No icon

குடந்தை ஞானி

மியான்மார் மக்களுக்காக செபிக்க இங்கிலாந்து ஆயர் வேண்டுகோள்

மியான்மார் நாட்டில் இராணுவத்தால் ஆட்சிக் கவிழ்ப்பு இடம்பெற்று ஓராண்டு நிறைவுற்றுள்ள நிலையில், அந்நாட்டில் துயருறும் மக்களுக்காக அனைத்துக் கத்தோலிக்கர்களும் செபிக்கவேண்டுமென இங்கிலாந்து நாட்டு ஆயர் டாம் நெய்லான் அழைப்பு விடுத்துள்ளார்.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவையின் ஆசியா விவகாரங்களுக்கான துறையின் தலைவர் ஆயர் டாம் நெய்லான் அவர்கள், ஆட்சிக் கவிழ்ப்பு நெருக்கடியால் எழுந்துள்ள பதட்ட நிலைகள் மற்றும் துயர்கள் களையப்பட்டு, மக்களாட்சி மீண்டும் கொணரப்பட வேண்டும் என அனைவரும் செபிக்குமாறு அழைப்பு விடுத்தார்.

கடந்த ஓராண்டில் மட்டும் 1400க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், பல இலட்சக்கணக்கானோர் பசியால் வாடி வருவதாகவும், பல ஆயிரம் பேர் புலம் பெயர்ந்து வருவதாகவும், கிறிஸ்தவக் கோவில்களில் அடைக்கலம் தேடியவர்கள் கூட தாக்கப்பட்டுள்ளதாகவும் ஆயர் டாம் நெய்லான் கவலையை வெளியிட்டார்

இருண்டுபோயிருக்கும் மியான்மார் நாட்டில் நம்பிக்கை ஒளியை ஏந்தி நிற்கும் தலத்திருஅவை, வன்முறையற்ற வழிகள், ஒப்புரவு, நீதியில் நிலைநாட்டப்பட்ட நிலைத்த அமைதி ஆகிவற்றிற்காக சோர்வின்றி உழைத்துவரும் நிலையில், இங்கிலாந்தின் அனைத்துக் கத்தோலிக்கர்களும் அந்நாட்டிற்காக ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் என்ற விண்ணப்பத்தையும் ஆயர் டாம் நெய்லான் முன்வைத்தார்.

 

Comment