No icon

12.05.2019 பாஸ்கா காலம் 4ஆம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை
கிறிஸ்துவில் பேரன்புக்குரிய வர்களே, பாஸ்கா கால 4 ஆம் ஞாயிறாகிய இன்று நல்லாயன்  ஞாயிறைக் கொண்டாடுகிறோம். நல்லாயனுக்குரியப் பண்புகள்  திருஅவை அமைப்புகள், சபைகள் மற்றும் நாடுகளில் மங்கி மறைந்து வருவது வருத்தம் கலந்த உண்மையாகும். ’நல்லாயன்’ என்ற வார்த்தை ஈர்ப்பு சக்தி வாய்ந்தது. இது வெறும் ’ஆடுகளின் கண்காணி’ என்ற பொருளை மட்டும் குறிப்பதன்று. ஆளுமைப் பண்பை வெளிப்படுத்தும் ஆற்றலின் அடையாளமாக இது கருதப்படுகிறது. ஒவ்வோர் அமைப்பிலும் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள அனைவரும் இந்தப் பண்பை அணிந்து கொள்வது காலத்தின் கட்டாயமாகிறது.
இவ்வளவு சிறப்பு மிகுந்த மையப் பொருளில் சிந்திக்க அழைக்கும் இன்றைய திருவழிபாடு பங்குக் குடும்பங்கள், நிறுவனங்கள், அமைப்புகள் அனைத்தும் நல்லாயனுக்குரிய அறிதல், மதித்தல், ஏற்றல், அளித்தல், அரவணைத்தல், அகலாதிருத்தல் ஆகிய அழகிய அணுகுமுறைகளைக் கொண்டு வாழப் பயிற்றுவிக்கிறது. எந்த ஒரு திட்டமும் முழு வெற்றி பெற வேண்டுமாயின், பாகுபாடற்ற பரந்த நோக்கம் கொண்ட தலைவரும் நிபந்தனையற்ற பங்களிப்பை நல்கும் மக்களும் இணைந்து செயல் படவேண்டும். இத்தகைய நல்ல சூழல் நம் பங்கில் எல்லாத் தளங்களிலும் உருவாகி வளர இத்திருப்பலியில் உருக்கமாக மன்றாடுவோம்.
முதல் வாசக முன்னுரை: திருத்தூதர் பணிகள் 13:14, 43-52
உயிரைக் கொடுக்கும் அளவுக்கு ஆடுகளை அன்பு செய்த இயேசு பற்றிய செய்தியை உவகையோடு அறிவித்த பவுலும் பர்னபாவும் துரத்தியடிக்கப்பட்டார்கள். ஆனால் தங்களை ஒளியாக ஏற்படுத்திய ஆண்டவருக்குப் பணி புரிவதில் ஆனந்தம் அடைந்த அவர்கள் பிற பகுதிகளில் கடவுளின் வார்த்தையை எடுத்துத்துரைத்ததை விளக்கும் முதல் வாசகத்தைக் கேட்போம்.
பதிலுரைப் பாடல்: திருப்பாடல் 100: 1-2, 3, 5
பல்லவி : "நாம் அவர் மக்கள், அவர் மேய்க்கும் ஆடுகள்"
இரண்டாம் வாசக முன்னுரை: திருவெளிப்பாடு 7:9, 14-17
இரத்தத்தைப் பாலாக்கித் தம் சேயினைக் காத்திடும் தாயினைப் போன்றவர்கள் நல்லாயர்கள். ஆட்டுக் குட்டியாம் இயேசுவும் தாயுள்ளம் கொண்டு தமது இரத்தத்தால் ஆடுகளாம் நம்மைத் தூயோராக்கி பசி, தாகம், தாக்கும் வெப்பம் ஏதுமின்றி காக்கும் நல்லாயனாய் திகழ்கின்றார் என்பதைச் சுட்டிக் காட்டும் இரண்டாம் வாசகத்திற்குச் செவிசாய்ப்போம்.
நற்செய்தி வாசகம்: யோவான் 10:27-30
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்
1. நல்லாயனாகிய இறைவா!
எங்கள் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் திருநிலையினர் அனைவருக்கும் உமது சிறப்பு ஆசிகளை அளித்து, அவர்கள் தங்களது நல்லாயன் கடமைகளைப் பொறுப்புணர்வோடு ஆற்றி, மந்தைகளைச் சிதற விடாமல் பேணி வளர்க்கவும், தீயோனிடமிருந்து திறமையுடன் காக்கவும் ஆற்றல் பெற்றிட வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. பொறுப்புகளை அளித்து வழிநடத்தும் இறைவா!
எம் நாட்டுத் தலைவர்கள் தாங்கள் பெற்றிருக்கும் பொறுப்பு களை நல்லாயனுக்குரிய உயர் பண்பு
களோடு செயல்படுத்தி, காலச் சூழலுக்கு ஏற்ப பணிபுரியவும் குறிப்
பாக எங்களுக்குப் போதிய விழிப் புணர்வை அளித்து நாங்கள் அறியாமை, நுகர்வு வெறி, ஊடகங்
களின் ஈர்ப்பு ஆகியவற்றிலிருந்து விடுபட்டு கடின உழைப்பே வெற்றிக்கு வழி என வாழவும் எங்களது உழைப்
புக்குத் தகுந்த பலனைப் பெறு
வதில் அரசு துணை நிற்கவும் வேண்டு மென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. அனைத்துத் தீமைகளிலிருந்தும் எங்களை விடுவிக்கும் இறைவா!
இலங்கையில் நடந்த வன்
முறைச் சம்பவங்களில் உயிரிழந்த வர்களின் ஆன்மாக்களுக்கு நீர் நிலைவாழ்வு அளிக்கவும் அவர்களது குடும்பங்களுக்கு நீர் என்றும் ஆறுத லாக இருக்கவும் இனி எந்த இடத்திலும் எந்தவகையிலும் இவை போன்ற வன்முறைகள் நடைபெறாமல் எல்
லாருக்கும் பாதுகாப்புடன் வாழவும் வேண்டுமென்று உம்மை மன்றாடு கிறோம்.
4. சுற்றுச் சூழல் பராமரிப்பில் கவனத்தைத் தூண்டும் இறைவா!
அறியாமையாலும் கடமையை உணராமையாலும் வாகனங்களை, தொழிலகங்களை இயக்குதல், கழிவுப்
பொருள்களை உரிய முறையில் அகற்றாதிருத்தல் போன்றவற்றால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபடுவதி லிருந்து எங்களைக் காத்து மழை, காற்று, வெய்யில் போன்றவற்றை எங்களுக்குத் தேவையான அளவில் வழங்கிக் காத்தருள வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. நல்லாட்சியின் நாயகனே இறைவா!
எம் நாடு எதிர்நோக்கியிருக்கும் வளர்ச்சி, பன்முகத்தன்மை பாதுகாப்பு, ஊழலற்ற நல்லாட்சி, சனநாயகப் பண்புகளைக் காத்தல், இயற்கை வளங் களைக் காத்தல் அண்டை நாடுகளுடன் நல்லுறவு ஆகிய பிரச்சினைகளுக்குப் பதிலளிக்கும் விதத்தில் ஆளக்கூடிய நல்ல தலைவர்களைக் கொண்ட ஆட்சி
அமைய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.

Comment