No icon

திருத்தந்தையின் முழக்கம்

திருத்தந்தை அவர்களின் மறையுரைகள், சிந்தனைப் பகிர்வுகள் மற்றும் சுற்றறிக்கைகளின் சாரல்

 “மக்களின் உணவுக்கு வழி செய்வது என்பது, அவர்களுக்குரிய மாண்பை வழங்குவதாகும். அரசுகள், தொழில் நிறுவனங்கள், கல்வி அமைப்புகள், அனைத்துலக நிறுவனங்கள், சமூக அமைப்புகள், தனியார்கள் என அனைவரும் ஒன்றிணைந்து இப்பிரச்சினைக்குத் தீர்வு காணவேண்டும்.”

- ஜூலை 4, .நா.வின் 43வது கூட்டத் தொடருக்கான செய்தி.

திருப்பலி எனும் நற்கருணைக் கொண்டாட்டத்தை ஒவ்வொரு கத்தோலிக்கரும் தங்கள் வாழ்வில் மையமாகக் கொண்டு செயல்பட வேண்டும். திருப்பலியின் துவக்கத்தில் நாம் எப்படி இருந்தோமோ, அப்படியே திருப்பலியின் இறுதியிலும் இருந்தோமானால் அதில் எங்கோ தவறு உள்ளது. ஏனெனில், நற்கருணையில் பிரசன்னமாயிருக்கும் இயேசு மாற்றத்தைக் கொணர்பவர்.”

- ஜூலை 3, ஜூலை மாத செப கருத்து.

 “எதிர்மறை மற்றும் பொய்யான செய்திகள், நுகர்வுக் கலாச்சாரம்மீது ஈர்ப்பு, பகைமை, முன்சார்பு எண்ணங்கள் போன்றவைகளில் இளையோர் தங்களை இழக்காமல் இருக்கவேண்டுமெனில் சுதந்திரம், பகுப்பாயும் திறன், பொறுப்புணர்வு போன்றவைகளை வழங்கி நாம் உதவவேண்டும்.”

- ஜூலை 3, ஐக்கிய அரபு தின இதழுக்கு வழங்கிய உரை.

 “இன்றைய உலகில் மறக்கப்பட்டதாக இருக்கும் பெரும் போர்களும், இவ்வுலகை இரத்தக்கறை பிடிக்க வைக்கும் எண்ணற்ற மோதல்களும் முடிவுக்கு வரவேண்டும் என இறைவனை நோக்கிச் செபிப்போம்.”

நாம் ஒவ்வொருவரும் இறைவாக்கினர்கள்; ஏனெனில், திருமுழுக்கு வழியாக நாம் ஒவ்வொருவரும் இறைவாக்கினர் பணி என்னும் கொடையைப் பெற்றுள்ளோம்!”

 - ஜூலை 2, மூவேளை செப உரை.

 “தீமைக்கு நன்மையால் பதிலளிப்பது; பகைமைக்கு அன்பால் பதிலளிப்பது; பிரிவினைக்கு ஒன்றுபடுவதால் பதிலளிப்பது, இவையே கிறிஸ்தவர்களின் தொலைநோக்குப் பார்வையாகும். கிறிஸ்தவர்களாகிய நமது நம்பிக்கை நம் ஒவ்வொருவரின் எதார்த்தத்தையும் உள்ளிருந்து மாற்றுகின்றது.”

- ஜூலை 1,  ‘டுவிட்டர்குறுஞ்செய்தி.

Comment