No icon

குடந்தை ஞானி

தேசிய அளவில் புனித தேவசகாயம் - சிறப்பு ஜெப வழிபாடு

இந்தியாவில் உள்ள உரோமை கத்தோலிக்க திரு அவையானது, புனித தேவசகாயம் அவர்களுக்கு வணக்கம் செலுத்தவும், அனைத்து குடும்பங்களையும் இயேசுவின் திருஇருதயத்திற்கு ஒப்புகொடுக்கவும், 2022, ஜூன் 24 ஆம் தேதி, வெள்ளிக்கிழமை அன்று ஆண்டவர் இயேசுவின் திருஇருதய பெருவிழா நாளிலே, இரவு 8.30 மணி முதல் இரவு 9.30 மணி வரை, நாடு முழுவதும் ஒரு மணி நேரம் நன்றி வழிபாட்டை நடத்தவிருக்கிறது.

இந்த நன்றி வழிபாடு, தமிழ்நாட்டின் கோட்டார் மறைமாவட்ட பேராலயத்தில் உள்ள புனித தேவசகாயம் அவர்களின் கல்லறையில் நடைபெறும். நற்கருணை ஆராதனையுடன் கூடிய ஒரு சிறப்பு ஜெப வழிபாடானது மாதா டிவி, DEVA TV, ஷாலோம் டிவி, குட்னஸ் டிவி, திவ்யவாணி டிவி, ஆத்மதர்ஷன் டிவி, இஷ்வானி டிவி, சிசிஆர் டிவி மற்றும் பிரார்த்தனா பவன் டிவி போன்ற கத்தோலிக்க தொலைக்காட்சி அலைவரிசையிலும், முன்னணி கத்தோலிக்க யூடியூப் சேனல்கள் வழியாகவும் ஒளிபரப்பப்படும்.

CCBI-யின் துணைத் தலைவரும், சென்னை-மயிலை உயர்மறைமாவட்டத்தின் பேராயருமான மேதகு ஜார்ஜ் அந்தோணிசாமி இந்த நன்றி வழிபாட்டை தொடங்கி வைப்பார். CCBI-யின் பொதுச் செயலாளரும், டெல்லி உயர்மறைமாவட்டத்தின் பேராயருமான மேதகு அனில் கூட்டோ அவர்களோடு, கோட்டார் ஆயர் நசரேன் சூசை மற்றும் அருள்சகோதரி அன்னி குட்டிக்கடு, SMI திருப்பாடல்களை வாசிப்பார்கள். நற்செய்திக்குப் பிறகு, மும்பை உயர்மறைமாவட்டத்தின் பேராயரான கர்தினால் ஓஸ்வால்ட் கிரேசியாஸ் மறையுரை ஆற்றுவார். தொடர்ந்து பல்வேறு மொழிகளில் மன்றாட்டுகள் இடம்பெறும். திருவனந்தபுரத்தின் பேராயர் மேதகு தாமஸ் ஜே.நெட்டோ புனித தேவசகாய ஜெபத்தை ஜெபிக்க, பாடல் குழுவானது புனித தேவசகாய மன்றாட்டு மாலையை பாடி ஜெபிப்பார்கள். கர்தினாலாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் CCBI-யின் தலைவரும், கோவா மற்றும் டாமன் உயர்மறைமாவட்டத்தின் பேராயருமான பிலிப் நேரி ஃபெராவோ, இயேசுவின் திருஇருதயத்திற்கு அனைத்து குடும்பங்களையும் ஒப்புக் கொடுப்பார்.

குழித்துறை மறைமாவட்ட அப்போஸ்தலிக்க நிர்வாகி  பேராயர் அந்தோணி பாப்புசாமி, இறுதி ஜெபத்தை சொல்ல, இந்தியாவிற்கான திருத்தந்தையின் திருத்தூதுவர் லியோபோல்டோ ஜிர்ரெல்லி, நற்கருணை ஆசீர்வாதத்தை வழங்குவார். அனைவரும் பங்கு பெற்று ஆசீர் பெற வேண்டுகிறோம்.

Comment