No icon

‘வெட்டிவயல்’ வளவன்

ஏப்ரல் 24 ஆம் தேதி வெளிவந்த திரு. தேவசகாயம் அவர்களின் ‘மோதலே தீர்வு’ என்ற கட்டுரைக்கு வலுசேர்க்கும் வாசகரின் மறுபதிவு

தலத் திரு அவை முதல் நிரல்படி வளர்ந்துள்ள திரு அவை இயக்கமாக இருந்தவரை தன் செயல்பாட்டிலும், செயலிலும், தொண்டிலும் தொய்வு இல்லை. அது என்று நிறுவனமாக மாறியதோ அன்றே, () இதையும் நாம் இழந்து விடுவோம் என்ற அச்சத்தாலோ வேறுசில காரணிகளாலோ நாம் முன்பு பெற்றிருந்த உறுதியுள்ள விசுவாசத்தை தகர்த்து வருகின்றன என்பதை சிந்திக்க, தலைமைப் பீடங்களுக்கு நேரம் வந்துவிட்டது.

சமயத்தின் பேராலும், கலவரங்கள், கொந்தளிப்புகள், மரண ஓலங்கள் நேரும்போதெல்லாம் தலைமை தாங்குவோர் தாக்கப்படுதல் இல்லை. ஒதுக்கப்படுவோர் தப்பிப்பர். ஆனால், அப்பாவிகள் up  () பாவிகள் ஆகிவிடுகிறார்கள். 1982 மே-க்கு பின், சில மாதங்களில் (நாளில்) மேனாள் குன்றக்குடி அடிகளார் அமரர் பேராயம் ஆரோக்கியசாமி, இசுலாம் சான்றோர்கள் கைகோர்த்து உருவாக்கியதிருவருட்பேரவையும் சமய நல்லிணக்கமாகவும்தி(தெ)ருவருட்பேரவை யாகவே அதுவும் பலபெரும்பான்மை இடங்களில் புதுப்பிக்கப்பட வேண்டியே உள்ளன.

அந்நாளில் பல கிறித்துவப் பெரியோர்கள் உருவாக்கிய அரசியல் கட்சிகள், இயக்கங்கள், கிறித்துவ வாழ்வுரிமை இயக்கங்கள் வரலாற்றில்கூட இடம் பெறாதோ என்ற ஏக்கம் நமக்குண்டு. கிறித்துவர் தமிழக இந்திய அளவில் அரசியலில் ஈடுபடுவதும், திருமுழுக்கில்கூட (50 ஆண்டுகளுக்குமுன்) சீர்திருத்தர்களின் பெயர்வைக்க முடியாத நிலைமை இருந்தது. அஃதில் நானும் ஒருத்தன். இசுலாம் சமயம் போன்று நாமும் அரசியலில் காலூன்ற வேண்டாமா? சிந்திக்கும் நேரமிதுஅடக்கமானவர்கள்என்று எத்துனை காலம் சொல்லி தூங்கப்போகிறீர்கள். இன்றைய இளைஞர்களை தட்டி எழுப்புவோமா? தட்டுங்கள் திறக்கப்படும்.

முனைவர் பேரா. அய்யா அவர்களின்இணக்கமும், சமரசமும் வேண்டா; மோதலே தீர்வுமோதிப்பார்ப்போம் - என்ற அறைகூவலும், முன்னெடுப்பும், விழிப்புணர்வும் நம்மில் எத்துணை பேர்க்கு உந்துதல் தந்திருக்கும்? இவர் ஊமைச்சனங்களடி கிளியே - என்ற போக்கு.

அன்பே தவமாய் கொண்டோர் நாம் அன்பு என்ற சொல்லுக்கு எதிர்ச்சொல் வெறுப்பு, கோபம், பகை வளர்ப்பு என்றுதான் நினைத்துள்ளோம். அது தவறுஅலட்சியம் தான் எதிர்மறைச்சொல்”. இந்தச்சொல்தான் நம்மை பிடித்து ஆட்கொண்டு, தளர்ச்சியடையச் செய்துள்ளது. இந்த போக்குதான் திரு அவையின் பங்குத்தல திரு அவை தொட்டு மேல்மட்டம் வரை ஊடுருவி, வளர்ந்து தளர்ச்சி காணச் செய்துள்ளது. நம்மை வளர்த்து ஆளாக்க ஒரு கட்சி இல்லை, ஒரு கட்சியில் சேர ஊக்குவிப்பாரில்லை, ஊக்குவிற்பவனை ஊக்குவித்தால் அவனும் உயர்வான்என்பது ஒரு சொலவடை. நாளேடுகளில் நாளும் பொழுதும் வரும் அரசியல் கட்சிகளின் விளம்பரம், பாராட்டுகளில் நம்மவரை தேடினும் காண்பது அரிதினும் அரிது. புதிய ஆட்சியில் ஒருசிலர் அது கண்டுபெரும் மகிழ்ச்சி - பாராட்டுவோம்.

சமய நிறுவனங்களிடையே வேறுபாடுகள், முரண்பாடுகள் (வளர்ச்சியில்) இத்தோடு சேர்கின்ற சமயப்பூசல்கள், சண்டைகள், பிறஇந்துத்துவாநுழைய தாக்குதலுக்கு காரணிகள். சீர்தூக்கி அலசவேண்டிய நேரம். முறம்கொண்டு புடைப்போம். சல்லடை போட்டு சளிக்காதீர்கள். தொண்டுசெய்வதற்கு லாபநட்டக்கணக்கு பார்த்தாலே நம் இதயத்தில் ஈரம் நிறைந்த அன்பு இல்லை என்று பொருளாகிவிடும். தவ()யாத்திரையோ, மிகுதி இருப்போர் கொடுப்பதாலோ கடவுள்பேறும், ஆசீரும் கிடைக்காது. நாம் விடுத்து தெய்வீகக்குணம் பெறாவிடில் சமயத் தொண்டும், சமயப்பண்பும் வீண்.

அக்காலத்தில் சமயப்போர் கலகங்களில் உயிர்நீத்தவர்கள் புனிதர்கள், மறைசாட்சிகள் எனப் போற்றினர். பாதிக்கப்பட்டவர்கள் புனிதர்களாக மதிக்கப்பட்டனர். இன்று தலைவர்கள், முன்னெடுப்பாளர்கள் பாதுகாப்பில் உள்ளனர். பாதுகாப்பின்மையும், குருதிசிந்தும் தொண்டர்களும் சரிமுனைப்பில் தொய்வு காண்கின்ற நிலைமை. குடும்ப உறவுகள் அண்மைக்காலங்களில் இயக்கம் மாறிய நிலையில் நிறுவனங்களின் ஆதிக்க உணர்வுகள் வளர்வதால் ஏதாவது ஒன்றுக்குஒன்று அடிமை நிலை. சமயம், சந்தர்ப்பம் பார்த்து நம் சமய எதிரிகள் விமர்சிப்பவர் என பல தரப்பட்டோர் ஊடுருவி, குளிர்காய்ந்து, குழப்பம் விளைவிக்கின்றனர். அதன் உண்மை நிலையை, எதார்த்தத்தை நம் தலைமைகள், வழிகாட்டிகள்ஞாலம் கருதினும் கை கூடுங் காலம் கருதி இடத்தாற் செயின்” (குறள் 484), என்ற குறள்படி நடந்தால் வாழ்வு மெய்ப்படும்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து அதனை அவன்கண் விடல் என்ற வள்ளுவர் வாய்மொழி திரு அவை தல பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு கிறித்தவ சமூகம் இனியொரு விதிசெய்ய புதுயுக வழிகாண வேண்டும் என்பது நம்மவரின் கருத்து.

அந்நாளில் கிறித்தவம் இங்கு வேரூன்றியபோது சாதி ரீதியாக பெரும்பாலும் வேறுபடவில்லை. சமய ரீதியாக ஒன்று பட்டன. இன்றோ சாதி சமயத்தை கூறும்போடும் அவலநிலை பலபல இடங்களில் முளைவிடுகின்றன. வேரூன்றி வருகின்றன.

கூட்டம் கூடுவோம் - பேசுவோம் - களைவோம்கூடிப்பிதற்றல் அன்றி நாட்டத்திற்கு கொள்ளாரடி கிளியே! நாளில் மறப்பாரடி கிளியேஎன்ற பாரதியின் வாக்குதான் நமக்கு நினைவுக்கு வருகின்றது. இந்திய போர்நாட்டின் ஜனநாயகத்துக்கும், நம்பகதன்மைக்கும் பெரும் பின்னடைவு வருமோ, அல்ல வந்துவிட்டதே! எதிர்க்க துணிந்தோம். எழுத்தளவில், ஏட்டளவில், செயலளவில் அணி திரணாமையில் சேர்ந்து உள்ளோம். சண்டையில்லாமல் சமாதானம் இல்லை - கலகம் பிறந்தால் நியாயம் கிடைக்கும் என்பது இம்மண் காட்டிய வழி - இன்று சகாயம் அய்யாவின்மோதலே தீர்வுஇணக்கம் சமரசம் வேண்டாம் என்ற அறை கூவலுக்கு செவிமடுப்போமா? திரு அவை தலைவர்கள் கையில் அது உள்ளது.

Comment