No icon

பள்ளிப்பாடத்தில் புனித குரியாகோஸ் இடம்பெற திருஅவை விருப்பம்

பள்ளிப் பாடங்களை மறு ஆய்வு செய்து  கொண்டிருக்கும் கேரள அரசு, புனித குரியாகோஸின் பாடத்தை நீக்குவதற்கான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றும், மாணவர்கள் புனிதரின் உண்மையான வரலாற்றை அறிந்து கொள்ள, பாடத்திட்டதில் அது கட்டாயம் இடம்பெற வேண்டும் என்றும் கேரள அரசை அருள்தந்தை ஜேக்கப் பாலக்கப்பள்ளி வலியுறுத்தியுள்ளார்.

10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் புனிதர் பற்றிய மிகக் குறைவான செய்திகளே இடம்பெற்றிருப்பதால் அதனைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கக் கூறிய கேரள அரசிடம், சமூக சீர்திருத்தவாதியும், கல்வியாளரும் கவிஞருமான புனிதர் குரியாகோஸ் பற்றிய பாடத்திட்டத்திட்டம் புறக்கணிக்கப்படுவது திட்டமிட்ட முயற்சி என்றும் இது கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் கேரள ஆயர்கள் பேரவையின் செய்தித் தொடர்பாளர் அருள்தந்தை பாலக்கப்பள்ளி  ஜுலை 12ம் தேதி uca  செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார்.

வசதியானவர்களுக்கு மட்டுமே கல்வி  என்றிருந்த நிலையில் கேரளாவின் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் பள்ளிகள் திறக்கப்பட உத்தரவிட்டு, இலவச மதியஉணவு, சீருடை, புத்தகம் வழங்கி அனைவருக்கும் கல்வி என்ற நிலையை உருவாக்கி, சாதி வேறுபாடின்றி இலட்சக் கணக்கான மக்கள் கல்வி அறிவு பெறக் காரணமான புனித குரியாகோஸின் பாடம் பாடப்புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்று  இரிஞ்சாலக்குடா ஆயர் பவுலி கண்ணூக்காடன் அவர்களும் தெரிவித்துள்ளார்.

1805 ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்த புனிதர் குரியாகோஸ், சாதி, பாகுபாடு, மூட நம்பிக்கை என்னும் சமூக நோய்களை  ஒழிக்க  தனது வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் என்பதும், Carmelites of Mary Immaculate (CMI)    என்னும் ஆண் பெண் துறவற சபைகளைத் தோற்றுவித்தவர் என்பதும்  குறிப்பிடத்தக்கது.

Comment