No icon

குடந்தை ஞானி

காலநிலைக் குறித்த பிலிப்பீன்ஸ் நாட்டு ஆயர்களின் அறிக்கை

காலநிலை மாற்ற நெருக்கடிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைளை, தங்கள் வாழ்வு, எடுத்துக்காட்டு, அர்ப்பணம் வழியாகச் செயல்படுத்த உள்ளதாக பிலிப்பீன்ஸ் நாட்டு ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

சுற்றுச் சூழலுக்குத் தீங்கு கொணரும் வகையில் செயல்படும் நிறுவனங்களிலிருந்து தங்களின் முதலீடுகளை அகற்றவுள்ளதாகவும், சுரங்கத்தொழில் உட்பட சுற்றுச் சூழலை அழிக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ளோரிடமிருந்து எவ்வித நன்கொடையும் பெறப்போவதில்லை எனவும், பிலிப்பீன்ஸ் நாட்டு ஆயர்கள் வெளியிட்ட அறிக்கை உரைக்கிறது.

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான அர்ப்பணம், தங்களின் வாழ்வு, எடுத்துக்காட்டுகளின் வழி வெளிப்படுத்தப்படும் என உரைக்கும் பிலிப்பீன்ஸ் ஆயர்கள், கோவிட்-19 பெருந்தொற்று காலத்தில் குறைந்திருந்த சுற்றுச்சூழல் அழிவு, தற்போது அதிகரித்து வருவதைக் காண முடிகிறது என்றனர்.

அடிக்கடி இயற்கைப் பேரிடர்களால் பாதிக்கப்படும் பிலிப்பீன்ஸ் நாட்டின் ஆயர்கள் என்ற முறையில், தற்போதைய, மற்றும் வருங்காலத் தலைமுறையைக் கருத்தில் கொண்டு, இயற்கையைப் பாதிக்காத வளர்ச்சித் திட்டங்களுக்கு ஊக்கமளிக்கவேண்டிய தார்மீகக் கடமை தங்களுக்கு உள்ளது என்பதையும் ஆயர்கள் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.    

Comment