No icon

2. ஏவாள்

ஜெபம்

ஒரு குருநாதரிடம் பயின்று வந்த இரண்டு சீடர்கள் - மிகவும் அன்பாகவும், தாழ்மையாகவுமே பழகி வந்தவர்கள். ஆனால் சில நாள்களில் ஒரு சீடரின் உள்ளத்தில் பெருமையும், பொறாமை உணர்வும் அதிகமாக உருவாக ஆரம்பித்தது. ஆகவே, அவர் குருவின் பார்வையில் தன்னை உயர்த்திக் கொள்ளவும், தன் சக சீடரைத் தாழ்த்தவும் தீர்மானித்தார்.
ஒருநாள் அதிகாலையிலேயே குருவிடம் சென்று, “குருவே, நான் அதிகாலையிலேயே எழுந்து, குளித்து, உங்களுக்கு வணக்கம் தெரிவிக்க வந்து விட்டேன். நண்பனோ இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறார்” என்றார்.
”அப்படியா, நீங்களும் அவரைப் போல் உறங்கிக் கொண்டிருந்தால் நன்றாயிருக்குமே” என்றார் குரு. பாராட்டை எதிர்பார்த்த சீடருக்கு, குருவின் வார்த்தை அதிர்ச்சியைக் கொடுத்தது.
ஆம், நீங்களும் உறங்கிக் கொண்டிருந்தால், அடுத்தவரைப் பற்றி குறை கூற வந்திருக்க மாட்டீர்கள் அல்லவா என்று குரு சொன்னபோது, சீடர் வெட்கித் தலை குனிந்தார்.
நம்மை உருவாக்கிய உன்னதர், நம்மை விசாரிக்கிறார். நம் துன்பம்,  நோய், பாவம், கவலை வேளைகளில், நம்மைத் தேடிவந்து விசாரிக்கிறார். அத்துணை கரிசனை அவருக்கு.
நம் மனசாட்சியிலே, தேவ விசாரிப்பை உணர்கிறோம். ஒரு மெல்லிய குரல்! இந்தச் செபத்தில் நம் மறுமொழி என்ன? இருக்க வேண்டிய இடத்தில் இல்லாமல், “எங்கே இருக்கிறாய்” என்று ஆண்டவர் கேட்கும் அளவுக்கு, எங்கோ ஒளிந்து கொண்டாள் ஏவாள்!
குற்றப்பழி உணர்வினால் கூனிக் குறுகிப்போய் நின்ற ஏவாளிடம், “நீ ஏன் அவ்வாறு செய்தாய்” என்று ஆண்டவர் விசாரித்தார். ஏவாளின் பதில், மன்னிப்பையும் ஆசீர்வாதத்தையும் தருவதற்குப் பதிலாக, சாபத்தைக் கொணர்ந்தது.
”பாம்பு என்னை ஏமாற்றி யது, நானும் உண்டேன்” என்று
பதில் கூறினார் (தொநூ 3:13).
இந்த பதிலில், ஏவாள் - கடவுளை யும், பாம்பையும் குறைகூறினார். தன்னிடம் குற்றமில்லை என்றார், ஆகவே தன் செபத்தில் மூன்று குற்றங்களைப் புரிந்தார்.
கடவுளைக் குறைகூறினார்
’பாம்பு என்னை ஏமாற்றியது
எனும் பொழுது, நீர் படைத்த தால்தானே? இப்படியுமா நீர் படைப்பது என்று, மறைமுகமாகத் தூற்றினாள்.
இயேசுவோடு சிலுவையில் அறையப்பட்ட ஒரு கள்வன், தொடர்ந்து இயேசுவைப் பழித்துக் கொண்டேயிருந்தான். நீர் மெசியா, கடவுள் என்றால் ஏன் இந்தத் துன்பம்? துன்ப வேளையில் காப்பாற்றத் தெரியவில்லையே, ஏன் இந்தக் கொடுமைகளை அனுபவிக்கச் செய்கிறீர் என்று முறுமுறுத்தான்.
அனைத்தையும் அனுமதிப்பது ஆண்டவரே என்ற உண்மையை, பல வேளைகளில் மறந்து விடுகிறோம். அவர் அனு மதிக்காமல் ஏதேனும் நடப்பது சாத்தியமே இல்லை. அவர் அனு மதிப்பதோ, நமது நன்மைக் காகவே. ஆகவே ஆண்டவரைக் குறை சொல்லவே கூடாது. சில
இறை வாக்கியங்களைக் கவனி யுங்கள்.
"சோதனை வரும்போது, இச்சோதனை கடவுளிடமிருந்து வருகிறது என்று யாரும் சொல்லக் கூடாது” (யாக் 1:13 )
இயேசு பிலாத்துவை நோக்கி, “மேலிருந்து அருளப்படாவிடில், உமக்கு என்மேல் எந்த அதிகாரமும் இராது” என்றார் (யோவா 19:11 )
"தம் மக்களை வெறுக்கும்படியாகவும், தம் அடியார்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்யும் படியாகவும், ஆண்டவர் எகிப்தியரின் மனத்தை மாற்றினார். ( திபா 105:25 )
”போர்க்கருவியை உருவாக்கும் கொல்ல னைப் படைத்தவர் நான்; அதைப் பாழாக்கி அழிப்ப வனையும் படைத்தவர் நான் “( எசா 54:16 )
“பாம்பு என்னை ஏமாற்றியதால்” எனும் பொழுது, இந்த கேடுகெட்ட தந்திரமான, மோசமான பாம்பு செய்த அநியாயம் என்று, பாம்பின் மேல் பழிபோடுகிறார்.
ஒரு சிறிய கணக்கு: ஏவாளுக்கு அப் பொழுது 27 வயதாக இருந்திருக்குமோ? 2-ம் ஆதாமாகிய இயேசு போதிக்கத் தொடங்கும் பொழுது, அவருக்கு 30 வயது (லூக் 3:23). கடவுளின் மகன் எனப்பட்ட ஆதாமை (லூக் 3:38) ஆண்டவர் உருவாக்கி அவனிலிருந்து பெண்ணை உருவாக்கித் திருமணம் செய்து வைக்கிறார்.
ஆகவே, ஆதாமுக்கு 30 வயது எனலாமே. நம் அரசாங்க திருமண வயது வரம்பில் 21-18 என்ற 3 வயது வித்தியாசம் இருப்பதால், 30-3=27 என்று சொல்லிப் பார்க்கிறேன். மறை வல்லுநர்கள் கோபித்துக் கொள்ள வேண்டாம்.
சிறு குழந்தையாயிருக்கும் வரை, நமக்குப் பெற்றோர் பொறுப்பு. பெற்றோரிடம் கடவுள் கணக்கு கேட்பார். ஆனால் வாலிபம் வந்ததும் அவரவரே பொறுப்பு. “துயர நாள்கள் வருமுன்னே உன் இளமைப் பருவத்தில் உன்னைப் படைத்த கடவுளை மறவாதே (ச.உ 12:1). ஏனெனில் சுயமாய் சிந்தித்துச் செயல்படும் திறனையும், அறிவையும் கடவுள் தந்து விட்டாரல்லவா! யோசேப்பு பாவத்தை விட்டு ஓடிப்போனாரே, அவரல்லவா வாலிபன்; ஆண்டவரின் மணிமுடி! பாவம் புரிந்துவிட்டு, ”ஐயோ என்னையே இழந்து விட்டேனே, என் அறிவு மங்கிப் போனதே” என்று புலம்ப, யோசேப்பு இடம் கொடுக்கவில்லை. இளம்பெண் ஏவாள் விழுந்து போனதேன்?
லூக் 18:9-14-ல் இருவர் மன்றாடுவதைக் காண்கிறோம். பரிசேயரோ, ஆயக்காரரைக் குறை
சொல்லிக் கொண்டேயிருக்கிறார். இதுவா மன்றாட்டு? ஆண்டவர் அவர்மேல் பிரியப்படவே இல்லை.
”ஆண்டவரே அவனுக்கு நல்ல புத்தியைக்
கொடும். சே! இப்படியும் மனுசங்களா! அவனுடைய மனசை மாற்றும்” என்று நமக்கு பிரியமில்லாத வர்களுக்காக மன்றாடுவோம் என்றால், ஆண்டவரே அவனுக்கு புத்தியேயில்லை; அவன் மனிதனே இல்ல; அவனுக்குக் கெட்ட மனசு என்று மன்றாட்டிலும் திட்டுகிறோம். மாறாக, ஆண்டவரே, அந்த சகோதரருக்காக உம்மை அன்பு செய்கிறேன், நன்றி கூறுகிறேன். அந்த சகோதரரை ஆசீர்வதியும் என்றே மன்றாட வேண்டும்.
தன்னிடம் குற்றமில்லை என்றாள்
 என் பாவத்திற்குக் காரணம், கடவுளே நீங்கதான். 2 - வது இந்த பாம்புதான். நான் காரணமேயில்லை என்பது ஏவாளின் மன்றாட்டு.
மனச்சாட்சியின்படி நான் நன்றாகத்தான் உள்ளேன் என்று சுய திருப்தியடைந்து கொள்பவர் கள் தங்களை மறைநூல் ஒளியில் காணவேண்டும். எவ்வளவு மோசமான பாவிகள் என்பது அப்போது அவர்களுக்குப் புரியும் (1கொரி 4:4).
”தன்னிடம் பாவமில்லை என்பவன் பொய்யன்” (1யோவா1:8 ) 
குற்றத்தை ஒப்புக்கொள்ளாத ஏவாளை,
ஆண்டவர் தண்டித்தார். காயினை, நாடோடி
யாக அலைய வைத்தார். ஆபேலின் குரல் ஒலிக்க
ஒலிக்க, காயின் ஊர் ஊராக ஓடிக்கொண்டே
யிருந்திருப்பான்.                            
நல்ல ஆலோசனைகள்:
1.    ”உன் குற்றத்தை நீ ஏற்றுக்கொண்டால் போதும்” என்னும் தேவ குரலுக்கேற்ப நம்மைத் தாழ்த்துவோம். (எரே 3:13) தங்கள் பாவங்களை ஒத்துக் கொண்ட ஆயக்காரர், நல்ல கள்வனை போல் (லூக் 18:13; 23: 41,42).
2.    பிறரைப் பழித்துரைக்காமல், அச்சுறுத் தாமல், அனைத்தையும் இறைவனிடம் ஒப்படைத்து விடுவோம். இயேசுவைபோல் (1 பேது 2:23).
3.    ஆண்டவரே சொல்லிவிட்டாரே என்றல்லாமல்,  நம் பகைவரை மனதார ஆசீர்வதித்து மன்றாடு வோம் ஸ்தேவானைப் போல்! (திப 7:60).
4.    "ஆண்டவர் அளித்தார், ஆண்டவர் எடுத்து
கொண்டார், ஆண்டவரின் பெயர் போற்றப்
பெறுக” என்று ஆண்டவரை மகிமைப் படுத்துவோம் யோபுவைப் போல் (1:21).
இவ்வாறு, நாம் கடவுளின் கரங்களுக்குள் இருக்கும்போது, யாரும் எதுவும், தேவ மகிழ்ச்சியை நம்மிடமிருந்து எடுக்க முடியாது. துன்பமோ, நோயோ, சோதனையோ, பாவமோ எதுவாயினும், ஆண்டவரை இன்னும் நெருங்கச் சேரவே பயன்படுத்திக் கொள்வோம்.
 

Comment