No icon

மருத்துவம் பேசுகிறது!

சிறுநீரகக் கல்லைக் கரைக்க வாழைத்தண்டு மோர்

 

 

சிறுநீரகக் கல்லைக் கரைக்க வாழைத்தண்டு மோர்

தேவையானவை: வாழைத்தண்டுச்சாறு 1 டம்ளர், மோர் - கால் டம்ளர். வெள்ளரி விதைப்பொடி 1 டீஸ்பூன், இந்துப்பு தேவையான அளவு.

செய்முறை: வாழைத்தண்டுச் சாற்றுடன் மோரைக் கலந்து, வெள்ளரி விதைப்பொடி மற்றும் இந்துப்பு கலந்து வெறும் வயிற்றில் அருந்தவேண்டும்.

குறிப்பு: சிறுநீரகக் கற்கள் இருப்பவர்கள் தினம் சாப்பிடலாம். மற்றவர்கள் வாரம் 3 முறை அருந்துவது போதும்.

பயன்கள்: சிறு நீரகம் சுத்தப்படும்

  • இதைத் தொடர்ந்து, பருகினால், ஐந்து மி.மீ.க்கும் குறைவாக உள்ள சிறுநீரகக் கற்களைச் சுவைத்து வெளியேற்றும்.
  • நார்ச்சத்து, நீர்ச்சத்து, இருப்பதால் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
  • பித்தப் பையில் உள்ள கற்களைக் கரைக்க இது உதவும்.
  • ஊட்டச் சத்துக்களை கிரகிக்கும்போது உருவாகும் யூரியா உள்ளிட்ட நச்சுகள் வெளியேறும்.
  • வாழைத்தண்டு, முள்ளங்கி, முள்ளங்கி இலை, வெள்ளரிக்காய், நீர் மோர் போன்றவை சிறுநீரகத்தை ஆரோக்கியப்படுத்தும் உணவுகள்.உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது.

ஆரோக்கிய வாழ்வுக்கு 

  • தாகம் எடுக்கும்போது கண்டிப்பாக தண்ணீர் குடிக்க வேண்டும்.
  • கீரை, பச்சை காய்கறி, பழங்களை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.
  • ஆவியில் வேக வைத்த உணவு, நார்ச்சத்து நிறைந்த உணவு ஆகியவை ரத்தக் கொதிப்பு வராமல் காப்பாற்றும்.
  • பனை வெல்லம், பனங்கற்கண்டு சேர்த்துக் கொண்டால் நீரிழிவு வருவதைத் தடுக்கலாம். வெள்ளைச் சர்க்கரையைத் தவிர்க்கவும்.
  • மிளகாய்க்கு பதில், மிளகு உபயோகித்தால் அல்சர் வருவதைத் தடுக்கலாம்.
  • ரீபைன்ட் எண்ணெயைத் தவிர்ப்பது இதயத்துக்கு நல்லது. செக்கு எண்ணெய் சேர்த்துக் கொள்ளவும்.
  • உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி மற்றும் தியானம் செய்தால், நோய்கள் அண்டாது. மருத்துவச் செலவும் இருக்காது.

(ஆதாரம்: நன்றியுடன் அங்குராசு)

Comment