No icon

எனக்கொரு தலைவன் உண்டு!

இயேசுவின் தலைமைத்துவப் பண்புகள்- 1

தலைவா!’, ‘தலைவாஎன்ற கோஷங்களைப் பல நேரங்களில் நாம் கேட்டதுண்டு. முன்னணி நடிகர்களின் முதல் நாள் பட ரிலீஸின்போது அந்த நடிகர்களை இரசிகர்கள்தலைவா’  என்று அழைக்கும் கோஷம் நம் காதுகளைத் துளைத்ததுண்டு. அதேபோல, அரசியல் தலைவர்களின் பிரவேசத்தின்போதும்தலைவாஎன்ற கோஷங்கள் மேடையில் அதிரும்.

தலைவாஎன ஒருவர் அழைக்கப்பட அதற்கான தகுதிகள் வேண்டும். ஒருவரைதலைவாஎன அழைக்க, ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பொறுப்பும், கடமையும் இருக்கிறது.

நம் வாழ்விலும் நம்மை ஈர்த்த  பல தலைவர்கள் இருக்கலாம். எனக்குச் சில தலைவர்கள், உங்களுக்குச் சில தலைவர்கள்! நம் வாழ்க்கையில் சந்தித்த, நாம் படித்த வரலாறுகளின் மூலம் நம்மை ஈர்த்தவர்கள் உள்ளனர். ஓரிரு நொடிகள் நம் கண்களை மூடி, நம் வாழ்வில் நம்மை ஈர்த்த, கவர்ந்த தலைவர்கள் யார், யார்? என்று யோசிக்கலாம். உடனடியாக நம் நினைவில் வருபவர்கள் யார்?

இந்நேரம் தலைவர்கள் பெயரை  உங்கள் மனத்தில் பட்டியலிட்டிருப்பீர்கள். நல்லது! பொதுவாக அண்ணல் காந்தி, காமராஜர், அப்துல்கலாம், அன்னை தெரேசா - இப்படியாகச் சிலரை நம்மை ஈர்த்த தலைவர்களாக நினைப்பதுண்டு. இப்போது என் கேள்வி. ‘இயேசு என் முதன்மையான தலைவன்என உடனே உங்கள் மனத்தில்  நினைத்தவர்கள் எத்தனை பேர்?

இயேசுவைஎன் தலைவன்என்று நினைத்திருப்பீர்கள்  என்றால் மகிழ்ச்சி! கண்மூடித்தனமாகஇயேசு என் தலைவன்என்று அழைப்பவர்கள் சிலர். இயேசுவோடு ஒவ்வொரு நாளும் உறவாடி, அவர் வார்த்தைகளைத் தியானித்து, அவரது ஒவ்வோர் அசைவுகளையும் உற்றுநோக்கி, இரசித்து, ருசித்துஇயேசு என் தலைவன்என அழைப்பவர் சிலர்இரண்டுமே நம்பிக்கையின் பரிணாமங்கள்தான்.

இயேசுவின் தலைமைப் பண்புகளை நாம் உள்வாங்கி, எப்படி நம் வாழ்க்கையில் இயேசுவின் ஆளுமைத் தன்மையைக்  கையாள  முடியும்? அதன் சவால்கள் என்னென்ன? தலைமைப் பண்பை எவ்வாறு வளர்த்துக்கொள்ள முடியும்? என்பனவற்றையே இந்தத் தொடரில் சிந்திக்க அழைக்கிறேன்

பிறர் மனங்களை மாற்றக்கூடிய காந்தத் தலைவன் நம் இயேசு! திருவிவிலியம்அப்பொழுது பெருந்திரளான மக்கள் அவரிடம் வந்தனர்’ (மத்தேயு 15:30) என்கிறதுஎன்னைப் பொறுத்த வரையில், மக்களை ஈர்க்கும் காந்த சக்தி தலைமைப் பண்புகளில் முதன்மையான ஒன்று. இயேசுவிடம் இருந்த காந்த சக்தி, பெருந்திரளான மக்களைக் கொண்டு வந்து சேர்த்தது. அலை அலையாய் மக்கள் திரண்டு வந்தார்கள். அவர் போகும் இடமெல்லாம் பின்தொடர்ந்தார்கள். பல நாள்கள் தொடர்ந்து அவரோடு தங்கி இருந்தார்கள். அவர் செயல்களைக் கண்டு ஆச்சரியப்பட்டார்கள்; வியப்பில் ஆழ்ந்தார்கள்!

இந்தக் காந்த சக்தியின் பின்புலம் என்ன? இயேசுவின் நடை, பாவனை, செயல், அணுகு முறையில் ஒரு ஜீவன் ஓர் உயிர் இருந்தது. அவர் இருப்பு, அவரைப் பார்க்க வந்தோரின் இருப்பிற்கு உத்தரவாதம் கொடுத்தது.

இயேசு என்னும் தலைவன் எனக்குள் இருக்கும் ஜீவன். பணியிடத்தில் என்னைப் பார்க்கிறவர்கள், என் இயேசுவைப் பார்க்கிறார்கள். என் வார்த்தையைக் கேட்கிறவர்கள், இயேசுவின் வார்த்தையைக் கேட்கிறார்கள். என் செயல்களைக் காண்கிறவர்கள், என் இயேசுவின் செயல்களைக் காண்கிறார்கள்என்ற  அசைக்க முடியா நம்பிக்கை!

இயேசுவின் ஈர்ப்புச் சக்தியின் அதிர்வலைகள் நம் பணியிடங்களில், குடும்பங்களில், பொது இடங்களில்  ஏற்படும் என்பது என் அனுபவம். பணியிடங்களில் நம் இருப்பு, நம் பணியாளர்களை ஈர்க்கும் வண்ணம் இருக்கிறதா? குடும்பத்தில் நம் இருப்பு, பெற்றோர்களிடம், பிள்ளைகளிடம், கணவன்-மனைவியிடம் ஓர் உயிர்ப்பைக் கொடுக்கிறதா? பொது இடங்களில் பிறரை நம் செயல்பாடுகள் ஆச்சரியத்துடன் பிறரைத் திரும்பிப் பார்க்க வைக்கிறதா?

நம்மில் பலர் நம் பணி அனுபவத்தில், பொது இடங்களில் பிறர் நம்மைப் பார்த்துச் சொல்லக் கேட்டிருக்கும்  கீழ்க்காணும் சில மாதிரிச் சொற்றொடர்கள்நம் இருப்பின் காந்த சக்தியை உறுதிப்படுத்தும்.

உங்க  பேச்சு, நீங்க நடத்துன விதம் பார்த்துதான் நான் உங்க நிறுவனத்தில  சேர்ந்தேன்.”

உங்களைப் பார்த்துப் பேசிட்டுப் போனாலே, மனசுக்கு ஒரு தெம்பு   வருது.”

உங்களைப் பார்த்தாலே எல்லாக் கோபமும் போயிடுது.”

எப்போதுமே எப்படி இவ்வளவு எனர்ஜியோடு இருக்கீங்க?”

இப்படி நாம் கேட்ட நம் நினைவுக்கு வரும் பல சொற்றொடர்கள் மக்களை ஈர்க்கும்  காந்த சக்தி கொண்ட தலைமைப் பண்புக்கு உதாரணங்கள். இந்தக்  காந்த சக்தியின் ஆழம், நீள, அகலங்களைத் தொடர்ந்து நம்மிலும் விசாலமாக்குவோம்காந்த ஈர்ப்புக்குப் பின் தானே மக்களின்  மனமாற்றம் நிகழும்!

மனநடத்தை மாற்றத்தை ஏற்படுத்தும் மேக்னெட்என்ற தலைமைப் பண்பு பற்றி அடுத்த இதழில் சிந்திக்கலாம்.

Comment