No icon

செப்டம்பர்  7

புனித ரெஜினா

புனித ரெஜினா பிரான்ஸ் நாட்டில் 3 ஆம் நூற்றாண்டில், கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளாதவரின் மகளாக பிறந்தார். பிறந்தவுடன் தாயை இழந்ததால், ரெஜினா ஒரு கிறிஸ்தவ பெண்ணால் வளர்க்கப்பட்டார். அங்கு கிறிஸ்தவத்தின் மறையுண்மைகளையும், போதனைகளையும் கற்று, கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டார். திருமுழுக்கு பெற்று, தனது கன்னிமையை இறைவனுக்கு அர்ப்பணித்தார். ரெஜினா கிறிஸ்துவை பின்பற்றியதால் தனது தந்தையால் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டார். ரெஜினா கிறிஸ்தவர் என்பதால், ஆளுநன் சிறையில் அடைத்து, துன்புறுத்தி, கிறிஸ்துவை மறுதலிக்க கூறினான். ஒருமுறை அவர்முன் சிலுவை தோன்றியது. அதன்முன் புறா ஒன்று பறந்துகொண்டு, ரெஜினா விண்ணகம் திறந்திருக்கிறது, மகிமையின் கிரீடம் உனக்காக காத்திருக்கிறது என்றார். கிறிஸ்தவ நம்பிக்கைக்கு சான்று பகர்ந்த ரெஜினாவின் வாழ்வு, பலர் கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொள்ள தூண்டியது.

Comment