No icon

திருமணத்திற்கு உண்மையான அன்பு அவசியம்

திருமணத்திற்கு உண்மையான அன்பு அவசியம்

ஜனவரி 28 அன்று வத்திக்கானில் ரோமன் ரோட்டா அப்போஸ்தலிக்க நீதிமன்றத்தின் உறுப்பினர்களிடம் கலந்துரையாடிய திருத்தந்தை, திருமணத்திற்குப் பரந்த மனப்பான்மையுடைய ஒன்றிப்பும், உண்மையான அன்பும் தேவைப்படுகின்றது எனக் கருத்து தெரிவித்துள்ளார்.

நீதித்துறை ஆண்டின் துவக்கமாக ரோமன் ரோட்டா நீதிமன்றத்தின் நீதிபதிகள், வழக்கறிஞர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளைச் சந்தித்து பேசிய திருத்தந்தை, திருமணம் எனும் அருளடையாளத்தில் ஒன்றிப்பு, பிரமாணிக்கத்தின் முக்கியத்துவம் பற்றிப் பேசினார். பிரமாணிக்கம் என்பது ஒரு கொடை என்றார். மேலும் ரோமன் ரோட்டா உறுப்பினர்கள், ஒன்றிப்பு, பிரமாணிக்கம் போன்றவற்றின் முக்கியத்துவத்தை தங்கள் பணியில் அடிக்கடி அனுபவித்து வருகின்றார்கள் எனப் பாராட்டினார். பரந்த மனப்பான்மையுடைய ஒன்றிப்பு மற்றும் உண்மையான அன்பு நிறைந்த வாழ்வுக்குத் தம்பதியர் தங்களையே தயாரிப்பதற்கு திருஅவையின் மறைப்பணியாளர்கள் உதவ வேண்டும் என்றார்.

புனித பவுலின் நற்செய்திப்பணியில் அக்கிலா - பிரிஸ்கா தம்பதியர் உதவியதைப்போன்று, இன்றைய தம்பதியினரும் திருஅவையின் மேய்ப்புப்பணிக்கு உதவ வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

Comment