No icon

10. இவரே உம் தாய்

மரியின் முத்துக்கள்


அன்னை மரியா நம் தாய் என விவிலியம் வெளிப்படையாகப் பேசவில்லை என்று பிரிவினை சகோதரர்கள் சொல்லி வருகிறார்கள். சிலுவையின் அடியில் நின்ற தம் அன்னையை இயேசு "இவரே உம் தாய்" எனக்கூறி அவரைத் தம் அன்புச் சீடராகிய யோவானுக்குத் தாயாகக் கொடுக்கிறார். யோவான் இங்கு தனிப்பட்ட நபர் அல்ல; நம் அனைவருக்கும் பொதுவானவர். இதனைப் புனித பெர்னார்து அழகாய் விளக்குகிறார். அவரை ’அம்மா’ அல்லது ’தாயே’  என்று அழைத்திருந்தால் அவர் இயேசுவுக்கு மட்டும் தாய் என்பதாக அர்த்தமாகிவிடும். இங்கு
மரியா இயேசுவினால் மீட்கப்பட்ட அனைவருக்கும் தாயாகின்றார் என்பதைக் குறித்துக் காட்ட அவரை
அனைவருக்கும், தாயாக்குகின்ற பொதுமைச் சொல்லான ’பெண்ணே’ என்று அழைக்கின்றார். அதேபோல, சிலுவையடியில் "யோவானே" என்று அழைக்க வில்லை. தம் ’சீடரிடம் என்று குறிப்பிட்டுள்ளார். ஒட்டு மொத்த விசுவாசிகளின் பிரதிநிதியாக யோவான் சித்தரிக்கப்பட்டுள்ளார். இங்கு யோவான் நம்மில் ஒருவர். திருஅவையின் மொத்தப் பிரதிநிதி.
வரலாற்றுப் பார்வையில்
அன்னை மரியாவை கிறிஸ்தவ மக்களின்
தாயாகக் கருதும் மரபு மூன்றாம் நூற்றாண்டிலிருந்தே தெளிவாகக் காணக்கிடக்கிறது. நான்காம் நூற்றாண்டில் அன்னை மரியாவை ’வாழ்வோரின் தாய்’ என புனித எப்பிபானியுஸ் அழைக்கிறார். 5 ஆம் நூற்றாண்டில் புனித அகுஸ்தின் அவரை ’உண்மையிலே கிறிஸ்துவின் உறுப்பினர்களுக்குத்
தாய், ஏனெனில் அந்த தலையானவரின் உறுப் பினராக நம்பிக்கை கொண்டோர் திருஅவையில் பிறக்கும்படி அன்பினால் அவர் ஒத்துழைத்தாள் என்கிறார். ’அருள் முறையிலான தாய்’ ’அருள்
திட்டத்தில் தாய்மை’ என திருத்தந்தை 2 ஆம் யோவான் பவுல் கூறுகிறார்.
2 ஆம் வத்திக்கான் சங்க ஒளியில்
இரண்டாம் வத்திக்கான் சங்கம் அன்னை மரியாவை, ’கிறிஸ்துவின் தாய், மக்களின் தாய், சிறப்பாக நம்பிக்கையாளர்களின் தாய்" (திருஅவை 54) எனக் குறிப்பிட்டுள்ளது. இரண்டாம் வத்திக்கான் சங்கம் 3 வது அமர்வின் நிறைவு நிகழ்வின்போது (1964 ஆம் ஆண்டு நவம்பர் மாதம்) திருஅவை பற்றிய கொள்கைத் திரட்டு வெளியிட்டது. இவ்வேட்டின் இறுதிப்பகுதியில் 8 ஆம் அதிகாரத்தில் மரியன்னை பற்றிய சங்கத்தின் படிப்பினை வெளியிடப்பட்டது. இந்த ஏட்டை வெளியிட்டு உரையாற்றிய திருத்தந்தை 6 ஆம் பவுல் "மரியா திருஅவையின் தாய்" என அறிக்கையிட்டார். மேலும் திருத்தந்தை அவர்கள் மரியா திருஅவையின் மாதிரி உறுப்பினர். திருஅவை ஆற்றவேண்டிய இறையாட்சிப் பணிக்கும் அதற்கு இன்றியமையாத செபவாழ்விற்கும் மரியா தலைசிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்கிறார் என்று குறிப்பிடுகிறார்.
எவ்வாறு திருஅவையின் தாயாகிறார் அன்னை மரியா?
இயேசு தம் நம்பிக்கையாளர்களை தம் சகோதரர்கள், சகோதரிகள் என ஏற்றுக் கொள்கின் றார் (மாற் 3:20) என்றால் பாவத்திலிருந்து நம்மை
மீட்ட இயேசுவை ஈன்றெடுத்த பரிசுத்த தாய், இயேசுவினால், ’இவரே உம் தாய்’ என்று அறிவிக்கப்பட தாய் "உலக மக்களின் தாய்" என்பதில் சந்தேகம் இல்லை.
நீங்கள் கிறிஸ்துவின் உடல்; ஒவ்வொரு வரும் அதன் தனித்தனி உறுப்புகள் (1 கொரி 12:27) என்ற இறைவார்த்தைக்கேற்ப அன்னை மரியா நமது தாய்தான்!
மனுக்குலத்தின் மக்கள் அனைவரும் இயேசு என்னும் திராட்சைச் செடியுடன் இணைந்த கொடிகளாக இணைந்திருக்கிறோம். இங்கு இறை உறவை மீட்டுத் தருகிறார் நம் அன்னை. இந்த உறவின் படி அதாவது ஆன்மிக உறவின்படி அன்னை
மரியா மனுக்குலம் முழுவதற்கும் தாயாகின்றார். அன்னை மரியா உன்னையும் என்னையும் கல்வாரியில் பெற்றெடுக்கிறார். கல்வாரியில் கிறிஸ்தவர்களின் தாயாக மாறுகின்றார். திருஅவை தூய ஆவியால் கருவுற்று கடவுளிட மிருந்து பிறந்துள்ளது. திருஅவையினர் தங்கள் மகிழ்ச்சி நிறை தாய்நாடு வந்து சேரும்வரை நம் அன்னை மரியா தாய்க்குரிய அன்போடு காத்து வருகின்றார்.
மனுக்குலத்தின் தாயாக அன்னை மரியா
உலகில் எல்லாக் குழந்தைகளும் ஒரு தாயி
னால் வளர்க்கப்படுகிறார்கள். தாய் தன் குழந்தையை உணர்வுப் பூர்வமாக, அறிவுப் பூர்வ
மாக, உறவுகளின் தொடர்பு, கல்வி அறிவு ஆகிய
வற்றைக் குறித்து தனது குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுத்து வளர்க்கிறாள். 97ரூ குழந்தைகள் தாயின் பண்பு நலன்களைக் கொண்டுள்ளன.
நமது அன்னை மரியா உலகத் தாய்மார்களைவிட மேலானவர்கள். இறையேசுவைப் பெற்றெடுத்த அன்னை இன்று நமக்குத் தாயாக அமைந்திருப்பது அற்புதமானது.
1. ஆறுதல் தருபவர் அன்னை மரியா!
தாய் தன் பிள்ளையைத் தேற்றுவதுபோல் நான் உங்களைத் தேற்றுவேன் (எசாயா 66:13) என்று நம்மைத் தேற்றி நமக்கு ஆறுதல் தருபவர் நம் அன்னை மரியா.
2. பரிந்து பேசும் அன்னை மரியா
கானாவூர் திருமண விழாவில் இரசம் தீர்ந்து
போகவே, இயேசுவின் தாய் அவரை நோக்கி, ’திராட்சை இரசம் தீர்ந்து விட்டது" என்றார் (யோவா
2:3-5). திருமண வீட்டாரின் குறைகளைப் போக்க,
அவர்களுக்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்க
இயேசுவிடம் பரிந்து பேசி குறைகளை நிறைவாக்கிக்
கொடுத்த அன்னை மரியா இன்னும் நமக்காகப் பரிந்து பேசுகிறார்.
3. பாதுகாக்கும் அன்னை மரியா
இஸ்ரயேல் குழந்தையாய் இருந்தபோது அவன்மேல் அன்பு கூர்ந்தேன்; எகிப்திலிருந்து என் மகனை அழைத்து வந்தேன் (ஓசே 11:1). நம்மை ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்து பராமரித்து வரும் அன்னையாக இருக்கிறார்.
4. அன்னை மரியா ஓர் சிறந்த ஆசிரியர்
அன்னை மரியா இயேசுவுக்கு எப்படி ஓர் சிறந்த ஆசிரியராக இருந்து பயிற்றுவித்தாளோ அதுபோல நமக்கும் ஆசிரியராக இருந்து வழிநடத்தி
வருகிறார். இதனை லூக் 2:46ல் இவ்வாறு வெளிப் படுகிறது. ’அங்கே அவர் போதகர் நடுவில் அமர்ந்து அவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டும்
அவர்களிடம் கேள்விகளை எழுப்பிக் கொண்டு மிருந்தார்.
5. சிறந்த பண்புகளை கற்றுத் தருபவர் நம் அன்னை மரியா
நீதிமொழி 31:1-9ல் திக்கற்றவர்கள் சார்பாக பேசவும், எளியோருக்கும் வறியோருக்கும் நீதி வழங்கும் தன்மையையும் தன் மகனுக்கு கற்றுக் கொடுத்ததுபோல நமக்கும் கற்றுத் தருகிறார்.
6. நம் துன்ப நேரங்களில் பங்கெடுக்கும் அன்னை மரியா
(யோவான் 19:25) சிலுவையடியில் எல்லாரும் இயேசுவை விட்டுவிட்டுச் சென்றபோதிலும் தன் மகனுடன் இருந்து ஆறுதல் அளித்ததுபோல நம் துன்ப நேரங்களிலும் நம் மோடு இருந்து பங்கெடுக் கிறார் நம் அன்னை மரியா
7. சோதனைகளில் இருந்து நம்மைக் காக்கும் அன்னை மரியா
சாத்தான் மாதாவின் பிள்ளைகளைப் பாவச் சூழ்நிலைகளை உண்டாக்கி, அன்னையிடமிருந்து பிரித்து சென்றுவிடுகிறது. அதன் காரணமாக அன்னை மரியா சாத்தானை நசுக்கி நம்மை மீட்பின்
பாதையில் இறைமகனிடம் அழைத்துச் செல்கிறார்கள்.
8. மீட்புப்பணி தொடர நம்மோடு பயணிக்கும் அன்னை மரியா
மீட்பு இன்றும் தொடர்கிறது. அன்றாடம் நடைபெறும் திருப்பலி வாயிலாகத் தொடர்கிறது. அன்னை நம்மைத் திருப்பலியில் இணைத்துக் கொண்டு மீட்பு பணியாற்றி வருகிறார்கள்.
9. நம்பிக்கைக்குரிய சீடனாக நம்மை வழிநடத்தும் அன்னை மரியா
இறைவனின் நம்பிக்கைக்குரிய சீடராக நாம் வாழ நம்மை ஆயத்தப்படுத்துகிறார்கள் (மத் 16:24).
10. அன்னை மரியா, காட்சிகள் வழியாக மனந்திரும்ப அழைப்பு விடுக்கிறார்
ஒவ்வொரு காட்சியின்போதும் பாவிகள் மனந்திரும்பவும், நாடுகளில் சமாதானம் நிலவவும் இறைவனிடம் மன்றாட வேண்டுமாறு அழைத்து இறைநம்பிக்கையில் வழிநடத்திச் செல்கிறார்கள் நம் அன்னை மரியா.
இறுதியாக, கீழ்ப்படிதல், நம்பிக்கை, எதிர்நோக்கு, அன்பு, நிறைவாழ்வு பெற்றுத் தர நம்மோடு சிறப்பாக ஒத்துழைப்பவர் நம் அன்னை மரியா. ’அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்’ என்று அன்னை மரியா நமக்குக் கூறியதை ஏற்று இயேசுவின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிந்து அன்னை மரியாவை நம் தாயாக ஏற்று அவரின் அன்புப் பிள்ளைகளாக தூய வாழ்வு வாழ்ந்து விண்ணக எருசலேமை நோக்கித் திருஅவையாக பயணிப்போம் (எபி 12:22).

Comment