No icon

செப்டம்பர்   13

புனித யோவான் கிறிஸ்சோஸ்தம்

புனித யோவான் கிறிஸ்சோஸ்தம் அந்தியோக்கியாவில் 349 ஆம் ஆண்டு பிறந்தார். கிறிஸ்சோஸ்தம் என்றால் பொன்வாய் என்பது பொருள். கல்வியுடன் கிறிஸ்துவின் படிப்பினைகளையும் கற்றார். இறையியல் பயின்று, 2 ஆண்டுகளில் கடுந்தவம் ஒறுத்தல் வழியாக விவிலியம் படித்தார். விவிலிய பகுதிகளை மனப்பாடம் செய்து, வாழ்வில் பின்பற்றினார். 381 ஆம் ஆண்டு, திருத்தொண்டரானார். 386 ஆம் ஆண்டு குருவாக அருள்பொழிவு பெற்றார். 12 ஆண்டுகள் விவிலியம், அறநெறி சார்ந்த போதனைகளை அயராது நற்சான்றால் அறிவித்து, அனைவரின் நன்மதிப்பையும் பெற்றார். ஏழைகள் ஆன்மீகத்தில் வளர்ச்சி பெற கவனம் செலுத்தினார். 397 ஆம் ஆண்டு, கொன்ஸ்தாந்தினோபிள் பேராயரானார். எதிர்ப்புகள் எழுந்தபோது, இறைவனிடம் சரணடைந்தார். தாரூஸ் மலை அடிவாரத்தில் 3 ஆண்டுகள் தவம் மேற்கொண்டார். கடிதங்கள் வழி விசுவாசிகளை திடப்படுத்தினார். எல்லாவற்றிற்கும் இறைவன் வாழ்த்தப் பெறுவாராக என்றுகூறி, 407 ஆம் ஆண்டு, செப்டம்பர் 14 ஆம் நாள் இறந்தார்.

Comment