No icon

மியான்மார்

மனிதாபிமான உதவிகளுக்கான தடைகள் அகற்றப்பட

மியான்மார் நாட்டில் ஆட்சிக் கவிழ்ப்புக்குப்பின் இடம்பெறும் மனிதகுல நெருக்கடியால் 30 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு, வாழ்வை காக்கும் அடிப்படை உதவிகள் தேவைப்படுவதாக ஐ.நா. நிறுவனம் அறிவித்துள்ளது.

வன்முறைகள் அதிகரித்துவருவதால் மக்களின் வாழ்வு நிலை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக உரைத்த ஐ.நா. உதவி அமைப்பின் தலைவர் Martin Griffiths அவர்கள், அண்மையில் புதிதாக 37,000 பேர் புலம்பெயர்ந்தவர்களாக மாறியுள்ளதாகவும், கோவில்கள் உட்பட 160க்கும் மேற்பட்ட கட்டடங்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாகவும் கவலையை வெளியிட்டார்.

மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுவோர் தாக்கப்படுவது அனைத்துலகச் சட்டங்கள் வழி தடைச்செய்யப்பட்டுள்ள போதிலும், மியான்மாரில் இந்த குற்றம் தொடர்வதாகவும், 2 இலட்சத்து 23 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், நாட்டிற்குள்ளேயே புலம்பெயர்ந்தவர்களாக வாழ்வதாகவும் Griffiths தெரிவித்தார்.

மனிதாபிமான உதவிகள் அனைவரையும் சென்றடைய, மியான்மார் இராணுவம், கட்டுப்பாடுகளை அகற்றவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் ஐ.நா. உதவி அமைப்பின் தலைவர் Martin Griffiths முன்வைத்துள்ளார். 

Comment