No icon

கர்தினால் பீட்டர் எர்டோ

ஹங்கேரியில் திருத்தந்தைக்கு வரவேற்பு

உரோம் உள்ளூர் நேரம் காலை 10.00 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 1.30 மணிக்கு ஹங்கேரியின் புடாபெஸ்ட் ஃபெரெங்க் லிஸ்ட் பன்னாட்டு விமான நிலையத்தை வந்தடைந்தார் திருத்தந்தை பிரான்சிஸ். விமானத்தை விட்டு இறங்கும் முன் ஹங்கேரி நாட்டிற்கான திருப்பீடத்தூதர் பேராயர் மைக்கேல் டபிள்யூ. பனாச், எஸ்டெர்கோம் புடாபெஸ்ட் மறைமாவட்ட பேராயரான கர்தினால் பீட்டர் எர்டோ, ஆகியோர் திருத்தந்தையை விமானத்திற்குள் சென்று வரவேற்றனர். விமானத்தில் இருந்து இறங்கிய பின் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை துணை அரசுத்தலைவர், அரசு சார்பில் வரவேற்க, இரு சிறார் பாரம்பரிய முறைப்படி உடையணிந்து கலாச்சார முறைப்படி உப்பும் ரொட்டியும் கொடுத்து வரவேற்றனர். விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் பகுதியைச் சென்றடையும் முன் துணை அரசுத்தலைவர், அரசு அதிகாரிகள் மற்றும் அலுவலர்களை திருத்தந்தைக்கு அறிமுகம் செய்து வைத்தார்.

ஹங்கேரி உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு அதாவது இந்திய இலங்கை நேரம் பிற்பகல் 2.00 மணிக்கு திருத்தந்தை பிரான்சிஸ் தனி வாகனத்தில் 24.3 கி.மீ பயணம் செய்துஹங்கேரியின் Palazzo Sándor  மாளிகை வந்தடைந்தார்.

Comment