No icon

ஓய்வு

ஞானப் பிரகாசம் அன்று ஓய்வு பெறும் நாள். அவர் அலுவலகத்தில் அவருக்கு ஒரு பிரியா
விடைக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். சுமார் ஐம்பது பேர் அக்கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். சிலர் அவரைப் புகழ்ந்து பேசினர்.
அவரது அயராத உழைப்பையும் நேர்மையையும் பற்றித் தங்கள் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
அலுவலகத்தின் மேலாளரும், அவருக்கு மாலை அணிவித்துக் கௌரவித்து சில நிமிடங்கள் பேசினார். சிறிய சிற்றுண்டியும், காப்பியும் எல்லா ருக்கும் வழங்கிய பின்பு, அவர் எல்லாரிடமும் கைகுலுக்கி விடை பெற்றார்.
அவரை ஆட்டோவில் அனுப்பி வைத்தார்கள். அவருக்குச் சேமிப்புத் தொகை யாக ரூ.2 இலட்சம் வழங்கி இருந்தார்கள். ஓய்வூதியமும் உண்டு. ஒருவரிடம்  அவர் ரூபாய் ஐம்பதாயிரம் கடன் பட்டிருந்தார். அதை அந்தப் பணத்திலிருந்து திருப்பிக் கொடுக்க வேண்டும்.
அவர் தன் மனைவி கிரிஜாவிடம் தனக்கு இரண்டு
லட்சம் சேமிப்புப் பணம் கிடைக் கும் என்று கூறியிருந்தார். இப்போது ஒன்றரை இலட்சம் தான் கிடைத்தது என்றால் சந்தேகப்பட மாட்டாளா? என்ன
செய்வது? மீதிப் பணம் எங்கே
என்று கேட்டால் என்ன பதிலளிப்பது? இதே யோசனை அவருக்குத் திரும்பத் திரும்ப வந்து கொண்டிருந்தது.
வீட்டின்முன் ஆட்டோ நின்றவுடன் பணத்தைக் கொடுத்துவிட்டு,உள்ளே நுழைந்ததும், "என்ன உங் களுக்கு, உங்கள் கழுத்தில் போட்ட மாலையைக் கழட்ட மனமில்லையா?" என்று சிரிப்பு டன் கேட்டாள் கிரிஜா.
"ஏதோ யோசனையாகவே இருந்ததால் கழட்டவே மறந்து விட்டேன்".
"உட்காருங்கள், நான் காப்பி போட்டுக் கொண்டு வருகிறேன்", என்று உள்ளே போனாள் கிரிஜா.
"அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் கிரிஜா. அலுவலகத்திலேயே கொடுத்தார்கள். குடித்து விட்டு வந்து விட்டேன்" என்றார். பிறகு சோபாவில் அமர்ந்தார்.
"என்ன ஒரே யோசனை
யாகவே இருக்கிறீர்கள்? ’இனி மேல் பென்ஷன் கம்மியாகத்தான் வரும் எப்படி சமாளிக்கப் போகிறோம்?’ என்று நினைக் கிறீர் களா?"
"அதில்லை, உன் னிடம், நான் எனக்கு இரண்டு இலட்சம் பணம் கிடைக்கும் என்று கூறினேன் அல்லவா?"
"ஹூம் அதற்கென்ன இப்போ?"
"இல்லை இப்போ ஒன்றரை இலட்சம்தான் எடுத்துக் கொள்ள முடியும்".
"ஏன் என்ன ஆயிற்று மீதி பணம்?"
"இல்லை நான் ஒருவரி டம் ஐம்பதாயிரம் கடன் வாங்கி இருந்தேன். அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்."
"அப்படி ஏதும் பெரிய செலவு நமக்கு வரவில்லையே, ஏன் கடன் வாங்கினீர்கள்?" என்று ஆச்சரியத்துடன் நெற்றியைச் சுருக்கியபடி கேட்டாள்.
"நம்ப பிள்ளை ஜான் படிப்பு செலவுக்குத்தான்" என்றார்.
"உங்களை நம்பி அவ் வளவு பெரிய தொகையை யார்
கடன் கொடுத்தார்கள்? ஆச்சரிய மாக இருக்கிறதே?"
"யாரு கொடுப்பா, உங்க அண்ணன்  தேவசகாயம்தான்!"
"என்ன அண்ணனா! உங் களுக்கு வெட்கமாக இல்லை? அவரிடம் கேட்பதற்கு... எனக்கு
நியாயமாக் கொடுக்கவேண்டிய பெரிய தொகையை அவர் கொடுக்
கவே இல்லை! அப்பாவிற்குப் பிறகு அந்த வீடு எங்க இரண்டு பேருக்குத்தான் சொந்தம். அந்த
வீட்டில் சௌகரியமா உக் காந்து இருக்காரே! ’தங்கச்சி இந்தாம்மா... நான் இந்த வீட்டை எடுத்துகிறேன். இந்தா இந்தப் பணத்தை நீ எடுத்துக்கோனு கொடுக்ககூடாது? எவ்வளவு சுயநலமா எல்லாத்தையும் தானே எடுத்துக் கிட்டாரு.  அவர் என்னைப் பார்த்து சிரித்தாலும் நான் சிரிக் கிறதே இல்லையே !"
"என்னம்மா கிரிஜா, அண்ணனைப்போய் இப்படி யெல்லாம் பேசுறே! இந்த அற்ப பணத்தாலே சண்டை போட்டுக் கொள்வது நன்றாகவே இல்லை. அவர் கஷ்டம் எனக்குத்தான்
தெரியும். பெண்கள் இரண்டை
யும், தன் கையிலிருந்த பணத்
தைக் கொடுத்து கட்டிக் கொடுத்து விட்டு இப்போ ஓய்
வூதியம் பத்தலேன்னு, ஒரு
பல சரக்கு கடையிலே காலை யிலிருந்து இராத்திரி ஒன்பது மணிவரை கணக்கெழுதுறாரு; முட்டி வலியிலே துடிக்கிறாரு".
"ஆமா, எல்லாம் வேஷம்" என்று கூறியபடி சென்று விட்டாள் கிரிஜா.
ஞானப்பிரகாசம், தேவசகாயம் கடைக்கு மாலை மூன்று மணியளவில் அவ்வளவு கும்பல் இருக்காது என்று சென்றார்.
"வாங்க ஞானம், நானே உங்க வீட்டுக்கு வரலாம்னு இருந்தேன். என்ன கிரிஜாவுக்கு என் மேலே கோபமா? "அண்ணன் சௌக்கியமா இருக்கீங்களா?" என்று கேட்க ஓடி வருவா, இப்ப இப்படி முகத்தை திருப்பிக்கிட்டு ஓடுறா?
"எல்லாம் பணம் படுத்தும்
பாடு" என்றார் ஞானப் பிரகாசம்.
"என்ன சொல்லுறே நீ?"
"அதெல்லாம் இப்ப ஒண்ணும் வேண்டாம். அவ உங்களை புரிஞ்சிக்கலே... அம்புட்டு
தான். நான் உங்ககிட்ட ஆறு மாதத்திற்கு முன்னால ஐம்பதாயிரம் கடன் வாங்கினேனே அதைத் திருப்பிக் கொடுக்க வந்தேன். இந்தாங்க அந்தப் பணம். என்னால வட்டி கொடுக்க முடியலே மன்னிச்சிக்கங்க".
"அட என்னப்பா நீ நான் உனக்கு கடனா கொடுக்கலே. நான் அப்பா வீட்டுலே இருக்கிறதாலே என்னால முடிஞ்ச தொகையை கொடுத்தேன். நான் சொன்னதை நீ புரிஞ்சுக்கலே போலிருக்கு நீ இந்தப் பணத்தை அவள் கிட்டே கொடுத்து உன் அண்ணன் கொடுத்தப் பணம்னு சொல்லு"
"சரி... சரி..." என்று சொல்லி சிரித்துவிட்டு விடை பெற்றார் ஞானப்பிரகாசம்.
அவர் வீட்டினுள் நுழைந்தவுடன், "என்ன கடனை திருப்பிக் கொடுத்துவிட்டு வந்துட்டீங்களா?" என்று கிண்டலாக கேட்டாள் கிரிஜா.
"அட அதை உங்க அண்ணன் கடனாகவே கொடுக்கலையாம் . உனக்குத்தான் கொடுத்திருக்கார். நான்தான் சரியா காதில் வாங்கி கொள்ளலே" சரி உன் அண்ணன் உனக்குத் தன் கையிலிருந்த பணத்தைச் செலவழித்து கல்யாணம் செய்து வைத்தாரே... அவர் துரோகம் செய்வாரா. நீ யோசிக்க வேண்டாம்?
எல்லாப் பெண்களைப் போல கிரிஜாவும், புடவைத் தலைப்பை கண்களில் வைத்துக் கொண்டு ’ஓ’ வென்று அழ ஆரம்பித்து விட்டாள்.
"எதுக்கு இப்ப அழறே... இந்தப் பணத்தை அலமாரியில் வை. நீ ஆசைப்பட்டபடி ஒரு செயின் வாங்கிக்க".
"ஆமா சாகப்போகிற எனக்கு அது ஒண்ணுதான் குறைச்சல்!" என்று சிரித்தாள் கிரிஜா.
"என்ன சாகப்போறியா... இன்னும் முப்பது வயது பெண்ணைப் போல எவ்வளவு அழகா இருக்க... நாம் சாகவா பிறந்தோம்? வாழத்தானம்மா பிறந்தோம்". அவரைப் புன்முறுவலோடு பார்த்துவிட்டு உள்ளே சென்றாள் கிரிஜா.

Comment