No icon

கொரோனா நோய்

கொரோனா நோய் தொற்றிலிருந்து நாம் எப்போது வெளியே வர முடியும்? ஆம், இதிலிருந்தும் நாம் நிச்சயமாக வெளியே வரலாம். அதற்கு ஒரே வழி, நம்முடைய யுனிவர்சல், உச்ச மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். அவர் அதிசயங்களின் தேவன். அவரின் தழும்புகளால் நாம்சுகம் ஆகிறோம். அவரிடம் எல்லா வகையான மருந்து களும் உள்ளன. அவை உலகில் வேறு எங்கும் இல்லை. எந்த வகையான கொரோனாவையும் குணப்படுத்த கடவுளால் முடியும்.
எனவே, இந்த உலகளாவிய எதிரியின் பிடியிலிருந்து வெளிவருவதற்கான ஒரே வழி, நாம் நம் பாவ வாழ்க்கையிலிருந்து வெளியே வர வேண்டும்.
நாம் நம் பாவ வாழ்க்கையிலிருந்து வெளியே வராவிட்டால், கடவுள் நம்மைப் பாதுகாத்து ஆசிர்வதிப்பார் என்று எதிர்பார்க்க முடியாது. நாம் அவருக்கு உரியவராகமாறினால் மன்னிப்பைவழங்கும்படி நாம் உடனடி யாக கடவுளிடம் கேட்கலாம்.ஏனென்றால் நம்முடைய கடவுள் “மன்னிப்பின் கடவுள்”.

1.மீட்க இயலாதவாறு ஆண்டவரின் கை குறுகிவிடவில்லை. கேட்க முடியாதவாறு ஆண்டவரின் காது மந்தமாகி விடவில்லை.

2. உங்கள் தீச்செயல்களே உங்களுக்கும், உங்கள் கடவுளுக்கும் இடையே பிளவை உண்டாக்கியுள்ளன. உங்கள் பாவங்களே அவர் செவி சாய்க்காதவாறு அவரது முகத்தை உங்களுக்கு மறைத்துள்ளன.

3. உங்கள் கைகள் இரத்தப் பழியால் கறைப்பட்டுள்ளன. உங்கள்
விரல்கள் தீமையால் தீட்டுப்பட்டுள்ளன;  உங்கள் உதடுகள் பொய்களைஉதிர்க்கின்றன. உங்கள் நாக்கு தீயவற்றை முணு முணுக்கின்றது எசா 59:1-3.

சில சந்தர்ப்பங்களில், அரசாங்கம் “தொழில்களுக்கு வரி - விடுமுறை அளிக்கிறது” என்று செய்தித்தாளில் படித்திருக்கி றோம். அதே வழியில் இப்போது நம் கடவுளே “மார்ச் 25 முதல் நமக்கு விடுமுறை வழங்கியுள்ளார். நாம் எப்போதும் மிகவும் பிஸியாக இருப்பதால் நம்முடைய அன்றாட வேலையில் நாம் இறுதியாக படைப்பாளரை மறந்து விட்டோம் என்பது ஒரு நிதர்சனமான உண்மை. இப்போது, இது கடவுள் நமக்கு அளித்த ஒரு பொன்னான வாய்ப்பாகும். அதை உடனடியாக பயன்படுத்த வேண்டும்.
ஆமாம், மனிதன் முற்றிலும் ஒழுக்கக் கேடான வழியில் நடந்து கொண்டிருப்பதால், படைப்பாளன் மனிதனை உருவாக்கிய தற்காக மிகவும் வருந்துகிறார் என்பதில் சந்தேகமில்லை. ஆகவே நம்முடைய தவறுகளை உணர்ந்து, மனந்திரும்பி, ஜெபிக்க அவர் இந்த விடுமுறையை வழங்கியுள்ளார்.
ஆண்டவர் கூறுவது இதுவே; “நீ திரும்பி வந்தால் நான் உன்னை முன்னைய நிலைக்குக் கொண்டு வருவேன். எரே 15:19இந்த பயங்கரமான கொள்ளைநோய் வெளியேற்றுவதற்கு நாம் பின்பற்ற வேண்டிய

சில கொள்கைகள் உள்ளன.
1.நேர்மையான மனந்திரும்பி, இப்போது வரை நாம் செய்த பாவங்களுக்காக வருந்தவும், மன்னிக்கவும் சர்வ வல்லமையுள்ளவரிடம் ஜெபிக்க வேண்டும். பெரியதாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி, நாம் ஒருபோதும் பாவம் செய்ய மாட்டோம் என்று கடவுளுக்கு முன்பாக சபதம் செய்யவேண்டும். ஏனென்றால் பாவம் எந்த ஒரு வடிவத்திலும் பாவமாகவே இருக்கிறது. நாம் பாவம் செய்யவில்லை என்றால், நாம் தொடர்ந்து கடவுளோடு வாழ்ந்து அவரை நேசிக்க முடியும். கடவுளும் நம்மில் வாழ முடியும். அவர் நம் இருதயத்திற்காக பேராவலோடு ஏங்குகிறார்.

2.ஏழைகளுக்கும், தேவையில் உழல்வோருக்கும் உதவ வேண்டும் ஏழைகளையும் தேவையில் உழல்வோரையும் முதலில் அடையாளம் காணவேண்டும். முதலில் உண்மையிலேயே தேவைப்படும் நமது சொந்த உறவினர்களிட மிருந்து ஆரம்பிக்கலாம். இரண்டாவதாக, நாம் நம் நண்பர்களுக்கும் அயலாருக்கும் உதவ வேண்டும். மூன்றாவதாக நாம் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.

3.திருச்சபைக்கு நமது பங்களிப்புகளை வழங்குவது நமது தலையாய கடமையாகும். ஏனென்றால், கடவுளின் செய்திகளைப் பரப்புவதற்கும், கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையில் ஆன்மிக கூட்டணியைப் பேணுவதற்கும் மேலும் மேலும் நேர்மையான, ஆன்மிக ஊழியர் களைப் பயிற்றுவிக்க திருச்சபைக்கு நிதி தேவைப்படுகிறது.

“கடவுள் ஒளிமயமானவர்” “அவரே அவ்வொளி”
“தயவு செய்து வெளிச்சத்தை இடுங்கள்”
ஆண்டவரே என் ஒளி. அவரே என் மீட்பு. திபா 27:11.

எல்லா தீய எண்ணங்களையும் தவிர்த்து, இந்த தருணத்திலிருந்தே நாம் கடவுளுடன் மிக நெருக்கமாக உறவுகொள்ள வேண்டும். இந்த கட்டுரையின் சில வாசகர்கள் எனக்கு ஒரு கேள்வியை எழுப்பக் கூடும். “ஐயா, இதுபோன்ற ஒரு கட்டுரையை எழுதுவது மிகவும் எளிதானது. ஆனால் தாங்கள் மேலே குறிப்பிட்டுள்ள 3 விஷயங்களையும் நடைமுறைக்குக் கொண்டு வருவது மிகவும் கடினம். நீங்கள் எங்கு நிற்கிறீர்கள்?

ஆம், இது நம் மனதில் எழும் ஒரு நடைமுறை கேள்வி தான்.

இதற்கு என் பதில்: நான் எழுதுவது உண்மையிலும் உண்மைதான். கடந்த காலங்களில் நான் தெரிந்தோ தெரியாமலோ, ஒரு பெரிய பாவியாக இருந்தேன், அந்தக் காலக்கட்டத்தில், நான் செய்ததெல்லாம் தோல்வியில்தான் முடிந்தது. திடீரென்று, ஒரு கட்டத்தில், என் கெட்ட செயல்களை எல்லாம் விட்டுவிட்டு கடவுளை அணுக வேண்டும் என்று கடவுளின் ஆவியானவர் என்னை உந்தித்தள்ள ஆரம்பித்தார். இந்த உண்மையை கடவுள் என்னை உணரச் செய்தார். நான் என் பாவங்களுக்காக வருந்தினேன், மனந்திரும்பினேன். நான் மீண்டும் பாவம் செய்யமாட்டேன் என்று தீர்மானித்தேன். மன்னிப்புக்காக இறைவனிடம் கூக்குரலிட்டேன்.

உண்மையான, அன்பான இறைவன் என்னை சாத்தானின் வலையில் இருந்து விடுவித்தார். (பாவ சேற்றில் இருந்து என்னை அவர் தூக்கியெடுத்து விட்டார்) ஆண்டவர் என்னை நோவாவின் பேழையில் வைத்து என்னைக் காப்பாற்றினார். ஆலயத்திலும், என் வீட்டிலும், என் தனி படுக்கையறையிலும் பல நாட்கள் தவறாமல் பிரார்த்தனை செய்துகொண்டிருந்தபோது இந்த மாற்றம் எனக்குள் ஏற்பட்டது. நான் பரிசுத்த திருவிவிலியத்தை படித்து கடவுளிடம் ஜெபிக்கும்போது, அவருடைய உத்வேகம் என் மனதில் வந்தது. நான் கடவுளிடமிருந்து ஒரு பெரிய பரிசை வென்றது போல, இப்போது எனக்குள் மிகவும் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். மீண்டும், இப்போதெல்லாம் நான் கடவுளுக்கும் மனிதருக்கும் எதிரியான பாவத்தில் இருந்து, முற்றிலும் விடுபட்டுள்ளேன் என்பதை நான் உங்களுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறேன்.

கடவுளுக்கே புகழ்!
மனம் மாறத் தேவையில்லாத தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சியை விட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் (இயேசு) உங்களுக்குச் சொல்கிறேன். லூக் 15:7
நான் திருவிவிலியத்தை பற்றி முழுமையாக அறிந்திருக்கவில்லை. ஆனால் பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு, திருப் பாடல்கள் மற்றும் நீதிமொழிகள் போன்றவற்றை பலமுறை கடந்து செல்லும்போது, நான் கொஞ்சம் தெரிந்துகொண்டேன். அந்த சிறியசெய்தி எனக்கு ஒரு உண்மையான வாழ்க்கையை அளித்தது. திறம்பட ஜெபிப்பது எவ்வாறு என எனக்குத் தெரி யாது. ஆனால் புதிய ஏற்பாடும், திருப்பாடல்களும் எவ்வாறு ஜெபிக்க வேண்டும் என்று எனக்குக் கற்றுக் கொடுத்தது, அதில் என்ன அற்புதமான ஜெபம் இருக்கிறது. இவை எனக்கு ஒரு புதிய ஆவியைக் கொடுத்தது. நீதிமொழிகள் நிச்சயமாக என்ஜெபங்களுக்கான பதில்களைக் கொடுத்து எனக்கு வழிகாட்டியது. உண்மையாக, கடவுளின் வார்த்தை என்னை பாவத்திலிருந்து மீட்டது.

மேற்கண்ட மூன்று கொள்கைகளை நாம் கடைபிடித்தால், நாம் சரியானவற்றை செய்கிறோம் என்று நமக்குள் மன உறுதி இருந்தால், நம்முடைய வாழ்நாள் முழுவதும் சரியான விஷயங்களை, அதற்கு உரிய நேரத்தில், நேர்த்தியாய் நம்முடைய ஆண்டவராகிய இயேசுவின் பெயரால் நிச்சயமாக செய்து முடிப்போம். இது உறுதி. கடவுளின் வெளிச்சம் நம்மீது பிரகாசிக்கும்போது எந்தவிதமான கொள்ளை நோயும் நம்மை சேதப்படுத்த முடியாது. கொரோனா, நாங்கள் உன்னை வெறுக்கிறோம். மீண்டும் எங்கள் வாழ்வில் உன்னை காண நாங்கள் விரும்பவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்டவரே நீர் எங்களுடன் இருக்கிறீர். ஆண்டவரே, தயவு செய்து எங்களை உமது வெளிச்சத்திற்கு இட்டுச் செல்லும்

ஆண்டவரே உனக்கு என்றுமுள ஒளியாக இருப்பார். உன் கண்ணீரின் நாள்கள் ஒழிந்துபோம் (எசா 60:20).                                     
      (முற்றும்)

Comment