No icon

உலக சமூகத் தொடர்பு நாள் செய்தி

நாம் யாவரும் ஓருடலில் உறுப்புகளாய் இருக்கிறோம்

அன்பார்ந்த சகோதர சகோதரிகளே!
முதன் முதலாக, இணையம் அனைவருக்கும் கிடைக்கப் பெற்றதிலிருந்தே,  நபர்களுக்கிடையே சந்திப்பையும் தோழமை யையும் வளர்த்தெடுப்பதற்கு அது பயன்பட வேண்டும்; தொண்டாற்ற
வேண்டும் என்று திருஅவை எப்
பொழுதும் அறைகூவல் விடுத்துள் ளது.  இந்தச் செய்தியுடன், தற்காலத் சமூகத் தொடர்புகளுடைய சவால்கள் வரிசை கட்டி நிற்கிற பின்னணியில், மீண்டும் ஒருமுறை நாம் உறவோடு இருப்பதன் அடித்தளத்தையும் முக்கியத்துவத்தையும் குறித்துச் சிந்திக்கவும், தனிமையிலோ, தனிமைப்படுத்தப்பட்டோ உள்ளவர் களின் விருப்பத்தை மீண்டும் கண்டுபிடிக்கவும் உங்களை அன்புடன் அழைக்கிறேன். 
உருவகங்களான வலையும்
சமூகமும் 
இன்றைய ஊடகச் சூழலா னது நம் அன்றாட வாழ்வின் செய லெல்லையிலிருந்து (ளயீhநசந)
பிரித்து விட முடியாதபடி எங்கெங்
கும் ஊடுருவியுள்ளது. இணையம்
(சூநவ) என்பது நமது நேரத்தின்
ஆதாரமாக உள்ளது.  இதற்கு
முன்பு நான் நினைத்திராத வகையில், அறிவு மற்றும் உறவுகளின் மூலமாக உள்ளது. தொழில் நுட்பத்தின் அளப்பரிய மாற்றத்தின் பொருட்டு,  ஓர் உள்ளடக்கத்தை உற்பத்தி செய்து, பகிர்ந்து, பயன்படுத்தும் முறையை அது எளிதாக்கியுள்ள போதிலும்,  உலக அளவில் ஓர் ஆதாரப் பூர்வமான தகவலைத் தேடுவதையும் அதனைப் பகிர்வதையும் அச்சுறுத்துகிறவிதமாக உள்ள ஆபத்து களை எண்ணிறந்த நிபுணர்கள் அடிகோடிட்டுக் காட்டுகின்றனர்.  அறிவைப் பெறுவதற்கு அதிசிறந்த வாய்ப்பை இணையம் வழங்கியபோதும், உண்மைகளையும், தனி நபர்களுக்கிடையே உள்ள உறவுமுறைகளையும், தெரிந்தே குறிவைத்து, பெரும்பாலும் நற்பெயருக்குக் களங்கம் கற்பிக்கிற வகையில், பரப்பப்படுகிற வதந்திகளுக்கான களம் அது என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அது உண்மையும் கூட.
ஒருபுறம்,  சமூக வலையமைப்புகள் நாம் தொடர்பில் இருக்க, ஒருவர்க்கொருவர் உதவவும் மீண்டும் கண்டடையவும் நமக்கு உதவுகின்றன. இன்னொருபுறம், ஒரு தனிநபரின் அந்தரங்கத் தகவல்களை அரசியல் அல்லது பொருளாதார லாபங்களுக்காகக் குறிவைத்து, ஒரு தனிநபருடைய, அவனுடைய அல்லது அவளுடைய உரிமைகளை மதிக்காமல் சூழ்ச்சித்திறத்துடன் கையாள தம்மைத்தாமே அனுமதிக்கின்றன. இதனை நாம் கண்டுணர்வது  மிகவும் அவசியம்.  இளையோரில் நான்கில் ஒருவர் இந்த இணையவெளி அடாவடித்தனத்தில் (உலநெசரெடடலiபே) ஈடுபடுவதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.
இந்தப் பின்னணியில், இணையம் (ஐவேநசநேவ) என்பதற்கு அடிப்படையாக, அதன் நேர்மறையான ஆற்றலைப் மீண்டும் கண்டடைய உதவுகிற, வலை (சூநவ) என்ற உருவகத்தைப் பற்றி மீண்டும் சிந்திப்பது மிகவும் பயனுள்ளதாக அமைந்திடலாம். வலை என்று எடுத்துக்கொண்டால் அங்கே வரிகளின் நெருக்கத்தைப் பற்றியும், அங்கே மையம், மேலடுக்கு அமைப்புமுறை, செங்குத் தான அமைப்புமுறை ஆகியன இல்லாத நிலையில் அதன் வலிமையை உறுதிசெய்யும் பொருட்டு, பின்னல் முடிச்சுகளைப் பற்றியும் சிந்திக்க நம்மை அழைக்கிறது. ஒரு வலையின் உட்கூறுகள் அனைத்தும் தங்கள் பொறுப்புணர்வைப் பகிர்கின்ற காரணத்தால் வலையானது  மிக எளிதாகத் தன் வேலையைச் செய்கிறது. மானுடவியல் பார்வையில், வலை உருவகமானது இன்னோர் அர்த்தமிக்க உருவகத்தை, அதாவது சமூகத்தை,
(உடிஅஅரnவைல) முன்வைக்கிறது. சமூகமானது, ஒருங்கிணைந்து ஆதரவாக இருக்கும்போதும், நம்பிக்கை உணர்வுகளால் உயிர்த் துடிப்புள்ளதாக்கும்போதும், பொதுவான இலட்சியங்களை நோக்கி விடாப்பிடியாகத் தேடும்போதும் மேன்மேலும் வலிமையடைகிறது.  சமூகம் என்பது தோழமையால் இணைக்கப்பட்டுள்ளது. அதற்குப் பொறுப்புணர்வுமிக்க மொழியைப் பயன்படுத்தி பரஸ்பர செவிசாய்த் தலும் உரையாடலும் அவசியமாகும். 
இன்றையச் சூழலில்,  இணையச் சமூகங்கள் (நேவறடிசம உடிஅஅரnவைநைள) என்பது இயல்பாகவே சமூகத்தடன் இயைந்து போகாது என்பதை ஒவ்வொருவரும் பார்க்கவேண்டும். சில நல்லுதாரணங்களில்,  இந்த மாயச் சமூகங்கள் (எசைவரயட உடிஅஅரnவைநைள) ஒன்றிப்பையும் தோழமையையும் தெளிவுப்படுத்திக் காட்டினாலும், பலவீனமான பிணைப்பால் கட்டமைக்கப்பட்ட பொதுநலத்தின் அல்லது அக்கறைகளின் வழியாக, ஒருவர் மற்றவரை அங்கீகரிக்கிற, தனிநபர்கள் இணைந்த குழுக்களுக்குள் மட்டும் அவை பெரும்பாலும் மிக எளிதாக நிலைத்துவிடுகின்றன.
மேலாக, சமுக இணைய (ளடிஉயைட றநb) அடையாளமானது பெரும்பாலும் அந்தக் குழுவுக்கு வெளியே உள்ள நபரை, ஒருவர் மற்றவரை எதிர்ப்பதன் அடிப்படையிலும் அமைந்துவிடுகிறது.  நாம் நம்மை இணைப்பவை எவை என்று பார்ப்பதற்குப்பதிலாக. நம்மைப் பிரிப்பனவற்றைக் கொண்டு நம்மை நாம் வரையறுக்கிறோம்; சந்தேகத்தை வளர்த்தெடுக்கிறோம். அனைத்து விதமான தப்பெண்ணங்களையும் (இன, பாலின, சமய மற்றும் இன்னும் பிற) ஊதிவிடுகிறோம்.   இந்தப் போக்கானது,  பன்மைத்துவத்தை புறந்தள்ளுகிற, அதனையும் விட இந்த டிஜிட்டல் தொழில்நுட்பச் சூழலில்  கடிவாளமற்ற தனிநபர்நலனை (iனேiஎனைரயடளைஅ) ஊட்டி வளர்க்கிற குழுக்களை ஊக்கப்படுத்துகிறது.  சிலசமயங்களில் வெறுப்புச் சுருள்களைத் தூண்டிவிடுகிறது.  இவ்வகையில், இந்த உலகிற்கு எது சாளரமாக இருக்க வேண்டுமோ, அதுவே  தற்காதலை (யீநசளடியேட யேசஉளைளளைஅ) வெளிப்படுத்தும் ஒரு காட்சிப் பேழையாக மாறிவிடுகிறது. 
இணையம் என்பது ஒருவர் மற்றவரைச் சந்திப்பதை வளர்த்தெடுப்பதற்கான ஒரு நல் வாய்ப்பு. ஆனால் அதுவே, நம்மைச் சிக்கவைக்கும் (சிலந்தி) வலையைப் போல  நமது சுயத்தனிமையை (ளநடக-ளைடிடயவiடிn) அதிகரிக்கக் கூடும். இந்த மாயக் கவர்ச்சிக்கு அதிகம் பழக்கப்பட்டவர்கள், நம் இளைஞர்கள். இந்த சமூக வலையானது உறவுகள் அடிப்படையில் அவர்களை முழுவதுமாக திருப்திபடுத்தலாம்.  ஓர் அபாயகரமான சூழல் இங்கே இளைஞர்களுக்கு உள்ளது. அவர்கள் ‘சமூக வனவாசிகளாக’ (ளடிஉயைட hநசஅவைள) இந்தச் சமூகத்திலிருந்து  தங்களைத் தாங்களே முழுவதுமாக விலக்கிக் கொள்கிற அபாயம் இருக்கிறது. இந்த இக்கட்டானச் சூழலானது சமூகத்தின் உறவு இழையில் மிகக் கடுமையான உராய்வு உள்ளதை நமக்கு வெளிப்படுத்துகிறது. இதை நாம் கண்டுகொள்ளாமல் இருக்க இயலாது. 
இந்த பல்வடிவம் கொண்ட, அபாயகரமான எதார்த்தமானது, இன ரீதியாக, சமூக ரீதியாக, சட்ட ரீதியாக, அரசியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக பல்வேறு கேள்விகளை எழுப்பி, நம் திருஅவையைச் சவாலுக்குள்ளாக்குகிறது. அரசானது சட்டப் பூர்வமான இணையதளத்தை முறைப்படுத்தி, சுதந்திரமான, திறந்த, பாதுகாப்பான இணையதளப் பயன்பாட்டை பாதுகாக்கும்போது, நாம் அனைவரும் அதனை நேர்
மறையாகப் பயன்படுத்துவற்
கான பொறுப்புணர்வையும் வாய்ப்பையும் கொண்டிருக்கி றோம். தெளிவாக, பரஸ்பரப்
புரிந்துணர்வை அதிகரிக்கும்
பொருட்டு தொடர்புகளைப் பெருக்குவது மட்டும் போதாது.
நம்முடைய சமூக உணர்வு டைய அடையாளத்தையும் இந்த இணைய தள உலகில்
ஒருவர் மற்றவரிடம் கொண்டுள்ள பொறுப் புணர்வை அறிவதும் எப்படி? 
நாம் யாவரும் ஓருடலில் உறுப்புகள்
இந்த மூன்றாவது உருவகத் தின் வழியாக, அதாவது, ‘உடல் மற்றும் உறுப்புகள்’ என்கிற இந்த மூன்றாவது உருவகத்தின் வழியாக மேற்கண்ட கேள்விக்
குரிய பதிலைப் பெற முடியும். மக்களை ஒருங்கிணைக்கிற
இந்த கூட்டிணைவு அமைப்பு
முறையை அடிப்படையாகக் கொண்டு,  மக்களிடையே உள்ள பரஸ்பர உறவை விவரிக்கிறபோது  புனித பவுலடி
யார் இதனைப் பயன்படுத்து கிறார். ‘ஆகவே, பொய்யை
விலக்கி ஒருவரோடு ஒருவர் உண்மை பேசுங்கள். ஏனெனில், நாம் யாவரும் ஓருடலில் உறுப்புகளாய் இருக்கிறோம்’ (எபே 4:25). யாவரும் ஓருடலில்  உறுப்புகளாய் இருப்பதென்பது அளப்பரிய ஊக்கமாக அமைகிறது. இதன் மூலம்  திருத்தூதர் பவுல் பொய்யை விலக்கி, உண்மையைப் பேச நமக்கு அழைப்பு விடுக்கிறார். உண்மை
யைப் பாதுகாப்பதற்கான அந்தக் கடமை என்பது ஒன்றிப்பின் பரஸ்பர உறவை போலியாக்குவதன் தேவையிலிருந்து வரவில்லை.  உண்மை என்பது இந்த ஒன்றிப்பில் வெளிப்படுத்தப்படுகிறது.  மாறாக, பொய்கள், நாம் அனைவரும் ஓருடலின் உறுப்புகள் என்பதை அங்கீகரிக்காமல், சுயநலத்தோடு மறுப்பதால் விளைவதாகும். அவை நம்மையே பிறருக்கு தர மறுப்பவை. ஆகையால், இழப்பது ஒன்றுதான் நம்மையே கண்டடைவதற்கான வழியாகும்.
உடல் மற்றும் உறுப்புகள் என்ற இந்த உருவகம் என்பது ஒன்றிப்பு மற்றும் பிறர்நலம் (டிவாநசநேளளள) என்பதை அடிப்படையாகக் கொண்ட,  நமது அடையாளத்தைப் பற்றி
சிந்திக்க இட்டுச் செல்கிறது.  கிறிஸ்த வராக,  கிறிஸ்து தலையாக உள்ள உடலின் உறுப்புகளாக நம்மை நாமே
ஏற்றுக்கொள்கிறோம். இது பிறரை நமக்குப் போட்டியாளராக பார்க்காமலிருப்பதற்கு உதவுகிறது. நமக்கு எதிரிகளாக இருந்தால்கூட அவர்களை நபர்களாக கருத தூண்டுகிறது. நம்மை நாமே வரையறுப்பதற்கு ஓர் எதிரி நமக்கு ஒருபோதும் தேவைப்பட
மாட்டார்; ஏனெனில், கிறிஸ்துவிட மிருந்து நாம் கற்றுக்கொண்ட அனைத்தையும் உள்ளடக்கிய இந்தப் பார்வை, பிறர்நலத்தை  உறவு மற்றும் நெருக்கத்தின் நிலையை ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக,  இன்னொரு புதிய வழியில் கண்டடைய உதவுகிறது. 
இந்தப் புரிதல் மற்றும் மனிதரிடையே சமூகத் தொடர்புக்கான இந்தத் திறன்,  தெய்வீக நபர்களுக்கிடையே (னiஎiநே ஞநசளடிளே) உள்ள அன்புறவின் அடிப்படையிலானது. இறைவன் ஏகாந்தம் (தனிமை) அல்ல. மாறாக உறவின் ஒன்றிப்பு (ஊடிஅஅரniடிn) ஆவார். அவர் அன்பாயிருக்கிறார். ஆகையால் அவர் தொடர்புகொள்கிறார்.  ஏனெனில் அன்பு எப்பொழுதும் தொடர்புகொள்ளும். மற்றவர்
களைச் சந்திக்கும்பொருட்டு அன்பு தனக்குத்தானே தொடர்புக்கொள்ளும். நம்முடன் தொடர்பு கொள்ள, நமக்குத் தொடர்புக்கொள்ள இறைவன் நமது மொழியைத் தழுவுகிறார். வரலாறு முழுவதும் மானிடத்துடன் உண்மையான உரையாடலை நிறுவுகிறார் (இரண்டாம் வத்திகான் சங்கத்தின் இறை வெளிப்பாடு ஏடு. எண்.2).
ஒன்றிப்பு மற்றும் சுயத் தொடர்பாளராகவும் உள்ள அந்த இறைவனின் சாயலிலும் பாவனை யிலும் நாம் படைக்கப்பட்டிருக்கிறோம் என்ற தகுதியினால், நாம் உறவோடு வாழ்வதற்கான ஏக்கத்தையும், ஒரு சமூகத்தைச் சார்ந்து நிற்பதையும்  நம் இதயங்களில் எக்காலமும் சுமக்கிறோம்.  ‘ஒருவர் மற்றவருக்குத் தேவைப்படுவதால் மற்றவரோடு உறவில் வளருவது என்பது உண்மையில் நமது இயல்பாகிறது. இதில் ஒன்றும் வியப்பில்லை’ என்று புனித பேசில் குறிப்பிடுகிறார் (2).
இன்றையச் சூழல் நம் அனைவருக்கும் உறவில் முதலீடு செய்ய நமக்கு அழைப்பு விடுக்கிறது. நமது மானிடத்தின் சார்ந்திருக்கும் பண்பை உறுதிப்படுத்துவது, வலை அமைப்பை உள்ளடக்குவது. எல்லாவற்றிற்கும் மேலாக, கிறிஸ்தவர்களாகிய நாம் விசுவாசிகளாக-நம்பிக்கை 
யாளர்களாக நம்மை அடையாளத்தைக்  குறித்துக்
காட்டுகிற ஒன்றிப்பை வெளிப்படுத்த கிறிஸ்தவர் களாகிய நாம் அழைக்கப்பட்டுள்ளோம்.  விசுவாசம் என்பது - நம்பிக்கை என்பது - உண்மையில், ஓர் உறவுமுறை; ஒரு சந்திப்பு.  இறையன்பு என்னும் தூண்டுவிசையின் கீழ், நம்மால் தொடர்புக் கொள்ள முடியும். வரவேற்க முடியும். மற்றவர் ஒரு கொடை என்று புரிந்துகொண்டு அதற்குத் தக்க பதில் தர முடியும்.
மூவொரு இறைக்கொள்கையின் (கூசinவைல) உருவகத்தில் ஒன்றிப்பு என்பது குறிப்பாக தனிநபர் என்பதிலிருந்து ஒரு நபரை வேறுபடுத்திக் காட்டுகிறது.  மூவொரு இறைவனாக உள்ள இறைவனிடத்தில் உள்ள நம்பிக்கையிலிருந்து, நானாக இருப்பதற்காக, மற்றவர்கள் எனக்குத் தேவைப்படுகிறார்கள். நான் மற்றவர்களோடு உறவோடு இருந்தால் மட்டுமே, நான் உண்மை யிலே மனிதன். உண்மையிலே  தனிப்பட்டவன்.  ‘நபர்’ (யீநசளடிn) என்ற சொல்லானது மனிதனை ஒரு ‘முகமாக’ (கயஉந)  குறிப்பிடுகிறது. அந்த முகம், மற்றவர்களோடு தொடர்பில் இருக்கிற இன்னொருவனை நோக்கித் திரும்பி இருக்கிறது. நம்முடைய வாழ்வானது எந்த அளவுக்கு அதன் இயல்பில் தனிநபர் நலனைக் குறைத்து,  அதிகமாக பிறரைச் சார்ந்திருக்கிறதோ அப்போது மேலும் மனிதத்தன்மைக்குரியதாகிறது.  மனிதத் தன்மைக்குரியதாக மாறும் பாதை என்பது பிறரை ஓர் எதிரியாக பாவிக்கும் தனிநபர் நலனிருந்து, மற்றவரைத் தம்மோடு பயணிக்கும் சகத் தோழராக அடையாளம் காணும் ஒரு நபராக நகர்வது ஆகும்.
‘விருப்பம்’ என்பதிலிருந்து ‘ஆமென்’ என்பதற்கு உடல் மற்றும் அதன் உறுப்புகள் என்ற உவமையானது சமூக வலை தளத்தைப் பயன் படுத்துவதை நமக்கு நினைவுப்படுத்துகிறது. இது மற்றவர்களுடைய  உடல், இதயம், கண்கள், பார்வை, சுவாசம் ஆகியவற்றின் வழியாக சதையை எதிர்கொள்வதற்கு ஈடானது.  இணையம் என்பது இந்தச் சந்திப்பிற்கான விரிவாக்கம் அல்லது எதிர்பார்ப்பு என்று பயன்படுத்தும்போது, இந்த இணையதளம் என்பது நம்மை மறுதலிக்கவில்லை. மாறாக  உறவு ஒன்றிப்பிற்கான ஆதாரமாக நீடிக்கிறது. ஒரு குடும்பமானது  சாப்பிடும்போது சந்தித்து ஒருவர் மற்றவர்களுடைய கண்களைப் பார்க்கும் வரை இன்னும் தொடர்பில் இருக்க இணையத்தைப் பயன்படுத்தினால், அது ஒரு வளமாக அமைகிறது.  ஒரு திருஅவைச் சமூகமானது (பங்கானது) அதனுடைய செயல்பாடுகளை இணையத்தின்
வழியாக ஒருங்கிணைத்து, பிறகு திருப்பலியை அனைவரும் இணைந்து ஒப்புக்கொடுத்தால் அது  ஒரு வளமாக அமைகிறது. இணையம் என்பது அழகின் அனுபவங்களையும் அதன் கதைகளையும் நம்மிலிருந்து வெகு தூரத்தில் அனுபவிக்கிற துன்பத்தையும் பகிர்ந்து,
நாம் இணைந்து மன்றாடுவதற்காகவும், நம்மை ஒருங்கிணைக்கிற வகையில் இணைந்தே நன்மை
யைத் தேடவும் ஒரு வாய்ப்பாக இணையம் இருந்தால் அது ஒரு வளமாக அமைகிறது. 
இவ்வாறு, நாம், நோய் நாடலிலிருந்து சிகிச்சைக்கு நகர முடியும். உரையாடலுக்கான, சந்திப்பிற்
கான, புன்னகைக்கான, கனிவை வெளிபடுத்துவதற் கான வழியைத் திறக்க முடியும். இந்த வலை யமைப்பையே நாம் விரும்புகிறோம். பொறிவைத்து சிறைப்பிடிப்பதற்கான வலையமைப்பு அல்ல.. மாறாக. விடுதலை செய்வதற்கானது; முழுமனச் சுதந்திரத்துடன் மக்களுடைய ஒன்றிப் பைப் பாதுகாப்பதற்கானது.  திருஅவை தாமே,  திருப்பலி ஒன்றிப்பின் வழியாக நெய்யப்பட்ட வலையமைப்பு ஆகும். இங்கே, ஒற்றுமை என்பது ‘விருப்பங்களின்’ அடிப்படையில் அல்ல; மாறாக, ‘ஆமென்’ அடிப்படையிலானது;  உண்மையின்
அடிப்படையிலானது. இதன் மூலம் ஒவ்வொரு வரும் கிறிஸ்துவின் திருவுடலோடு பிணைக்கப்பட்டிருக் கிறார்கள்; மற்றவர்களை வரவேற்கிறார்கள்.
(தமிழாக்கம்: குடந்தை ஞானி)

Comment