No icon

‘கொள்கை யுத்தம்’ செய்யும் போராளி!

அனைவருக்குமான நீதி என்பதே அரசமைப்புச் சட்டத்தின் சாராம்சம்என்றார் சட்ட மாமேதை அம்பேத்கர். இந்திய சனநாயகத்தில் இன்று அனைவருக்குமான நீதி என்பது பெரிதும் வியப்பூட்டும் சூழலாகிப் போனது. இங்கு கடந்த சில ஆண்டுகளாககொள்கை யுத்தம்நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இரண்டு குழுக்களுக்கிடையேயான யுத்தம் இது. பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்று மக்கள் சாதி, சமய, இன, வர்க்கப்படி நிலைகளில் பிரித்துக் கட்டமைக்கப்படுகின்றனர். இந்திய மண்ணில் சிறுபான்மையினரின் சமயச் சுதந் திரம் கொஞ்சம் கொஞ்சமாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. இச்சூழலில், இது பற்றிய தெளிந்த சிந்தனை, ஆழமான புரிதல், அறிவு சார்ந்த விழிப்புணர்வு ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டும்.

விடுதலை பெற்ற பிறகே இந்திய மக்கள் யாவரும் சம உரிமை பெற்ற மக்களாக மாறினர். ஆனால், இன்று மீண்டும் புதியதோர் அடிமைத்தனம் நோக்கி நாடு வழிநடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. ‘ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே தேர்தல்என்ற முழக்கம், ‘ஒரே இனம், ஒரே மதம்என்பதை நோக்கி நகர்த்துகிறது. இது பேராபத்தை விளைவிக்கும் சூழல். சாதியக் கட்டமைப்பை உறுதிப்படுத்துவது, பெண்ணடிமைத்தனத்தை நிலை நாட்டுவது, சிறுபான்மையினரின் சமய உரிமையை மறுப்பது, உயர் சாதியினரை அங்கீகரிப்பது எனப் பல்வேறு உள்நோக்கங்களைக் கொண்ட செயல்பாடுகள் திரைமறைவில் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன.

இத்தகைய சூழலில் நாமனைவரும் விழிப்படைய வேண்டும். பல நாடுகளில் உள்ள சமயச் சுதந்திரம் பற்றிய தெளிவான சிந்தனை கொண்டிருக்க வேண்டும், இந்திய அரசமைப்புச் சட்டம் தரும் உரிமைகள், சலுகைகள் பற்றி முழுமையாக அறிந்திருக்க வேண்டும் என்பது காலத்தின் கட்டாயமாகிறது.

சமய உரிமையையும், சுதந்திர நிலைப்பாட்டையும், சமத்துவம் காணப் பின்பற்றப்படும் சலுகைகளையும் ஓர் அரசு மாற்றத் துடிக்கிறது என்றால், ‘சமத்துவச் சகோதரத்துவத்திற்கானஎதிர்காலம் அங்கு கேள்விக்குறியே! ஆகவே, நாமனைவரும் அறிவுத் தெளிவு பெறுவதும், அது பற்றி விவாதிப்பதும், சமத்துவ விடுதலைக்கான கூறுகளைப் பிறரோடு பகிர்ந்து கொள்வதும், அதன் அடிப்படையில் பல்வேறுஒற்றுமைக் குழுக்களை’ (Unity Groups) ஏற்படுத்துவதும், அதன் நீட்சியாகப் பல்வேறு ஒற்றுமைக் குழுக்களோடு இணைந்து செயல்பட வேண்டியதும் அவசியமானதாகிறது.

இரண்டாம் வத்திக்கான் திரு அவை ஏடு வழிகாட்டுவதுபோல, நாம் உப்பாக, ஒளியாக, புளிப்பு மாவாக இருக்க வேண்டும். ஒவ்வொரு பணியாளரும் சமூகத்திற்குள் ஊடுருவிச் செல்ல வேண்டும். மாற்றம் காண சமூக ஆக்கப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். அத்தகைய எண்ணத்தில் தமிழ்நாட்டில் வலம் வரும் ஒரு சமூகப் போராளி வழக்குரைஞர் அருள்பணி. முனைவர் . கிறிஸ்து இராஜாமணி அவர்கள்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞராகப் பணியாற்றும் இவர், தனது சட்டப் புலமையால் மனித உரிமையைப் பாதுகாப்பதிலும், அது பற்றிய விழிப்புணர்வு தருவதிலும் சிறப்புற பங்காற்றி வருகிறார். ‘ஐக்கிய கிறிஸ்தவப் பேரவைஉள்பட பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளுக்குச் சட்ட ஆலோசகராகப் பணியாற்றி வரும் இவர், ‘குமரி சமூக விடியல் இயக்கம்என்ற அமைப்பின் வாயிலாக, சமூக ஒற்றுமையை உருவாக்கும் பணி, சமயங்களுக்குள்ளேயும், சமயங்களுக்கிடையேயும் நல்லுறவை ஏற்படுத்தும் பணி, போதைப்பொருள் அற்ற சமூகத்தை உருவாக்குதல், இயற்கையைப் பேணிப் பாதுகாத்தல், மாணாக்கர்களுக்குக் கல்வி வழிகாட்டும் பணி, துறை முகப் போராட்டப் பணி எனப் பல்வேறு பணிகளை முன்னெடுத்து வருகிறார்.

நாட்டைக் காப்போம்’, ‘ஒற்றுமை மேடைஎன்பது இவருடைய தற்போதைய முழக்கங்களாக இருக்கின்றன. ஆகவே, ‘இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம்என்ற அறைகூவலோடு அறிவு சார்ந்த களப் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். இக்கனவைச் சாத்தியமாக்கும் நோக்குடன் சாதி, சமய, இன, வேறுபாடுகளைக் களைந்துசமூக நல்லிணக்க முன்னணிஎன்ற தளத்தில் தமிழ்நாடு முழுவதும் ஒற்றுமைக் குழுக்களை அமைத்து வருகிறார். அத்தகைய குழுக்களுக்குநாம் இந்தியர்என்ற உணர்வையும், சமூகச் சுதந்திரம், சமயச் சுதந்திரம்நமது உரிமைஎன்பதையும் வலியுறுத்தி, இளையோருக்குப் பயிற்சிகள் மேற்கொண்டு வருகிறார்.

இத்தகைய களப் போராட்டப் பின்னணியில் கடந்த செப்டம்பர் 2023, புனே மற்றும் டில்லியில் நடைபெற்றசர்வதேசச் சமய உரிமைக் குழு’ (International Religions Freedom Group) கூட்டங்களுக்கு அழைக்கப்பட்டிருந்தார். அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிலிருந்து கலந்து கொண்ட பங்கேற்பாளர்களின் அறிமுகமும், கலந்துரையாடலும் இப்பணிகளில் இணைந்து பணியாற்ற இவருக்கு வாய்ப்பைத் தந்துள்ளது. அதன் நீட்சியாக, அமெரிக்காவின் வாசிங்டனில் நடைபெற்றINRF Sumit’ என்ற சமய உரிமை காக்கும் உலக அமைப்பின் மாநாட்டில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தார். 2024, சனவரி 30, 31 ஆகிய நாள்களில் நடைபெற்ற இம்மாநாட்டில், இந்தியா சார்பாகப் பங்கேற்ற நால்வரில் அருள்பணி. முனைவர் . கிறிஸ்து இராஜாமணியும் ஒருவர்.

இந்திய இறையாண்மையைக் காக்கவும், ‘வேற்றுமையில் ஒற்றுமைகாணும் இந்தியாவின் சமத்துவ, சகோதரத்துவ மாண்பு பேணப்படவும், அதற்கு வழிவகுக்கும்இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுகாக்கப்படவும் களமாடும் போராளி அருள்பணி. முனைவர் . கிறிஸ்து இராஜமணியின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.

- முதன்மை ஆசிரியர்

Comment