No icon

#  ‘அல்லேலூயா’ வாழ்த்தொலி உரை

‘இறுதி வார்த்தை என்பது சாவல்ல, மாறாக, வாழ்வேயாகும்’ - திருத்தந்தை பிரான்சிஸ்

கல்லறை காலியாக இருப்பதைக் கண்டு திகைத்த பெண்களிடையே தோன்றிய இயேசு, தான் கலிலேயாவில் சீடர்களைச் சந்திக்க உள்ளதை சீடர்களிடம் கூறுமாறு அறிவித்து, அவர்களிடம் மறைப்பணிக் கடமையை ஒப்படைத்ததை இன்றைய நற்செய்தியில் காண்கிறோம் என, ஏப்ரல் 13 ஆம் தேதி திங்கள்அல்லேலூயாவாழ்த்தொலி உரையைத் திருத்தந்தை பிரான்சிஸ் தொடங்கினார்.

விசுவாசத்தின் வியத்தகு எடுத்துக்காட்டாகவும், இயேசுவின் மீது கொண்ட அன்பு மற்றும் அர்ப்பணத்தின் அடையாளமாகவும் இயேசுவின் பணிக்காலத்தின்போதும், பாடுகளின்போதும், உறுதியுடன் செயல்பட்ட பெண்களுக்கு இயேசு வழங்கிய பரிசாக இந்த காட்சியளித்தலைக் காணமுடிகின்றது என திருத்தந்தை பிரான்சிஸ் மேலும் கூறினார்.

இயேசுவின் உயிர்ப்பு குறித்து சீடர்கள் நற்செய்தியை அறிவிக்கத் துவங்கியதிலிருந்து, உலகின் கடைசி எல்லைவரை அது நம்பிக்கையின் செய்தியாக மாறியுள்ளது என்ற திருத்தந்தை, உயிர்ப்பு நமக்குத் தரும் செய்தி என்னவெனில், ‘இறுதி வார்த்தை என்பது சாவல்ல, மாறாக, வாழ்வேயாகும்’, என்பதே என்றார் .

திருமுழுக்குப் பெற்றுள்ள அனைவரின் விசுவாசமும் பலம்பெறும்படியாகவும், துன்புறுவோர் ஊக்கம் பெறும்படியாகவும் உதவும் நோக்கத்தில், நம் நம்பிக்கையாம் கடவுள் உயிர்த்து விட்டார் என, நம் வாழ்வு வழியாக சான்று பகர்வோம்  எனவும், தன் அல்லேலூயா வாழ்த்தொலி உரையில் திருத்தந்தை  அழைப்பு விடுத்தார் .

Comment