No icon

வாக்குப் பதிவு நாளை மாற்றுங்கள்

மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி, சென்னை
மதிப்பிற்குரிய மாநிலத் தலைமை தேர்தல் அதிகாரி அவர்களே,
வணக்கமும் வாழ்த்துக்களும்!
ஏப்ரல் திங்கள் 18 ஆம் நாள் கிறிஸ்தவர்களின் புனித வாரத்தில் முக்கிய நாள்களுள் ஒன்று பெரிய வியாழக்கிழமை. அன்றைய தினத்தில் தமிழகம் மற்றும் புதுவையில்  தேர்தலை வைத்திருப்பது கிறிஸ்தவர்களுக்கு உகந்த நாள் அல்ல என்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகின்றேன்.
தேர்தல் பணியில் ஈடுபடும் கிறிஸ்தவ சகோதர சகோதரிகள் அனைவரும் அன்றைய நாள் வழிபாடுகளில் கலந்து கொள்ள முடியாத சூழல். மேலும் பெரும்பாலான வாக்குச்சாவடிகள் ஆலய வளாகத்தில் உள்ள பள்ளிகளில் இருப்பதால் கிறிஸ்தவ மக்கள் வழிபாடு நடத்த பெரும் இடையூறாக இருக்கும் என்பதையும் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன். எனவே கிறிஸ்தவ மக்களின் கோரிக்கைகளை ஏற்று மாற்று நாளில் தேர்தலை நடத்த ஆவன செய்யுமாறு பணிவன்புடன் வேண்டுகிறேன்.       

Comment