No icon

HOLY WEEK MESSAGE

நம்பிக்கை தரும் நல்லாயன் மேதகு நசரேன் சூசை

 அன்பு மக்களே! இந்த நேரம் மீண்டும் ஒருமுறை உங்கள் அனைவருக்கும் நலமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

      இது புனித வாரம். நாம் அடியெடுத்து வைத்திருக்கிறோம். எனவே இந்த வாரத்தின் சில காரியங்களை உங்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். வீடுகளில், தொலைகாட்சி அருகில் மிக்க பக்தியோடு அமர்ந்திருப்பீர்கள் என நம்புகிறேன். எனவே இந்த புனித வாரத்தின் உணர்வுகளை நமதாக்கி நாம் கொள்வோம். ஆண்டுதோறும் எவ்வாறு இவ்வாரத்தினை நாம் உணர்வுபூர்வமாக கொண்டாடுவோமோ அதே உணர்வுபூர்வமாக, அதே வேளையில் இக்காலத்திற்குரிய உணர்வுகளை நமதாக்கி, நாம் இந்த வாரத்தில் நுழைவோம். அதற்கு நமக்கு உதவியாக இருப்பது நான் நினைக்கிறேன் நற்செய்தி வாசிக்கின்றது ஒரு நல்ல பழக்கம்.

            இன்று ஆண்டவர் இயேசுவோடு பாடுகளை மத்தேயு எழுதிய நற்செய்தியிலிருந்து வாசிக்க கேட்டோம். திருவெளிப்பாடு (ஆண்டு 1).எனவே அதை வாசிக்க கேட்டிருக்கிறோம். இனி வர இருக்கிற திங்கள், செவ்வாய், புதன், மற்றும் வியாழன். வருகின்ற இந்த நான்கு நாட்களில்  இன்னும் இருக்கிற மாற்கு மற்றும் லூக்கா நற்செய்தியில் ஆண்டவர் இயேசுவுடைய திருப்பாடுகளை நம்முடைய குடும்பமாக இணைந்து நாம் வாசிக்க கேட்டுக் கொள்கிறேன்.

குடும்பமாக இணைந்து..

            நம்முடைய குழந்தைகளோடு, நம்முடைய பெற்றோரோடு குடும்பத்தில் இருக்கிற இன்னும் வேற நபர்களோடு அமர்ந்திருந்து நாம் வாசிப்போம்; வாசிக்க கேட்போம். புனித வெள்ளியன்று நாம் யோவான் நற்செய்தியின்படி வாசிக்க கேட்போம். எனவே இந்த வாரம் முழுவதுமாக நான்கு நற்செய்தியிலிருந்தும் ஆண்டவர் இயேசுவுடைய திருப்பாடுகளை வாசிப்பது நலம் என்று கருதுகிறேன்.

                 அதே வேளையில் இந்த வாரத்திற்காக இன்னொரு உணர்வாக இருப்பது அமைதியான சூழல். எனவே குடும்பத்தில் நம்முடைய தொலைக்காட்சியினுடைய தொல்லையை சற்று இந்த வாரம் குறைத்துக் கொள்வோம். ஏற்கெனவே இருக்கிற இந்த சூழலில் ஒரு நமக்கு தொலைக்காட்சி தேவை என்பதனை நான் அறிவேன். இருந்தாலும் முடிந்தமட்டும் அமைதியாக இந்த வாரத்தை செலவிடுவோம்.

               நம் உள்ளத்தில் அமைதி, இருக்கின்ற சூழலில் அமைதி என்பதாக. இதையும் தாண்டி நம்முடைய குடும்ப செபத்தை மறந்து விடவேண்டாம். குறிப்பிடும்படியாக மாலை வேளையில் ஏழு மணியிலிருந்து எட்டு மணி வரை குடும்பமாக இணைந்து நாம் அமர்ந்திருந்து செபிக்க கற்றுக் கொள்வோம். இந்த வாரம், அதற்கு நமக்கு உதவியாக இருக்கும். எனவே புனித வாரத்தின் உணர்வுகளை நமதாக்கி கொள்ள கேட்டுக் கொள்கிறேன்.

 கட்டுப்பாடோடு இருந்து..

                இரண்டாவது, இந்த காலத்தின் சூழலை நாம் உணருமாறு  அன்போடு கேட்டுக் கொள்கிறேன். தற்போது எண்ணிக்கை அதிகமாகிச் செல்கிறது. தமிழகத்திலேயே 690 யை தொட்டு இருக்கிறது என அறிய வரும்போது அச்சம் மேலிடலாம். இருப்பினும் நாம் நம்மை தற்காத்துக் கொள்வது தேவைப்படுகிறது. நம்மை மட்டுமல்ல இது ஒரு சமூக பொறுப்புணர்வு என்பதை உணர்வோம். நம்முடைய சமூகத்தைக் காப்பதற்கு கடவுள் தந்த வாய்ப்பு என கருதுவோம். எனவே பொறுமையும், சுயக்கட்டுப்பாடும் தேவைப்படுகிறது. நாம் சமூக இடைவெளியை இன்னும் கட்டுப்பாட்டடோடு கடைபிடிக்க முயல்வோம். நம்முடைய அரசு மேலே ஒரு Drone வைத்து கண்காணிக்கிறது என்பதை நாம் அறிவோம். அது ஒரு பெரிய தேவையேயில்லை என்பதை நாம் அறிவோம். நாம் நமக்குள்ளே கட்டுப்பாட்டோடு இருந்தால்  இந்த காலத்தின் தேவையை நிவிர்த்தி செய்ய முடியும். இன்னும் எத்தனை நாட்கள் இது இருக்கும் என நமக்கு தெரியாது. ஆயினும் நம்மால் முயன்ற மட்டும் நாம் கட்டுப்பாடோடு இருந்து இந்த காலத்தின் தேவையை நிவிர்த்தி செய்து மீண்டும் நம்பிக்கையோடு நலமான வாழ்வை நடத்த முடியும் என்பதை கொள்வோம். ஒருவருக்கொருவர் நம்பிக்கையை தந்து கொள்வோம். யாராவது தொலைபேசினால்கூட  அவர்களுக்கு இந்த நம்பிக்கையை ஊட்டிக் கொண்டே இருப்போம் என அன்போடு உங்களை கேட்டுக் கொள்கிறேன்.

ஏழையருக்கான உதவி..!

                மூன்றாவது, நான் சொல்ல விழைவது அன்பு மக்களே ஏழையருக்கான உதவி என்பதனை மறந்து விட வேண்டாம். இன்று இந்தியாவில் பல காரியங்களை முன்னெடுத்துக் கொண்டிருந்தாலும் பல ஏழையர்கள் இன்று நம்முடைய பார்வையில் இருந்துகொண்டு இருக்கிறார்கள். புலம் பெயர்ந்த மக்கள் இன்று பயணம் படுவதை பார்க்கின்றபோது பரிதாபமாக இருக்கின்றது. நம்முடைய உள்ளத்தில் கவலை பிறக்கின்றது. அதே வேளையில் நம்முடைய பங்கிலும்கூட ஏழையர் இருக்கலாம். கைவிடப்பட்டோர், முதியோர் அல்லது யாருமே இல்லாத ஆதரவற்றோர். கைம்பெண்கள் என பலர் இருக்கலாம். பல வறுமையுற்ற மக்கள் இருக்கலாம். இதை நாம் அடையாளம் கண்டுகொள்வது இக்காலத்தின் கடவுளின் அழைப்பாக நாம் உணர்வோம். எனவே பங்காக இத்தனை ஏழையர்களை கண்டு ஒருவேளையில் நாம் நம்முடைய பக்கத்து வீடுகளில் அருகாமையில்  அப்படி யாராவது இருந்தால் கண்டுகொண்டால் நம்மால் இயன்ற உதவியை செய்ய முன்வருவோம்.

நம்மால் இயலாவில்லையென்றால் நம்முடைய பங்குத்தந்தையை அணுகி, பங்குத்தந்தை வழியாக யாரேனும் தொடர்புகொண்டு செய்வதற்கு முன்வருவோம். பங்குத்தந்தையினரும், பங்கு அருட்பணி பேரவையினரும் இணைந்து வர சூழல் இல்லாதிருந்தாலும்கூட தொலைபேசியில் இதற்கான முயற்சியை செய்ய அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

 இந்நேரத்தில் பங்கோடு நிதியைக்கூட தாராளமாக   செலவு செய்வதற்கு நாம் மறுக்கக்கூடாது. இது ஆசிர். இது நமக்கு நம்முடைய பங்கிற்கு கிடைக்கிற ஆசிர் என உணர்வோம். எனவே பணத்தை சேமித்து வைத்து நாம் கொண்டாடுவதற்கு தேவையற்ற ஒரு சூழல் இது. எனவே இருக்கின்ற பணத்தினை நாம் தாராளமாக நம்முடைய பங்கிலுள்ள ஏழையருக்கு கொடுப்போம். ஏனென்றால் இவர்கள் தாம் நம்முடைய செல்வம் என்பதனை உணர்வோம். அத்தோடு நம்முடைய ஊரில் பல பங்குகளில் தவக்கால உண்டியலை வைத்திருந்திருப்போம்.  கண்டிப்பாக இந்த காலம் முடித்தபிறகு நம்முடைய கை வசம் தான் அது வரும். ஏனென்றால் வியாழன் அன்று பொதுவாக காணிக்கையாக ஏழையருக்காக கொடுக்க வேண்டும். வியாழன் அன்று இணைந்து வர முடியாது. அந்த சூழல் இருந்தாலும்கூட நலமான சூழல் வரும்போது அந்த காசு பங்கிற்குதான் வர போகிறது. இருப்பினும் இது ஏழையருக்கானது என்பதை உணர்ந்து நம்மால் முடிந்த ஏழைகளுக்கான உதவியை இன்னும் முடுக்கிவிடுவோம் என அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

                அத்தோடு மறைமாவட்டமும் இந்த ஒரு சூழலில் மூவரின் பெயர்களை உங்களுக்கு தந்திருக்கிறது.

1. K.K.S இயக்குநர் அருட்பணியாளர் மைக்கேல்ராஜ் அவர்கள்.

2. கடலோரம் மற்றும் அமைதிக்குழு இயக்குநர் அருட்பணியாளர் ஸ்டீபன் அவர்கள்

3.  கிராம முன்னேற்ற சங்கம்  இயக்குநர் அருட்பணியாளர் பிரான்சிஸ் சேவியர்

இந்த மூவரையும் நம்முடைய தேவைகளுக்கு குறிப்பாக யாராவது பாதிக்கப்பட்டிருந்தால் அது வெறுமனே வறுமைக்காக மட்டுமல்ல இந்த உடல் நோயுற்று, அல்லது இந்த கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டால் நாம் முதன்மையாக நம்முடைய மாவட்ட சுகாதார துறைக்கு சொல்ல வேண்டிய கடமை இருக்கிறது. அதை முதன்மையாக செய்வோம்.

அதே வேளையில் இங்கும் அவர்களிடம் தெரியப்படுத்துமாறு அன்போடு உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். இதனையும் தாண்டி ஏதேனும் தேவைகள் இருப்பின் தயவுசெய்து எங்களை அணுகலாம், பங்குத்தந்தையர்களை அணுகலாம் நாங்கள் உங்களுக்காக இருக்கின்றோம். உங்களுக்காக இறைவேண்டல் செய்கிறோம். இந்த நாட்களில். நீங்களும் எங்களுக்காக உலக மக்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றேன்.

இந்தப் புனித வாரம் ஆண்டவருடைய அருளை அபரிவிதமாக தருகின்ற வாரமாக மீட்பின் வாரமாக அமைய உங்கள் அனைவரையும் அன்போடு வாழ்த்துகிறேன்.

                அன்பு மக்களே! `இதுவும் கடந்து போகும்’ என்ற நம்பிக்கையில் இந்த நாட்களை செலவிடுவோம்.` கடவுள் ஒருபோதும் நம்மை கைவிடுவதில்லை’. அருமையான அன்னை மரியாளை நோக்கி இந்த வேண்டல் திருத்தந்தை நமக்கென தந்திருக்கிறார். நம் கைவசம் கிடைக்கபெற்றால் நம் குடும்பத்தில்கூட  இந்த அன்னையை நோக்கிய செபத்தை நாம் இணைந்து சொல்லுமாறு நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

`நாஞ்சில் நாதம்’

ஆண்டவருடைய ஆசிர் நாம் அனைவரோடும்கூட இருப்பதாக. புனித வியாழன் அன்று நடைபெறும் திருப்பலி , `நாஞ்சில் நாதம்’ தொலைக்காட்சி வழியாகவும் உங்களுக்கு தரப்படும். எனவே மாலை 6.30மணிக்கு நடைபெறும். அதேபோன்று வெள்ளியன்று மாலை 3.00 மணிக்கு நடைபெறும். புனித சனி யன்று இரவு 9.00 மணிக்கு நடைபெறுகின்றது. எனவே இந்த நேரங்களை நம் கருத்தில்கொண்டு  குடும்பமாக பங்கேற்க அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.

ஒரு சிலர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இந்த வாரம் இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தத்தையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்கள். புலம்பவதற்கு எதுவும் இல்லை. கடவுள் நமக்கு இதன் வழியாக எதுவோ சொல்கிறார். பொதுவாக ஆண்டுதோறும் இந்த வாரம் பக்தியாக செய்வதைவிட இன்னும் பக்தியாக நம்முடைய குடும்பத்தில் செய்ய முடியும் என நம்புவோம். குடும்பமாக இணைந்து நாம் கொண்டாடும் இந்த வார பாஸ்கா இன்னும் பொருள்ளதாக அமையும் என நான் நினைக்கிறேன். எனவே அந்த ஒரு நம்பிக்கையோடு இந்தப் புனித வாரத்தில் தொடர்ந்து  பயணிப்போம். 

Comment