No icon

விவிலியம் என்பது...

தொட்டால் அது வெறும் காகிதம்
அதை படித்தால், அதுவே உனக்கு ஆயுதம்!
திறந்தால் அச்சிடப்பட்ட வெள்ளைத் தாள்
அதை படித்தால் உன் மனம் வெள்ளை ஆகிடும்!
நீ அதனைத் தூக்கினால் அது
உன் வாழ்வை உயர்த்தி தூக்கிவிடும்!
அதை நீ தூக்கி எறிந்தால் உடனே
உன் வாழ்வு உன்னை விட்டு தொலைந்து போகும்!
தினமும் நீ அதனைப் படிக்கப் படிக்க புதுமை!
அதில் படித்ததை நீ நினைத்திட்டால் அதுவே
உன் வாழ்க்கைக்கு இனிமை!
அது வெள்ளைத் தாளில் கறுப்பு மையில் எழுதிய எழுத்தாயிருக்கலாம்!
ஆனால், அது உனது கறுப்பு வாழ்க்கையை வெள்ளையாக மாற்றிவிடும்!
புத்தகத்தை எழுதியவர்கள் எங்கேயோ மறைந்துபோயிருக்கலாம்!
ஆனால் அதில் எழுதப்பட்டவர் எப்போதும் அதனுடைனேதான் இருக்கிறார்!
இதை மாற்ற முயற்சித்தவர்கள் எல்லாம் அதை
மாற்ற முடியாமல் தங்களுக்குள்ளாகவே பற்பல
மாற்றங்களை அடைந்துள்ளார்கள்!
இதை வாசிக்கிறவர்கள் எல்லாருமே பிறரை
என்று நேசிக்கப்பவர்களாய் தான் இருப்பார்கள்!
ஏனெனில் நம் கையில் உள்ள பைபிள் என்பது
வெறும் வேதம் மட்டுமல்ல அது நம் வாழ்வின் விண்ணகக் கருவூலம்!
கருவூலத்திலிருந்து விவிலியத்தை
நேசித்து வாசிப்போம்!
வான்வீடு செல்லும் பாதையை காண்போம்!

Comment