No icon

தேர்தல் பரப்புரை எதிரொலி

வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்தியாவின் அடித்தளத்தைப் பா... சிதைக்கப் பார்க்கிறது. அரசியல் இலாபங்களுக்காக நாட்டின் அமைதியைக் குலைக்கப் பார்க்கிறது. தமிழ்நாடு சமூக நல்லிணக்கத்தைக் காக்கும் மண். இங்கு மதவெறி அரசியல் எனும் நெருப்பு மூட்டிக் குளிர்காய நினைக்கும் பா...வுக்கு எதிரான மனநிலையே உள்ளது. நாட்டை மீண்டும் மதநல்லிணக்க அரசியலுக்கான நிலமாக மாற்றும் முயற்சியைஇந்தியாகூட்டணி தொடங்கியுள்ளது.”

- திரு. மு.. ஸ்டாலின், தமிழக முதல்வர்

“2024 மக்களவைத் தேர்தல் என்பது இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையேயான போட்டியாகும். அதாவது, இந்தியாவை எப்போதும் ஒன்றிணைக்க விரும்பும் காங்கிரசுக்கும், மக்களைப் பிளவுபடுத்த முயல்பவர்களுக்கும் இடையேயான போட்டி.”

- திரு. இராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர்

மத்தியில் பா... ஆட்சியில் நீடித்தால், அம்பேத்கர் கொண்டு வந்த அரசியல் சாசனத்தையே மாற்றிவிடுவர் என்று சமாஜ்வாதி கட்சி மட்டுமின்றி, நாட்டு மக்களும் அச்சமடைந்துள்ளனர்.”

- திரு. அகிலேஷ் யாதவ், சமாஜ்வாதி கட்சித் தலைவர்

இந்தத் தேர்தல் அகில இந்திய அளவில் பெரும் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. கடந்த பத்து ஆண்டுகளாக மத்திய பா... ஆட்சியில் நாடு மிகப் பெரிய ஆபத்தை எதிர்கொண்டது. நாட்டின் அரசியலமைப்புச் சட்டம், மதச்சார்பின்மை, மக்கள் நலக்கொள்கை உள்ளிட்ட அனைத்தும் கேள்விக்குறியாகின. இந்தியாவின் ஒன்றுபட்ட வளர்ச்சிக்காகவும், மக்கள் நலன்களுக்காகவும் நாம் பாடுபட வேண்டுமென்றால், பா...வையும், மோடியையும் அதிகாரத்திலிருந்து அகற்ற வேண்டும்.”

- திரு. டி. இராஜா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்

மோடியின் சாலைப் பேரணி மக்களின் மனத்தில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. தமிழ்நாடு மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டபோது வராத பிரதமர் மோடி, வாக்குகளுக்காக நடத்தும் சாலைப் பேரணிகள் மக்களிடம் எடுபடாது. அவர் எத்தனை முறை வந்தாலும் சரி, தேர்தலுக்காக அவர் அணியும் வேஷத்தை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள்.”

- திருமதி. தமிழச்சி தங்கபாண்டியன், தென் சென்னை தொகுதி தி.மு.. வேட்பாளர்

வெள்ள நிவாரண நிதியாக ரூ. 37 ஆயிரம் கோடி கேட்டதில் இதுவரை ஒரு ரூபாய்கூட பிரதமர் வழங்கவில்லை. 2024-25-ஆம் ஆண்டு இடைக்கால பட்ஜெட்டின் மொத்த நிதி ஒதுக்கீட்டில் உத்திரப் பிரதேசத்துக்கு 18%, தமிழ்நாட்டுக்கு 4% என நிதி ஒதுக்கீடு செய்ததன் மூலம் அந்த மாநிலத்துக்கு ஒரு நீதி, தென் மாநிலங்களுக்கு ஒரு நீதி என்ற வகையில் பா... அரசின் வஞ்சிக்கும் அணுகுமுறையைத் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம். எனவே, தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை பிரதமர் மோடி வந்தாலும், ஒரு தொகுதியில் கூட வெற்றிபெற முடியாத வகையில் உரிய பாடத்தை வாக்காளர்கள் புகட்டுவர்.”

- திரு. செல்வப்பெருந்தகை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்

பா...வை எதிர்ப்பவர்களை வருமான வரித்துறை, அமலாக்கத் துறை மூலம் மத்திய அரசு கைது செய்து வருகிறது. அந்த வகையில் பா...வை எதிர்ப்பதால் சிதம்பரத்தில் நான் தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை சோதனை என்ற பெயரில் மத்திய அரசு என்னை மிரட்டப் பார்க்கிறது.”

- திரு. தொல். திருமாவளவன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர்

தி.மு..வின் வெற்றி மோடியைச் சார்ந்ததுதான்! மோடியால் தி.மு..வின் பக்கம் தள்ளிவிடப்பட்ட இஸ்லாமிய-கிறிஸ்தவச் சமூகங்கள்தான் தி.மு..வின் உண்மையான பெரிய கூட்டணி! வெற்றி குறித்து தி.மு.. நம்பிக்கைகொள்ள முடிவதற்குக் காரணமே, கட்டாயக் கூட்டணியான சிறுபான்மையினர் வாக்கு வங்கிதான்!”   

- திரு. பழ. கருப்பையா

கடந்த பத்து ஆண்டுகள் பா... ஆட்சியில் மக்கள் சந்தித்தத் துயரங்களை நீக்கவேஇந்தியாகூட்டணி அமைக்கப்பட்டுள்ளது. மணிப்பூர் கலவரத்தை மத்திய அரசு சிறப்பாகக் கையாண்டதாகக் கூறுகின்றனர். ஆனால், அங்குப் பிரதமர் செல்லவே இல்லை. விவசாயிகளுக்கு வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என உறுதியளித்து விட்டு, வேளாண் திருத்தச் சட்டத்தைக் கொண்டு வந்து, அவர்களைப் போராடும் நிலைக்குப் பிரதமர் தள்ளிவிட்டார்.”

- திருமதி. பவ்யா நரசிம்ம மூர்த்தி, தமிழக காங்கிரஸ் தகவல் தொடர்பு ஒருங்கிணைப்பாளர்

Comment