No icon

​​​​​​​முனைவர் திருமதி சௌ. ஜான்சிராணி, தமிழ்த்துறைப் பேராசிரியை

பல்திறன் வளர்க்கும் ஜெ. அ. மகளிர் கல்லூரி

ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் தன்னாட்சிக் கல்லூரியானது, மாணவர்களுக்குக் கல்வியைக் கொடுப்பதோடு நில்லாமல், வாழ்க்கைக்குத் தேவையான கல்வி சார்ந்த பல்வேறு திறன்களையும் கற்றுக் கொடுக்கின்றது. சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளைக் கண்டு தயங்காமல் எதிர்கொள்ளும் ஆற்றலையும் அவர்களுக்கு வழங்குகிறது. நாட்டு நலப்பணித் திட்டம், தேசிய மாணவர் படை, கல்லூரி விரிவாக்கத் திட்டம் ஆகியவை வழி ஆளுமையை வளர்த்தெடுத்து வருகிறது.

இளையோரை வளர்க்கும் நாட்டு நலப்பணித் திட்டம்

ஜெ. . மகளிர் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டமானது சமுதாய சேவையினை மையமாகக் கொண்டு, 1976 இல், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் ஐம்பத்தி ஐந்தாம் பிரிவின் கீழ் நிறுவப்பட்டது. அன்னை தெரசா மகளிர் பல்கலைக் கழகத்தின் உறுப்புக் கல்லூரியாக இணைக்கப்பட்ட பின், 7 அணிகளாக மேம்படுத்தப்பட்டு, இன்று ஒவ்வொரு அணியும் 100 மாணவியர், ஒரு திட்ட அலுவலர் மற்றும் ஓர் ஆசிரிய ஆலோசகரையும் கொண்டுள்ளது.

நாட்டு நலப்பணித் திட்டத்தின் முக்கிய நோக்கமானஎனக்காக அல்ல உனக்காகஎன்ற தாரக மந்திரத்திற்கு ஏற்ப சமூக அக்கறையும், சமூகத்தின் மீதான பொறுப்பும் ஒவ்வொரு மாணவியருக்கும் வாழ்வில் கற்றுக் கொடுக்கப்படுகிறது. கிராமப்புற மக்களுக்குத் தேவையான விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்துவதோடு, சிறப்பு முகாம்கள், இரத்ததான முகாம், கால்நடைகளுக்கான சிறப்பு முகாம், மருத்துவ முகாம், சுற்றுச் சூழல் குறித்த விழிப்புணர்வு முகாம், இலவச சட்ட ஆலோசனை முகாம் ஆகியவற்றுடன் அரசு நலத்திட்டங்களை மக்கள் பெறுவதற்கான சிறப்பு முகாம்களும் நடத்தப்படுகிறது.

மேலும், இயற்கை பேரிடர் காலங்களில் நிர்வாகத்துடன் இணைந்து பணம் மற்றும் பொருளுதவி வழங்குதல் போன்றவற்றின் வழியாகவும் வாழ்க்கை அனுபவத்தை கற்றுக் கொடுக்கிறது. நாட்டு நலப் பணித்திட்ட சிறப்பு முகாமில் கல்வி மேம்பாடு, பெண்களுக்கான சுய தொழில் ஊக்குவித்தல், இயற்கைப் பாதுகாப்பு, மரக்கன்று நடுதல், குடும்ப நல ஆலோசனைகள், இயற்கை மருத்துவம் சொல்லிக் கொடுப்பதுடன், கால்நடை மருத்துவ முகாம், இரத்ததானம், போதைப் பொருள் தடுப்பு, சிறு சேமிப்பு, மழைநீர் சேகரிப்பு, கண் பரிசோதனை, நுகர்வோர் பாதுகாப்பு, தோல் நோய், உயிர்க் கொல்லி நோய் (HIV) விழிப்புணர்வு, திடக்கழிவு மேலாண்மை, நெகிழி பயன்பாடு தவிர்த்தல், காசநோய் மற்றும் போலியோ தடுப்பு போன்ற விழிப்புணர்வு முகாம்களை வடுகபட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, தாமரைக்

குளம், எண்டப்புளி, செம்மண்குழி, அழகர் சாமிபுரம், கள்ளிப்பட்டி, லட்சுமிபுரம், அம்மாபுரம், கிருஷ்ணாபுரம், . புதுக்கோட்டை போன்ற ஊர்களில் மாணவர்களுக்கும், அங்குள்ள மக்களுக்கும் நடத்தப்படுகின்றன.

இக்கல்லூரியின் சீரிய பணிகளுக்காக 1990-91 ஆம் ஆண்டில் சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர்களுக்கான மாநில விருது கிடைத்துள்ளது. 1997-98 ஆம் ஆண்டிற்கான பல்கலைக்கழக சிறந்த நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் விருதினை கணிதத்துறை பேராசிரியை அருள்சகோதரி முனைவர் பி. ஹெலன் சந்திரா அவர்களும், 2002-2003 ஆம் ஆண்டிற்கான இதே விருதினை தமிழ்த் துறை பேராசிரியை முனைவர். . மல்லிகா அவர்களும் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலிருந்து பெற்றுள்ளனர். 2018-19 இல் UBA நடவடிக்கைகளுக்கான மத்திய அரசு விருதை இக்கல்லூரி பெற்றது.

நாட்டுப் பற்றினை வளர்க்கும் தேசிய மாணவர் படை

தேசிய மாணவர் படையின் குறிக்கோள், ஒழுக்கமும், ஒற்றுமையுமாகும். இதன் முக்கியப் பணி இளைஞர்கள் ஆயுதப் படைகளில் ஈடுபடுவதற்கான சூழ்நிலையை உருவாக்குவதும், மையப்படுத்தப்பட்ட பயிற்சி மற்றும் பயிற்சி நிகழ்ச்சித் திட்டங்களை நடத்துவதாகும். தேசிய மாணவர் படையானது இக்கல்லூரியில் 1973 ஆம் ஆண்டு நிறுவப் பட்டது. ஆரம்பத்தில் 40 மாணவிகளைக் கொண்டு, நடத்தப்பட்ட கல்லூரி தேசிய மாணவர்படையில் தற்போது 160 மாணவிகள் உள்ளனர்.

கல்லூரி பாடத்திட்டத்தின் பகுதி நான்காம் பிரிவின் கீழ் தேசிய மாணவர்படை மாணவியர்கள் தேசிய மாணவர் படை ஒருங்கிணைப்பு மற்றும் சுகாதாரம், தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் ஆளுமை வளர்ச்சி ஆகிய இரண்டு பாடங்களை வழங்குகிறது. இக்கல்லூரியின் தேசிய மாணவர் படையினர்பிமற்றும்சிசான்றிதழ் தேர்வில் ஆண்டு தோறும் கலந்து கொண்டு வேலைவாய்ப்பு மற்றும் ஊக்கத்தொகை பெறுகின்றனர்.

தேசிய காவலர் முகாம், வருடாந்திர வெளியீட்டு முகாம், சனிக்கிழமை முகாம் மற்றும் குடியரசு நாள் முகாம் போன்ற அனைத்து இந்திய முகாம்களிலும் இக்கல்லூரி தேசிய மாணவர் படை மாணவியர்கள் கலந்து கொள்வதோடு, மலையேற்றம் மற்றும் கயிறு ஏறும் பயிற்சிகளிலும் பங்கு கொள்கின்றனர். கடந்த 50 ஆண்டுகளில் 16 மாணவிகள் குடியரசு நாள் அணிவகுப்பிற்குச் சென்றுள்ளனர். 4 மாணவியர்கள் இந்திய அளவிலான மிதிவண்டி முகாமில் கலந்து கொண்டனர். புது தில்லி, ராஜ்பாத் அணிவகுப்பு மற்றும் சிறந்த துணைத் தளபதி விருதுகளையும் மாணவியர் பெற்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் சிறந்து விளங்கியதற்காக தங்கப் பதக்கத்தையும் ரூ. 400 மதிப்பிலான காசோலையையும் சிறப்புப் பரிசாக தமிழக அரசிடமிருந்து பெற்றுள்ளனர்.

தன்னார்வ சேவையில் கல்லூரி விரிவாக்கத் திட்டம் (JACEP)

மகாத்மா காந்திகிராமங்கள் தான் இந்தியாவின் முதுகெலும்புஎன்கிறார். இந்த முதுகெலும்புகளின் நலன்களுக்காக, ஜெயராஜ் அன்னபாக்கியம் மகளிர் கல்லூரியின் விரிவாக்கத் திட்டம், கல்லூரியின் கல்விமுறைக்கு ஏற்ப தன்னார்வ சேவையுடன், சமூக, அரசியல், கலாச்சார, கல்வி மற்றும் பொருளாதார ஒடுக்கு முறையில் அகப்பட்டு, ஓரங்கட்டப்பட்ட கிராமப்புறப் பெண்களை விடுவிப்பதற்குப் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இக்கல்லூரி மாணவிகள் கிராம மக்கள் தங்கள் பலம் மற்றும் பலவீனங்களை அடையாளம் காண உதவி செய்வதோடு அடித்தட்டு மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுக்கின்றனர். மேலும், கிராம மக்களுக்கு அரசு நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தவும், அவற்றை முழுமையாகப் பெற்றுக் கொள்ளவும் உந்து சக்தியாக செயல்படுகின்றனர். மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும், பாரம்பரிய மற்றும் நவீனத் தொழில் நுட்பங்களில் பயிற்சி பெறுவதற்கும் உதவுகின்றனர்.

கல்லூரியின் விரிவாக்கப் பணித் திட்டமானது இளங்கலை பட்டப் படிப்பில் நான்கு மற்றும் ஐந்தாம் பருவங்களில் 70 மணி நேரம் அளிக்கப்படுகிறது. மூன்றாம் பருவத்தில் மாணவியர் அவரவர் துறைநிலைப் பயிற்சியை துவங்குவதற்கு முன்பு மூன்று கட்டங்களில் சமூக அக்கறை வளர்ச்சி நோக்குடன் திட்டத்தைத் தயாரிக்கின்றனர். கல்லூரியில் இருந்து 30 கி.மீ தொலைவிற்குள் அமைந்துள்ள கிராமங்களை தேர்ந்தெடுத்து அதன் முழுவளர்ச்சிக்கான திட்டங்களை வகுத்து விரிவாக்கத்துறை செயல் படுகிறது. ஒவ்வொரு துறையின் மாணவிகளும் ஆறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, ஒரு கிராமத்தை தத்தெடுத்து, வளர்ச்சிப் பணிகளைத் திட்டமிட்டு செயல்படுத்துகிறார்கள்.

கிராமப்புற மக்களுக்கு அறிமுகமாகி கிராமத்தின் உட்கட்டு வசதிகள் மற்றும் குடும்பங்கள் பற்றிய தகவல்களைச் சேகரிக்கின்றனர். மக்களின் வசதிகள் மற்றும் தேவைகளை மையமாக வைத்து கல்வி, சுற்றுச்சூழல், விழிப்புணர்வு, சுயவேலை வாய்ப்பு, முதியோரைப் பாதுகாத்தல், வயது வந்தோர் கல்வி, மனித உரிமைகள், பெண்களுக்கு அதிகாரமளித்தல், குழந்தை பராமரிப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கிட கல்லூரி விரிவாக்கத் துறையின் சார்பாக செயல் திட்டம் தீட்டப்படுகிறது. அனைத்துத் துறை மாணவியரும் ஆண்டு முழுவதும் இச்செயல் திட்டங்களை செயல்படுத்தி தங்களின் இலக்கு கிராமத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துகின்றனர்.

Comment