No icon

சேவை செய்யப் பழகு

பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே தனது பதவியை விட்டு விலகுவதாக மே 24 அன்று அறிவித்தார். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இங்கிலாந்தை விலக்கிக் கொள்வதற்கான சிக்கலுக்குத் தீர்வுகாண முடியாததே அவர் பதவி விலகுவதற்குக் காரணம். பிரிட்டிஷ் நாடாளுமன்றம் ‘பிரெக்சிட்’ எனப்படும் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பான மேயின் திட்டத்தை பிரிட்டிஷ் நாடாளுமன்றம் மூன்றுமுறை நிராகரித்து விட்டது. அவருடைய ‘கன்சர்வேட்டிங்’ கட்சி உறுப்பினர்களையும், கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களையும் அவரால் தனது  கருத்துக்கு இசைவளிக்கச் செய்ய முடியவில்லை. எனவே எதிர்க்கட்சியான லேபர்கட்சியின் தலைவர்  ஜெரமி கார்பினை அணுக வேண்டியக் கட்டாயம் பிரதமருக்கு ஏற்பட்டது. எதிர்க்கட்சித் தலைவரின் ஒத்துழைப்பும் கிடைக்காததாலேயே அவர் பதவி விலகும் முடிவிற்கு வரவேண்டியதாயிற்று. 
‘பிரெக்சிட்’ என்றால் என்ன?
பிரிட்டன் + எக்சிட் (க்ஷசவையin+நுஒவை) என்ற இரண்டு சொற்களில் ஒன்றை வெட்டி இன் னொன்றுடன் சேர்த்து ‘பிரெக்சிட்’ என்ற சொல் உருவாக்கப்பட்டது. பிரிட்டன் ஐரோப்பிய யூனி 
யனிலிருந்து வெளியேறுவதை இது குறிக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியம் (நுரு) என்பது என்ன?
ஐரோப்பிய ஒன்றியம் 28 ஐரோப்பிய நாடுகள் பங்குதாரர்களாக உள்ள ஓர் அரசியல் பொருளாதாரக் கூட்டமைப்பு. உறுப்புநாடுகளின் பாதுகாப்பு, வர்த்தகம், குடிபெயர்தல் ஆகியன இதன் அடிப்படை. இந்நாடுகளுக்கிடையேயான ஒரே சந்தை என்பது  நோக்கம். ஆட்கள், பொருட்கள், சேவைகள், முதலீடு ஆகியவை தடையின்றி இந்நாடுகளுக்கு இடையே நடப்பது உறுதி செய்யப்பட்டது. 2002 ஆம் ஆண்டு பொதுவான நாணயமாக ஈரோவைப் பயன்படுத்துவது பற்றி 19 உறுப்புநாடுகள் ஒத்துக்கொண்டு, ஈரோ பொதுநாணயமாக புழக்கத்திற்கு வந்தது. உலக மக்கள் தொகையில் 7.3 விழுக்காட்டினைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 19.67 டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் உலக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் இது 24.6 விழுக்காடு. மனித வளக் குறியீடு இந்நாடுகளில் மிக அதிகம். ஐரோப்பிய ஒன்றியத்துக்கு நோபெல் சமாதானப் பரிசு 2012 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. பிரசங்கைத் தலைமை இடமாகக் கொண்டு செயல்படுகிறது. 
ஐரோப்பிய ஒன்றியத்துக்கென்று தனி நாடாளு
மன்றம் 751 உறுப்பினர்களைக் கொண்டு இயங்கு
கிறது. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் நேரடியாகத் தங்கள் உறுப்
பினர்களைத் தேர்ந்தெடுக்கிறார்கள். 2019 ஆண்டுக்
கான தேர்தல் இப்போதான் முடிந்திருக்கிறது.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக ஏன் தீர்மானித்தது? முதலாவதாக பிரிட்டன் பெருந்தொகையை ஐரோப்பிய ஒன்றியத்தின் வரவுசெலவுத் திட்டத்திற்கு அளிக்கிறது. 655 பில்லியன் பவுண்டுகள் அளிக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அது பெறுவதை விட இது அதிகம். மேலும் 2008 இல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியின்போது ஐரோப்பிய ஒன்றிய மைய வங்கி சரிவரச் செய்யப்படவில்லை. வேலையில்லாத திண்டாட்டம் அதிகரித்தது. வெளிநாட்டினர் பலரும் பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்தார்கள். ஐரோப்பிய ஒன்றியம் ஏற்பட்ட பிறகு வெளிநாடுகளிலிருந்து (குறிப்பாக பழைய பொதுவுடைமை நாடுகளி லிருந்து) குடிபெயர்ந்தோர் எண்ணிக்கை அதிகமாயிற்று. 1994 ஆம் ஆண்டுக்கும் 2014 ஆம் ஆண்டுக்கும் இடையே அது இருமடங்காயிற்று. இதனால் உள்நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகமாயிற்று. நாட்டின் முக்கிய பிரச்சினை இதுதான் என்று பிரிட்டன் மக்கள் கவலை கொண்டார்கள். இந்நிலையில்தான் 2013 ஆம் ஆண்டு அப்போதைய பிரதமர் டேவிட் காமரூன் பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்திருக்க வேண்டுமா வேண்டாமா என்பது பற்றி முடிவெடுக்க தேசிய வாக்கெடுப்பினை நடத்தப்படும் என்று அறிவித்தார். 2016 ஜுன் 23 அன்று நடைபெற்ற வாக்கெடுப்பின் 53 விழுக்காடு மக்கள் விலக வேண்டும் என்று வாக்களித்தனர். 
46 ஆண்டுகளுக்கு மேலாக பிற ஐரோப்பிய நாடுகளுடனான வர்த்தக, பொருளாதார உறவை முறித்துக் கொள்வது எளிதில்லை. ‘பிரெக்சிட்’ வந்தால் வேறுநாடுகளுக்கு போய்விடுவதாக பல ரர்பன் உட்படப் பல குழுமங்கள் எச்சரித்தன. அப்படி நடக்கும்போது பல்லாயிரக் கணக்கான பிரிட்டிஷ் மக்கள் வேலையிழப்பர். நாட்டின் பொருளாதாரம் பதினைந்து ஆண்டுகளில் 9 விழுக்காட்டிலிருந்து 4 விழுக்காடாகக் குறைந்து விடும் என்று அரசு கணக்கிடுகிறது.
தெரசா மே பிரதமரான பிறகு பொருளாதார, விளைவுகள் அதிகமில்லாமல் எப்படி ஐரோப்பிய யூனினிலிருந்து விலகுவது என்ற பிரச்சினை ஓங்கியது. திடீரென்று விலகிவிட முடியாது. விலகுவதற்கு முன்னர் சில ஒப்பந்தங்கள் செய்து
கொள்ள வேண்டும் என்று பிரதமர் மே விரும்புகிறார். பிரிட்டன் விலகுவதற்கு முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறப்பு
வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டும் என்று பலரும் வற்புறுத்துகின்றனர். ஆனால் ஏற்கெனவே தீர்மானித்திருந்தபடி, அக்டோபர் 31-க்குள் முடிவு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒப்பந்தம் எதுவு மின்றி வெளியேறினால் பிரிட்டனுடைய பொருளாதாரம் பெரிதும் பாதிப்படையும் என்று
வேறு சிலர் வாதிடுகிறார்கள். வர்த்தகம், பொருளாதார நடவடிக்கைகள் சிறிதுவிடாமல் தொடர்வது நல்லது என்பது அவர்களது யோசனை. 
தெரசா மே பிரெக்சிட் மெல்ல நடைபெற வேண்டும் என்று விரும்பியதால் ஒப்பந்தத் துடனான வெளிவருதலை முன்வைத்து அதற்கான திட்டங்களை வகுத்தார். அவை பிரிட்டன் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. எனவேதான் பதவி விலகுகிறார்.
புதிதாக பிரதமர் பதவிக்கு வருபவருக்கும் பல பிரச்சினைகள் இருக்கும். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலக அது 39 பில்லியன் பவுண்டுகள் தரவேண்டியதாயிருக்கும். வெளி நாடுகளில் வாழ இவ்விடமிருந்து குடிமக்கள், ஐரோப்பிய யூனியனிலிருந்து இங்கிலாந்தில் குடியேறியிருப்பவர்களின் நிலை என்ன? வட அயர்லாந்துக்கும், அயர்லாந்து குடியரசுக்குமுள்ள எல்லைப் பிரச்சினை.
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகுவது மற்ற உலக நாடுகளைப்போலவே இந்தியாவையும் பாதிக்கும். நமது நாட்டிலிருந்து பிரிட்டனில் குடியேறியவர்கள் பாதிக்கப் படுவார்கள்? பொருளாதார, வர்த்தகத் துறைகளில் ஏற்படும் மாற்றம் இந்தியப் பொருளாதாரத்தைப் பாதிக்குமா? இவைபோன்ற கேள்விகளே மேயின் பதவி விலகல் நமக்கும் கவலையளிக்கும். 

Comment