No icon

07.04. 2019 தவக்காலம் ஐந்தாம் ஞாயிறு

திருப்பலி முன்னுரை: கிறிஸ்து வில் பேரன்புக்குரியவர்களே, ‘தப்பு செய்வோர் மீது கருணை காட்டுபவரும் ஒரு விதத்தில் குற்றவாளிதான், என்பது பலரது திறனாய்வு கண்ணோட்டம். ஆனால் இறைமகன் இயேசுவின்
செயல்பாடுகளின் தாக்கத்தை
யும் அவரது ஏக்கத்தை வெளிப் படுத்தும் நோக்கத்தையும் அறி
யாதவர்கள் பாவிகள், நோயாளர் கள் மற்றும் பிற இனத்தவர் மீது இயேசு காட்டும் பரிவைப் பிழைப்பட புரிந்துகொண்டு, இயேசுவைக் குறை கூறுகின்ற னர். அதன்படி இந்த வாரமும் சிலர் ஒரு பெண்மீது விபசாரக் குற்றம் சுமத்தி அவரை இயேசுவிடம் இழுத்து வருகின்றனர். இயேசுவோ அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை வெளிப்படுத்துகிறார்.
        அப்பெண் திருந்தி வாழ வழி காட்டுகிறார். தவக்காலம் பிறர்மீது குற்றம் சுமத்தி, அவர்களை அவமானப்படுத்தும் காலம் அல்ல;
மாறாக தம் பாவ நிலையை உணர்ந்து, அதிலிருந்து விடுபட வழிவகைகளை ஆராய்ந்து, அல்லனவற்றை அகற்றி நல்லன வற்றைச் செயல்படுத்த நினைவு, நேரம், பொருள் ஆகியவற்றைப் பகிர்ந்து வாழ விடுக்கப்படும் அழைப்பை உணர்ந்து செயல்பட உறுதி எடுக்கும் காலம். ஆம் அருளின்காலம் இதை நம் இல்லம்,
நிறுவனங்கள், பக்த சபைகள் மற்றும் அன்பியங்களின் செயல் பாடுகளில் ஏற்ற முறையில் வெளிப்
படுத்த இத்திருப்பலியில் உறுதி யேற்போம்!
முதல்வாசக முன்னுரை: எசாயா 43:16-21
    நடந்தவற்றை நினைந்து நொந்து கொண்டிருப்பதைவிட, நடக்க இருப்பவை நல்லவையாக இருக்கும் என்ற நம்பிக்கையில் நாம் நாள்களை நகர்த்த வேண்டும். ஏனெனில் வல்லவரும் நல்லவரு மான கடவுள் நம் தேவைகளை அறிந்துள்ளார். நலமும் வளமும் பெறும் பாதையில் அவர் நாளும் நம்மை நடத்திச் செல்வார் என்பதை விளக்கும் முதல் வாசகத் திற்குச் செவி சாய்ப்போம்.
பதிலுரைப்பாடல்: திருப்பாடல் 126: 1-2, 2-3, 4-5,6
பல்லவி: “ஆண்டவர் மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் பெருமகிழ்வடைகின்றோம்”
இரண்டாம் வாசக முன்னுரை: பிலிப்பியர் 3:8-14
மனிதர் அனைவரும் எடுத்து வைக்கும் ஒவ்வொரு சுவடும் மேற் கொள்ளும் ஒவ்வொரு பயணமும்
அவரைக் கிறிஸ்துவில் இணைத் திடும் புனித நோக்கத்தின் வெளிப் பாடாக அமைய வேண்டும். இதற்குத் தலைசிறந்த எடுத்துக் காட்டாகத் திருத்தூதர் பவுல் விளங்குகிறார். இயேசு என்ற பரிசை நோக்கிய பயணத்தில் வெற்றிபெறத் தூண்டும் இரண்டாம் வாசகத்தை இனிதே கேட்போம்.
நற்செய்தி: யோவான் 8:1-11
நம்பிக்கையாளர்களின் மன்றாட்டுகள்
1. தீமைகளைத் திருத்திடக் கற்பிக்கும் இறைவா!
எம் திருத்தந்தை பிரான்சிஸ், ஆயர்கள், குருக்கள், துறவியர் மற்றும் திருநிலையினர் அனைவரும் பிறர் தீமை செய்கிறார்கள் என உணரும் போது அவர்களது சூழல்களை உற்று நோக்கி, ஏற்றமுறையில் அவர்களைத் திருத்தவும், தொடர்ந்து தீமை செய்யும் நிலையிலிருந்து அவர்கள் விடுபட நேர்மையான வழிகளைக் காட்டவும் முன்வர வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
2. வாக்குமாறா வானகத் தந்தையே இறைவா!
அண்மையில் பொதுத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலைச் சந்திக்கும் தமிழக கிறிஸ்தவ மக்களாகிய நாங்கள் வெற்று வாக்குறுதிகளை இனம் கண்டு அவற்றை நம்பாமல் உண்மையான, நல்ல செயல்பாடுகளையும் மத சார்பின்மை, பெரும்பான்மைவாதத்தை வேரறுக்கும் சிறுபான்மையினரை நேசிக்கும் கட்சிகளைத் தேர்ந்தெடுக்க அணியமாக ஒன்றிணைய வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
3. பயணத்தில் துணை நிற்கும் பரம்பொருளே இறைவா!
எங்கள் கவனத்தை ஈர்க்க இன்று எத்தனையோ நலமற்ற கூறுகள் போட்டிபோடுகின்றன. திருத்தூதர் பவுலைப்போல நாங்கள் விவேகத் தோடுபயணத்தைத் தொடர, எது முழு நன்மையை, உண்மையை எங்களுக்குத் தரவல்லதோ அதையே நாடித் தேடி செயல்படுத்தி வெற்றி காணவும் அதன்வழியாக எங்கள் ஆன்மிக, பொருளாதார, அரசியல், சமூக வாழ்வு முன்னேற்றம் பெறவும் வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
4. இயற்கையை மாபெரும் கொடையாகக் கொடுத்த இறைவா!
கடும் வெய்யில், காணாத மழை இவற்றால் பெரும் அவதிக்குள்ளாகி யிருக்கும் எங்களுக்குப் போதிய மழையைத் தந்து, நாங்கள் நல் வாழ்வு பெற்றிட, நிலம் வளம் கொழிக்க, கால்நடைகளின் பயன்பாடுகளுக்கு உதவிட துணை நிற்க வேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
5. ஒப்புரவாக்கும் உன்னத இறைவா!
இந்த அருளின் காலத்திலே நாங்கள் எங்களோடும் அடுத்திருப்பாரோடும் இயற்கையோடும் எங்கள் நிலைவாழ்வின் காரணரான உம்மோடும் நல்லுற வில் வாழ்வதற்குத் துணை நிற்கும் ஒப்புரவு அருளடையாளத்தைச் சிறந்த
தயாரிப்போடு பெற்றிட முன்வரவேண்டுமென்று உம்மை மன்றாடுகிறோம்.
 

Comment