No icon

குடந்தை ஞானி

கானடா நாட்டு ஆயர்கள் ஏற்படுத்தியுள்ள புதிய பிறரன்பு அமைப்பு

குணப்படுத்தல் மற்றும் ஒப்புரவு நடவடிக்கைகளுக்கென புதிய பிறரன்பு அமைப்பு ஒன்றை உருவாக்கி, அதனை அரசுடன் பதிவு செய்யும் திட்டத்தை கானடா நாட்டு ஆயர்கள் அறிவித்துள்ளனர்.

பூர்வீக குடிகளுடன் ஒப்புரவு நடவடிக்கைளை மேற்கொள்வதற்கு 3 கோடி டாலர்கள் செலவில் திட்டம் ஒன்றை ஏற்கனவே அறிவித்துள்ள ஆயர்கள், கானடாவின் 73 மறைமாவட்டங்களும் இதற்குத் தங்களின் பங்களிப்பை வழங்கும் எனவும் உரைத்துள்ளனர் .

பூர்வீகக் குடிமக்களின் குழந்தைகளுக்கு கல்வி வழங்குவதற்கென, தங்கும் விடுதிகளில் அவர்களுக்கு இடமளித்த காலக்கட்டத்தில் நடந்த அத்துமீறல் நடவடிக்கைகள் குறித்து கவலையை வெளியிட்ட கானடா ஆயர் பேரவைத் தலைவர், ஆயர் ரெய்மண்ட் பைசைன் அவர்கள், பூர்வீகக் குடிமக்களின் ஞானம் மற்றும் அனுபவத்தின் துணைகொண்டு, ஒப்புரவு நடவடிக்கைகள் தலத் திருஅவையால் தொடர்ந்து நடத்தப்படும் என்றார்.

வெளிப்படைத்தன்மையுடன் கூடிய ஆயர்களின் நிதியுதவியுடன் எடுத்துநடத்தப்படவுள்ள இந்த ஒப்புரவுப் பணியில், கடந்த கால காயங்களைக் குணப்படுத்துதல், இணக்க வாழ்வை உருவாக்குதல், பூர்வீக இனமக்களின் கலாச்சாரம் மற்றும் மொழியை மீண்டும் உயிர்த்துடிப்பாக்குதல், கல்வி வழங்கல், சமுதாயக் கட்டமைப்பை எழுப்புதல், பூர்வீகக் குடிமக்களின் ஆன்மிகத்தையும் கலாச்சாரத்தையும் ஊக்குவிக்க கலந்துரையாடல் நடத்துதல் ஆகியவை உள்ளடக்கப்பட்டிருக்கும் எனவும் கானடா நாட்டு ஆயர்கள் தெரிவித்துள்ளனனர்.

Comment