு நேர்காணலை நடத்தினார். பாஜகவின் உறுப்பினரும், உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞரும், பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரின் விசுவாசியாக கருதப்படும் அஸ்வின் குமார் இந்த நேர்காணலில் கலந்து கொண்டார்.

2021 மார்ச் மாதத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிராக வெறுப்பு பேச்சுகளை பேசியதற்காக கைது செய்யப்பட்டவர் இந்த அஸ்வின் குமார். இதே ஆண்டில் இவர் தொடுத்த கட்டாய மதமாற்ற வழக்கினை நீதிபதிகள் ரோஹிண்டன்  F நாரிமன்,  B.R  கவாய் மற்றும் ஹிருஷிகேஷ் ராய் கொண்ட அமர்வானது விசாரித்தது அப்போது நீதிபதி நாரிமான் அவர்கள் 18 வயது நிரம்பிய இளையோர்கள் தங்களின் மதத்தை தெரிந்து கொள்வதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. மேலும் ஒவ்வொருவரும் தான் விரும்பிய மதத்தை தேர்ந்தெடுக்கவும், அறிவிக்கவும், செயல்படுத்தவும் அவர்களுக்கு உரிமையுண்டு என்பதை நீங்கள் மறந்துவிடக்கூடாது. மேலும் இதுவரை நீங்கள் தொடுத்த எந்த வழக்குகளுக்கும் சிறு ஆதாரம் கூட இல்லை என்பதை நீங்கள் மறுக்க இயலாது. இனிமேல் இப்படிப்பட்ட வழக்குகளை தொடுத்து வாதாட விரும்பினால் உங்கள் மீது அதிகமான அபராதம் விதிக்கப்படும் என்று கூறினார்.

2022 நவம்பர் மாதம் இவர் தொடுத்த வழக்கு நவம்பர் 14 ஆம் தேதி நீதிபதிகள் M.R  ஷா மற்றும் ஹிமா கோஹ்லி ஆகியோர் அடங்கிய அமர்வானது விசாரித்தது. அப்போது நீதிபதிகள் இவர் அளித்த வழக்கில் உண்மை இருக்கிறதா இல்லையா என்பதை ஒன்றியம் மற்றும் மாநில அரசுகள் ஆராய வேண்டும் என்று கூறினார்கள். இவ்வாறு அஸ்வின் குமார் அவர்கள் வழக்கு தொடுப்பதும் பிறகு அடிப்படை ஆதாரங்கள் இல்லை என்று நீதிமன்றத்தால் எச்சரிக்கப்பட்டு வழக்கை திரும்ப பெறுவதும் அன்றாட காட்சியாக இருக்கிறது. எனவே கட்டாய மதமாற்றம் என்பது அடிப்படை ஆதாரம் அற்ற பொய் எனக்கூறி சீனிவாசன்ஜெயின் அவர்கள் நேர்காணலை நிறைவு செய்தார்.

Comment