No icon

திருத்தந்தையின் மறைக்கல்வியுரை

நற்செய்தி அறிவித்தல் பணி

மார்ச் 8, புதன்கிழமையன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் திருப்பயணிகள் அமர்ந்திருக்க, முதலில், 1 கொரி 15 : 1-3 வாசிக்கப்பட்ட பிறகுநற்செய்தி அறிவித்தல் என்பது திரு அவையின் பணிஎன்ற தலைப்பில் மறைக்கல்வி உரையாற்றினார்.

அன்பு சகோதரர் சகோதரிகளே, அப்போஸ்தலிக்க பற்றார்வம் குறித்த நம் மறைக்கல்வித் தொடரில் இன்று நற்செய்தி அறிவித்தலின் சமயக்கூறு குறித்து நோக்குவோம்.

நற்செய்தி அறிவித்தல் என்பது, தனியாக இதற்கென்றே ஒதுக்கி வைக்கப்பட்ட ஒரு சிலரின் பணியன்று; மாறாக, திரு அவையின் அப்போஸ்தலிக்க விசுவாசத்திற்கான ஓர் ஒன்றிணைந்த பணியாகும். மற்றும், அதன் முழுமை நிலையில் ஒவ்வொரு தலைமுறை தலைமுறை வழியாக கடத்திச் செல்லப்பட வேண்டிய ஒன்றாகும். திரு அவையின் இக்கூறிலிருந்து நற்செய்தி அறிவித்தலுக்கான பேரார்வத்தை, அல்லது பற்றார்வத்தை நாம் பிரித்துப் பார்க்க முடியாது. இந்தப் பற்றார்வமே, கிறிஸ்தவ செய்தி உருத்திரிபு செய்யப்படாமல் காக்கப்படவும், உலகாயுத ஆசைகளை அதற்குள் கொணரவும் சிந்திக்கவும் இடம்கொடாமல் காக்கிறது. திரு அவையின் மறைப்பணி நடவடிக்கைகள் குறித்த இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் கருத்தானது, அனைத்து நற்செய்தி அறிவிப்புப் பணிகளும் தந்தையாம் இறைவனின் அளவிட முடியாத அன்பில் தன் ஆதாரத்தைக் கொண்டதாகவும், இறைமகன் மற்றும் தூய ஆவியின் மறைப்பணிகளால் இவ்வுலகில் ஊற்றப்பட்டதாகவும் எடுத்துரைத்து, இந்தப் பணியானது உலகின் கடை எல்லைவரைக்கும் எடுத்துச் செல்லப்பட வேண்டிய ஒன்று என்பதை விளக்குகிறது. திருமுழுக்குப் பெற்ற அனைவரும் மறைப்பணிச் சீடர்களாக, கிறிஸ்துவின், தன்னையே தியாகம் செய்யும் அன்பைப் பின்பற்றி அவரின் வார்த்தையின் ஒப்புரவு வல்லமைக்கும், உண்மைக்கும், நம்பத்தகும் சான்றுகளாக, தனிமனிதர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து மனித குல குடும்பத்திற்கும் விளங்க வேண்டும் என அழைப்புப் பெறுகிறார்கள்.

இவ்வாறு, தன் புதன் பொது மறைக்கல்வியுரையை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ்  மகளிர் தின வாழ்த்துகளைச் சிறப்பாக தெரிவித்து  அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Comment