No icon

மழையால் மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் தவிப்பு!

மத மோதல்கள் மற்றும் வன்முறையிலிருந்து இன்னும் மீளாத மணிப்பூரில், கடந்த வாரத்தில் ஏற்பட்ட பலத்த காற்று மற்றும் ஆலங்கட்டி மழையுடன் கூடிய கனமழையால் பூர்வகுடிக் கிறிஸ்தவர்கள் பலர் தங்களின் வாழ்விடங்களை இழந்து தவித்து வருகின்றனர். சுராசந்த் பூரைச் சேர்ந்த கிறிஸ்தவ அமைப்பின் தலைவர் ஒருவர், ‘ஏற்கெனவே வன்முறையால் சிதைந்து போயுள்ள எங்களின் வாழ்வு, தற்போது பெய்துள்ள பெருமழையால்  மேலும் சிதைந்து போயுள்ளதுஎன்று கூறினார். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பெய்த கனமழையால், இம்மாநிலத்தின் மலைப்பாங்கான பகுதிகளில் 2,000க்கும் மேற்பட்ட மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் 26-ஆம் தேதி பெய்த கடும் ஆலங்கட்டி மழையால், பலர் தங்கள் கால்நடைகளையும், பயிர்களையும் இழந்துள்ளனர். சுராசந்த்பூரில் ஏறக்குறைய 100 வீடுகள், சேனாபதி மாவட்டத்தில் உள்ள லாய் கிராமத்தில் 328 வீடுகள் சேதமடைந்துள்ளன.

Comment