No icon

நளம் அளிக்கும் கன்னி மரியின் பிறப்பு

என் அன்பு சகோதரமே! ஒரு ஆண்டுக்குப் பிறகு உங்களை நம் வாழ்வின் வார இதழ் வழியாகச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இந்த இதழில்இறைவன் மீது கொண்டஎனது நம்பிக்கை, அன்னைமரியா மீது கொண்டஅன்பு, வணக்கம் மற்றும்எனது ஆன்மிகத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள கிடைத்த இந்த இறை அருளுக்காக நன்றிகள் பல.
"மகிழ்ச்சியடை கின்றேன்" என்று குறிப் பிட்டேன். உங்களை இந்த பகிர்வின் வழி சந்திப்பதில் மகிழ்ச்சி ஆனால் இன்று இந்த உலகம், நமது நாடு, வீடு, தனி மனிதர்களாகிய நாம் ஒருவிதமான பயத்தில் வாழ்கின்றோம். 2019 அக் டோபர் தொடங்கி இன்றளவும், இன்னும்சிறப்பாக இந்தியாவில் 2020 மார்ச் மாதம் தொடங்கி இன்று வரைபயம், பதட்டம், நெருக்கடி, இடமாறுதல் விவிலியத்தில் காணப்படும் விடுதலைப் பயண நூலில் விவரிக்கப்படும் இஸ்ரயேல் மக்களின் பாலை வனம் நோக்கியப் பயணம் போன்று, தடைகள், ஊரடங்கு அரசால் அறிவிக்கப்படும் போதெல்லாம் பெருநகரை விட்டு சொந்த ஊர்களுக்கு பாதுகாப்பாக இருக்கஓடிய மக்களையும், எதிர் காலத்தை, வேலையை, வாழ் வாதாரத்தை இழந்து எப்பொழுது இது முடிவுக்கு வரும் என்ற ஏக்கத்தோடும் பெருமூச்சோடும் புலனம், முகநூல், தொலைக்காட்சி மற்றும் செய்திதாள்களை உற்று கவனித்துக் கொண்டு ஒருவிதமான இறுக்கமான, இருள்கவ்விய மரணம் கவ்விய சூழலில் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம் என்பது எதார்த்தம்.
வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாமல் அவசர தேவைக்கும் உணவுக்கு மட்டும் வெளியேறி, கோவிலுக்கும் திருவழிபாடுகளுக்கும் செல்ல முடியாத சூழலில் இறைவனின் உடனிருப்பையே கேள்விகேட்டும் மனநிலை ஒரு சிலரிடமும், நவீன ஊடகங்களான தொலைக்காட்சி மற்றும் வலையொளி வழி மனநிறைவுக்காக திருப்பலி கண்டுகொண்டு இறை வனின் உடனிருப்பு இன்றும் இருக்கின்றது என்று நம்மையே உறுதிப்படுத்தி கொண்டு வாழும் நிலைக்கு நாம் தள்ளப் பட்டிருக்கின்றோம்.
இத்தகைய சூழலில் கன்னி மரியின் பிறப்பு தரும் செய்தி என்ன என்ற கேள்வி எல்லார் மனத்திலும் நம்பிக்கையாளர் மத்தியிலும் நம்பிக்கையற்றவர் மத்தியிலும் இருக்கின்றதை உணர முடிகிறது; புரிந்து கொள்ள முடிகிறது. இந்த இக்கட்டான சூழலில் மரியின் ஊழியர் சபை குருவானவர்/துறவி தாவீது மரிய துரோல்தோஇத்தாலிய நாட்டின்கவிஞர். இவரின் கவிதைகள் மக்களால் போற்றப்பட்டன; விரும்பி வாசிக்கப் பட்டன. இவரின் ஒருகவிதை என் நினை வுக்கு வருகின்றது. கன்னி மரியாவைப் பார்த்து இப்படி அவர் பாடுவார்.
கன்னிமரியே நீர் மீண்டுமாக இந்த மண்ணில் தோன்றவில்லை என்றால் இறைவனும் சோகத்திற்குள்ளாவார்.
கிறித்தவ உலகில் சாட்சிகளும் கனவுகளும் கணக்கில் அடங்காமல் தோன்றினாலும் நீர் மீண்டுமாக நற்செய்தியில் தோன்ற வேண்டும். 
மகிழ்வின் மொழிபேசி எங்களை மயக்கும் இறைவனை நீர் மீண்டும் இந்த உலகிற்கு வெளிப்படுத்த வேண்டும். இன்றும் எண்ணற்ற சிலுவைகளில் இறை மகன் அறையப்படுகின்றார் அவைகளின் அடியில்நீர் மீண்டும் ஆறுதல் தருபவராக, உடனிருப்பவராக வரவேண்டும். நீர் மீண்டுமாக இந்த மண்ணில் தோன்றவில்லையென்றால்இறைவனின் திருமுகம் அழகை இழந்துவிடும்,என்று பாடுவார். ஆம்! அன்புக்குரியவர்களே! மரியா மீண்டும் தோன்றவேண்டும், மீண்டும் பிறக்க வேண்டும். மீண்டும் ‘ஆம்’ என்று சொல்லி அன்பு இறைவனுக்கு அடிபணிய வேண்டும். மீட்பின்திட்டத்தில் ஒன்றிணைய வேண்டும். மரியின் விழாவை கொண்டாடுகின்ற இந்த வேளையில் திருவழிபாடு மரியாவைப் பார்த்து: “நீதியின் சூரியன் உன்னிடமே தோன்று கின்றார். அல்லேலூயா! கன்னி மரியே நீர் பேறு பெற்றவர்; ‘எல்லா புகழுக்கும் தகுதியானவர் உம்மிடமிருந்தே நீதியின் சூரியன்நமது ஆண்டவர் கிறித்து தோன்றினார்; ‘திருஅவையே அகமகிழ் வாய் கன்னி மரியின் பிறப்பால் இறைவன் மீண்டுமாக நம்பிக்கையை, உலகின் ஒட்டு மொத்த மீட்பின் விடியலை புதுப்பித்துள்ளார்.
மேற்குறிப்பிட்ட சொற்றொடர்கள் மரியின் பிறப்பு விழாவின் செய்தியை நமக்குத் தெளிவுப் படுத்துகின்ற. எல்லாவிதமான புகழும் குழந்தையைப் (கிறித்துவை) பெற்றெடுத்தவர்க்கே. நற்செய்தி வாசகம் கன்னிமரி கிறித்துவை கருதாங்கியதை வியந்துப் பார்க்கின்றது. இதை வீரமாமுனிவர், மிகவும் அழகாக திருக்காவலூர் கலம்பகத்தில் குறிப்பிடுவார்.
வுருவில்லா னுருவாகி யுலகிலொரு மகனுதிப்பக் கருவில்லாக் கருத்தாங்கிக் கன்னித்தா யாயினையே
உருவில்லாதவருக்கு உருகொடுப்பார் கன்னித்தாய் என்றும் உருகொடுத்து பெற்றெடுத்தவரை இம்மானுவேல் என்று அழைப்பீர். இம்மானுவேல் என்றால் கடவுள் நம்மோடு என்று பொருள் படும். நமக்காகப் பிறந்த கன்னி மரியா கடவுளை நம் கண்களுக்கு விருந்தாக்கியவள். ஆதலால் அவரை நாம் இன்று கொண்டாடுகின்றோம். மரியின் பிறப்பைக் கொண்டாடினாலும் கிறித்துவே நமது வாழ்வின் மையம். அதனால் திருஅவை தயக்கமில்லாமல் புனிதம் மிகுந்த கன்னி மரியிடமிருந்து கிறித்து மனிதஉடல் எடுத்தார். இதனால் கடவுளுக்கும் கிறித்துவுக்கும் தூய ஆவிக்கும் நன்றி கூற அழைக்கப்படுகின்றோம். 
நம்மோடு ஆதாமும் ஏவாளும் அகமகிழ்ந்து அக்களிக்கின்றனர். இன்று விண்ணகத்தில் இறை வனின் மணவறை பிறந்துள்ளது. “கடவுளின் வார்த்தையின் தேர் பிறந்துள்ளது. “புனித கதவு உண்மை வாழ்வின் தாய்”, “உலகைப் படைத்த அரசனின் இருப்பிடம், புனித ஆலயம், தெய்வீகத்தை ஏற்கும் இடம் எல்லாம் ஒன்று சேர்ந்த இடம் என்று திருஅவை மரியாவை பற்றி கூறுகிறது.
இந்த உலகம் முழுவதும் மகிழ்வடைகிறது. காரணம் கடவுளின் தாய் மரியா பிறந்துள்ளார். உன்னிடமிருந்து பிறப்பவர் சாபத்தை கட்ட வழித்தார், சாவை  அழித்தார்.
முடிவில்லா வாழ்வை கொடையாகக் கொடுத்தார். மரியாவின் பிறப்பு - இவர் வழியாக கிறித்துவின் பிறப்பு கிறித்துவால் சாபமும், சாவும் அழிந்தன. ஆக மரியாவும் கிறித்துவும் ஒன்றிணைந்துள்ளனர். வழிபாடு இவர்களை ஒரு போதும் பிரிப்பதில்லை. மீட்பின் விடியலைக் கொடுத்த மரியாவுக்கு நாம் நன்றி கூறுவோம்.
மரியா ஏழ்மை மிகுந்த பெண்ணாக இருந்தாலும், சிறியவராக இருந்தாலும் எசாயா கூறுவது போன்று (60:22). சிறியவர் ஓராயிரமாய்ப் பெருகுவர்... (மத் 2:6) நீ பெத்லகேம் யூதாவின் நகரில் பெரியதேயில்லை. உம்மிடமிருந்தே இஸ்ரவேல் அரசர் தோன்று வார். அவர் இஸ்ராயேலைப் பாதுகாப்பார். அமைதியை தருவார். ஆசீர்வாதத்தைத் தருவார். எல்லா மக் களுக்கும் தருவார். கனிவானவர், மென்மையானவர், நம் பாவங்ங்களை மன்னிக்கக் கூடியவர்.
மரியின் பிறப்பு - கிறித்துவின் பிறப்பு - உடல் சார்ந்த பிறப்பை முடிவுக்கு கொண்டு வருகின்றது. தூய ஆவியினால் வரும் பிறப்பை தொடங்கி வைக்கின்றது. சாதாரண பிறப்பு புறம்பாக்கப்படுகின்றது. மாறாக மேலிருந்து தூய ஆவியின் பிறப்பால் புதியப் பிறப்பு உருவாகிறது. இது சுதந்திரத்தின் அடையாளமாகும்.
ஆக மரியின் பிறப்பு கடவுள் நம்மோடு செயல்படுகிறார் என்றும், கிறித்துவின் பிறப்பு புதிய மனிதனின் பிறப்பாகும்; புதிய படைப்பாகும். அது புதிய திருஅவை. திருஅவைக்கு எடுத்துக்காட்டாக இருப்பார். திருஅவை தூய ஆவியினால் ஆட்கொள்ளப் படவில்லை என்றால்:
கடவுள் மிகவும் தூரமாக இருப்பார்
கிறித்து இறந்த காலத்தில் இருப்பார்
நற்செய்தி உயிர் அற்ற எழுத்துகளாகும்.
திருஅவை - ஒரு எளிய இயக்கமாகும்;
அதிகாரம் - அடக்குமுறையாகும்;
அறிவிப்பு - பிரச்சாரமாகும்;
வழிபாடு - ஒரு கேட்டலாகும்;
கிறித்தவ வாழ்வு நடப்பு - அடிமைத்தனத்தை பின்பற்றலாகும்
ஆவியோடு இருந்தால் - உயிர்த்த கிறித்து நம்மோடு இருந்தால் நற்செய்தி வாழ்வின் ஆற்றலாகும்.
திருஅவை -
மூவொரு இறைவனில் இணைந்த ஒன்றாகும்.
அதிகாரம் - விடுதலை பெறுவதற்கு செய்யும் பணியாகும்.
நற்செய்தி அறிவிப்பு - மீண்டுமொரு பெந்தகோஸ்தே ஆகும்.
திருவழிபாடு - நினைவாக செய்வதாகும்.
மனித செயல்பாடுகள் - தெய்வீகச் செயல்படாகின்றன.
தூய ஆவிக் கானப் பாடலாகும். இது கவலை என்றால் திருஅவையில் கிறித்து இல்லை. புவி மிக்க கன்னி மரியின் உரு இங்கு இல்லை. தூய ஆவியின் செயல் எங்கு உள்ளது. “மரியின் பிறப்பால் தூய ஆவியானவர் கிறித்துவின் பிறப்பை உருவாக்குகின்றார். கிறித்துவே அதன் நிறைவான கனியாக இருக்கின்றார். மரியாவின் பிறப்பு விழாவை கொண்டாடுகின்ற இந்த வேளையில் கிறித்து தரும் மீட்பின் விடியலை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.மரியின் பிறப்பின் நோக்கம் கிறித்துவை இந்த உலகிற்கு விருந்தாக்குவதாகும். கண்களுக்கும் புலப்படாத இறைவனை, கண்குளிரக் காண்பதாகும். இதைத்தான் நாங்கள் கண்டதை, நாங்கள் கேட்டதை உங்களுக்கு அறிவிக்கின்றோம் (யோவா 1:3).
பிள்ளைகள் என்ற நிலையில் நாம் நம் தாயிடம் அன்பு கொள்ளவும் அவருடைய நற்பண்புகளைக் கண்டு பாவிக்கவும் வேண்டுமென்னும் ஆர்வத்தையும் அது நம்மில் தூண்டுகின்றது (......67) இரண்டாம் வத்திக்கான் சங்கம் திருஅவை என்ற ஏட்டில் எண் 67ல் குறிப்பிட்டதுபோல மரியாவின் பிறப்பு விழாவிலும் அவளின் பல பெயர் கொண்ட விழாவிலும் நாம் நம் வணக்கத்தையும் அன்பையும் காட்டவேண்டும். ஒறுத்தல் முயற்சிகள், திருயாத்திரை, முடியெடுத்தல், ஏழைக்கு உணவளித்தல், திருப்பலியில் பங்கு கொள்ளுதல் ஒப்புரவு ஆதல் போன்றவற்றை அந்நாட்களில் செய்வது மட்டுமல்லாமல், மரியின் பக்திக்கு சிறந்த எடுத்துக்காட்டு நம்பிக்கையாளர். மரியாவின் நம்பிக்கை எதிர்நோக்கு, அன்பு வாழ்வையும் அவர் தன் வாழ்வில் கடைபிடித்த நற்பண்புகளையும் கடைபிடித்து இறைத் திட்டத்தை நிறைவு செய்து வாழ்வதே சிறப்பான மரி பக்தி என்று இரண்டாம் வத்திக்கான் சங்கம் நமக்கு எடுத்துக் கூறுகின்றது. மரியா ‘ஆம்‘ என்று சொல்லி இறைத் திட்டத்திற்கு அடிபணிந்ததிலிருந்து சிலுவையின் அடியில் தன் மகனின் பாடுகளில் பங்கெடுத்து இறைத் திட்டத்தை நிறைவேற்றிய தாய். இறைவன் மரியாவை மகிமைப்படுத்தி தனது அருகில் அமர்த்திக் கொண்டார். இதனால் மரியா இறைவனோடும் இறைவனுள்ளும் இருப்பதால் என்றும் நமக்காக தன் திருமகனிடம் - கானாவூர் திருமணத்தில் பரிந்து பேசியதுபோல இன்றும் நமக்காக பரிந்து பேசுகின்றார். இதை நாம் தொடக்கத் திருஅவையிலும் இரண்டாம் நூற்றாண்டு மரியாவை நோக்கிய ஜெபத்திலும்:
கடவுளின் அன்னையே! கன்னி மரியே
அடைக்கல நீரென அணுகி வந்தோம்;
கடைக்கண் பார்த்து எம் தேவையில் எல்லாம்
எடுத்தெறியாமல் எம் வேண்டுதல் ஏற்பீர்
இடுக்கண் இடர்கள் அனைத்திலும் இருந்து
இடைவிடாது எமைக் காத்திடுவீரே
பெண்களுக்குள் நீர் பேறு பெற்றீரே!
விண்ணக மாட்சியில் விளங்கும் தாயே! ஆமென்.
அன்றே திருஅவையின் நம்பிக்கையாளர்கள் "கடவுளின் தாய்" என்றும் "கன்னி மரி" என்றும், எம் தேவைகளை ஏற்பார் என்றும் மன்றாடுவதைக் காண்கின்றோம்.
கடவுளின் தாயாக இருப்பதனால் கன்னிமரியா குணப்படுத்தும் ஆற்றலை நமக்கு பெற்றெடுத்து கொடுக்கின்றார். மரியின் பிறந்த இடம் எருசலேமில், ஆட்டு வாயிலுக்கு அருகில் வந்து மண்டபங்கள் கொண்ட குளம் ஒன்று உண்டு எபிரேய மொழியில் பெத்சதா என்பது அதன் பெயர். இங்குதான் ஜோக்கினும் அன்னாவும் ஆரத்தழுவிய இடம். அன்னாவின் மலட்டுத்தனம் குணமாகிய இடம். இயேசுவின் காலத்தில் அதற்கு முன்னரும் நோயாளிகள் குணமடைந்தனர். புனித ஜேம்ஸ் விவிலிய புறநூல் 1-6 அதிகாரங்களும் யோவான் நற்செய்தி ஐந்தாவது அதிகாரமும் நமக்கு தெளிவுப் படுத்துகின்றன.
குணமளிக்கும் அந்தக் குளம் எல்லா விதமான நோய்களையும் போக்குகின்றது. அது மலட்டுத் தன்மையையும் போக்குகின்றது.
மரியா வளமையான ஆசீர்வதிக்கப்பட்ட இடத்தில் பிறந்ததாக குறிப்புகள் கிடைக்கின்றன.
இறை அருளைப் பெற்ற மரியா, இறைவனும் மனிதமான இயேசுவை கருவில் சுமந்த மரியா, எப்பொழுதும் இறைவனில் இரண்டறக் கலந்த வராக இருப்பதனால் மரியா இறைவனோடும் இறைவன் மரியாவோடும் இருப்பதனால். மரியாவை நாடிவரும் மக்களுக்கு எல்லாவிதமான நோய்களிலிருந்து விடுதலைப் பெறுகின்றனர். உடல் ஊனமுற்றோர், பார்வையற்றோர், கால் ஊனமுற்றோர், முடக்குவாதம் உடையோர் (யோ 5:3) மற்றும் இன்று நம்மிடையே பல நோய்கள் உள்ளன. இனவாதநோய், மொழிவாதநோய், சாதிய வாதநோய், நிறவாத நோய், ஏழை பணக்காரன் என்ற நோய் தொழுநோய், எய்ட்ஸ் நோய் மற்றும் இந்த உலகையே இன்று ஆட்டிப் படைக்கும் கொரோனா என்ற நோய்... என இந்த நோய்களிலிருந்து நம்மை விடுவிக்க அன்னை மரியின் பரிந்துரையை நாடுவோம்.
இரக்கத்தின் தாயே! எங்கள் அரசியே வாழ்க!
எங்கள் வாழ்வே, தஞ்சமே, இனிமையே வாழ்க!...
மரியா இறைவனின் இரக்கத்தை அனு பவித்து நம் எல்லோருக்கும் தன் ஆன்மாவின் பாடலாக அறிவிக்கின்றார். இறைவன் வாக்கு தவறாதவர். உண்மையுறுதியள்ள இறைவன். இறைவனோடும் இறைவனுள்ளம் இருக்கின்றார். அழைக்கும் குரலுக்கு ஓடோடி வருகின்றவராக இருக்கின்றார். இந்த மனுக்குலம் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டு பயந்திருக்கும் இந்த வேளையிலே அன்னை மரியின் துணையை நாடுவோம். இந்தப் பூவுலகை புதுப்பொலிவுடன் காத்து நடத்திட அவரின் திருமகனின் நற்செய்தியை கூர்ந்து கேட்போம். மரியா வானவனின் செய்தியை கூர்ந்துகேட்டு, இறைவனின் திட்டத்தை ஏற்று “உமது வார்த்தையின்படியே எனக்கு நிகழட்டும்“ என்று பணிந்தார். நாம் நம்மையே அந்த அன்னையின் பிறந்த நாளில் அவள் வழியாக இறைவனுக்கு அர்ப்பணித்து அவள் வழியாக மன்றாடுவோம்.
“ஆதலால் எங்களுக்காக வேண்டி மன்றாடுகின்ற தாயே, உம்முடைய இரக்கமுள்ள திருக் கண்களை எங்கள்மேல் திருப்பியருளும்” உம்மக்களாகிய எங்களுக்கு துணையாக இருக்கும் இறைவனின் திருமுகத்தை எங்களுக்கு காட்டியருளும். மிக விரைவில் இந்தக் கொரோனாத் தொற்றுநோய்  இம்மனுகுலத்தை விட்டு அகன்று நாங்கள் எப்பொழுதும் உம் மகனின் நற்செய்திக்கு ஏற்றார்போல் “அவர் எங்களுக்கு சொல்வதை யெல்லாம் செய்து.” இரக்கமிக்க இறை வனின் அருளையும் பாதுகாப்பையும், நல்வாழ்வையும் எங்களில் கொண்டு அவரில் நிலைத்து நின்று வாழ்ந்து, உம்மைப்போல் எலிசபெத்தின் சந்திப்பில் ஆவியினால் ஆட்கொண்டு பாடிய பாடல் எங்கள் பாடலாக இருந்து “கடவுள் நம்மோடு” இருக்கின்றார் என்பதை எங்கள் வாழ்வில் உணர்ந்திட எங்களுக்காக பரிந்து பேசும்.
 

Comment