No icon

குடந்தை ஞானி

மியான்மரில் இராணுவ ஆட்சிக்கவிழ்ப்பின் முதலாமாண்டு நிறைவு

மியான்மார் நாட்டில் இராணுவத்தால் ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்று, பிப்ரவரி முதல் தேதி, ஓராண்டு நிறைவுறும் நிலையில், மக்கள் அமைதியின் கருவிகளாகச் செயல்படவேண்டும் என்ற அழைப்பை அந்நாட்டு ஆயர்கள் விடுத்து, ஒருமைப்பாட்டை வெளியிட்டுள்ளனர்.

மியான்மார் நாட்டின் திருஅவையும், கிறிஸ்தவர்களும், குணமளிப்பவரே காயம்படுகின்ற நிலையில் இருக்கின்றபோதிலும், அமைதியின் கருவியாகச் செயல்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய யாங்கோன் நுஹார், கர்தினால் சார்லஸ் போ அவர்கள், மக்களின் துயர்களையும், பசிச் சாவுகளையும், ஏமாற்றங்களையும், எதிர்ப்புணர்வுகளையும் திருஅவை புரிந்துகொள்கிறது என உரைத்தார்.

வன்முறையான எதிர்ப்பு நடவடிக்கைகள் வழியாகவே மியான்மார் பிரச்சனைக்குத் தீர்வுகாண முடியும் என நம்பும் மக்களை நோக்கி நாங்கள் கூற விரும்புவதெல்லாம், ‘இதைத்தவிர வேறு வழிகள் உள்ளனஎன்பதே எனவும் மியான்மார் ஆயர் பேரவையின் தலைவர், கர்தினால் சார்லஸ் போ எடுத்துரைத்தார்,.

மியான்மாரில் தற்போது இடம்பெற்று வருவது இயேசுவின் சிலுவைப்பாதையின் தொடர்ச்சியாகத் தெரிவதாகவும், மியான்மார் முழுவதும் ஒரு போர்க்களம் போல் காட்சியளிப்பதாகவும், தனது கவலையை வெளியிடும் கர்தினால் சார்லஸ் போ அவர்கள், குழப்பம், மோதல் மற்றும் மனிதத் துயர்களால் இந்நாடு நிறைந்து காணப்படுவதாகவும் தெரிவித்தார்.

.நா.வின் மனிதாபிமான விவகாரங்களுக்கான துறையான OCHAவின் கூற்றுப்படி, மியான்மாரின் 5 கோடியே 40 இலட்சம் மக்களில், 2 கோடியே 50 இலட்சம் பேர் ஏழ்மையில் வாழ்கின்றனர்.

Comment