No icon

கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களில் கிறிஸ்தவர்கள்

இந்தியாவில் அன்று கல்வியை, அனைத்து சமூகத் தினருக்கும் தன்னலம் கருதாமல், கிராமங்கள், மலைப்பிரதேசங்கள், நகர்புறங்களில் தேடி ஓடிச்சென்று பள்ளிகளும், கல்லூரிகளையும் வழங்கியது நமது கிறிஸ்துவம். அது இன்றுவரை வளர்ந்து வருகிறது.
அதில் மதம்  என்பதெல்லாம் இல்லை. கற்றவர்கள், மத்திய - மாநில அமைச்சர்கள் முதல் ஆட்சி
யாளர்கள் அரசுத்துறை செயலாளர்கள், தொழில் அதிபர்கள் வரை அனைவருக்கும் கல்வி வழங்கியது.
அன்று செயல்படுத்தத் தவறியது
1980க்குப் பின் அன்றைய தமிழக அரசும் மத்திய அரசும், சுயநிதி பொறியியல் கல்லூரிகள், மருத்துவக் கல்லூரிகளுக்கு சலுகையுடன் அனுமதி வழங்கியது. நம்மிடம் ஏராளமான இடங்கள் இருந்தும் அன்றைய திருச்சபை அதை பயன்படுத்தவே இல்லை. அலட்சியத்துடன் இருந்ததால் நமது திருச்சபை குறிப்பாக பிற் படுத்தப்பட்டோர், வருவாய் குறை
வுள்ள ஏழைகளையும், மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்கள், மீனவர்களுக்கு நமது பள்ளிகளில் கல்லூரிகளில் கட்டண சலுகை வழங்கியிருந்தால் மிக அதிகமானோர் பயன் பெற்று முன்னேறி இருப்பார்கள்.
இன்று கிறிஸ்தவர்களின் நிலைப்பாடு
மாணவர் சேர்க்கைக்கு இன்றுகூட நமது கிறிஸ்தவ பள்ளிகளில், கல்லூரிகளில் கிறிஸ்தவர்கள் என்று மறை மாவட்ட பங்கு குருக்களிடம் பரிந்துரைக் கடிதங்கள் பெற்று வந்தாலும்கூட, அக்கடிதங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. நமது கண்
முன்பே அவைகளைக் கிழித்து குப்பைத் தொட்டி களில் போடப்படுகின்றன. அன்று சென்னை - மயிலைப் பேராயர் கசிமீர் ஞானாதிக்கம் அவர்கள், நமது மக் களுக்கு அரசு சலுகை வழங்க மறுக்கிறது. கிறிஸ்தவ மக்களுக்கு
அனைத்து பள்ளி, கல்லூரிகளில் கிறிஸ்தவ மாணவ மாணவியர்களுக்கு இடம் கிடைக்க ஆணை பிறப்பித்தார். அதன் பயனாகப் பலர் பயனடைந்தனர். அதை இன்றுவரை பல பிரிந்த சபை பள்ளி, கல்லூரிகளில் வழங்கி வருகிறது.
நமது திருச்சபையால் முடியும்
கிறிஸ்துவ இளைஞர்கள் தங்களின் சொந்த சக்தியைக் குறைத்து மதிப்பீடு செய்யாமல் உடல்வலிமை என்ற மூல தனத்தை சமூகம் சார்ந்த வேலை வாய்ப்புக்கு மேல்நிலைப்பள்ளி முதல் கல்லூரி விரிவுரையாளர்கள் ஓய்வு பெற்றவர்கள், அரசுப் பணி யாளர்களைக் கொண்டு சேவை மனப்பான்மையுடன் மத்திய - மாநில அரசுப் பணித் தேர்வுகளுக்கு மிக குறைந்த கட்டணத்தில் பயிற்சி வழங்கலாம்.
விருதுநகரில் மாவட்ட ஆட்சியாளர் அலுவலகத் தில் சேவை மனப்பான்மையுடன் ஒரே நபர் அனைத்துப் பாடங்களையும் எடுத்து 3000 பேர் மத்திய - மாநில அரசு வேலை வாய்ப்பு பெற்று பயனடைந்துள்ளனர். திரு. மாரி முத்து, வருவாய்த்துறையில் பணிபுரிந்து இவ்வாறு சேவை மனப் பான்மையுடன் செயல்படுகிறார்.
செயல்பட வேண்டியது
மத்திய - மாநில அரசுகள் வழங்கும் சலுகைகளை கிறிஸ்தவ மக்களுக்கு முறையாக நாம் பயன்படுத்துவதில்லை. பெண்கள் திருமணத் திட்டம், பெண் குழந்தைகள் கல்வி, வைப்புத் தொகை திட்டம், முதியோர் ஓய்வுத்தொகை, விதவைகள் வாழ்வு திட்டம் ஆகியவைகளை அந்த பகுதி மறை வட்டம் சேவை மனப் பான்மையுடன் செயல்படுத்தலாம்.
பாராளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர்களின் பொது நல நிதிகளில் இருந்து பள்ளிக் கூடம் சமுதாய கட்டிடங்கள் கட்ட நிதி கோருதல், இதைப் பிரிந்த சபை நண்பர்கள் சிறப்பாகப் பயன்படுத்தி பயனடைகிறார்கள்.
ஐரோப்பிய குருக்கள் அவர்கள் வாழ்ந்த காலத்தை, நிலையை பின்னோக்கிப் பார்த்தால்
மக்கள் சமூகம் என்று பகுதி மக் களின் நிலைகளை அறிந்து சேவை செய்து அவர்கள் வாழ்ந்ததால் அவர்களுடைய வருகையின் பயனாக எத்தனையோ பள்ளிகள், கல்லூரிகள் உருவாயின என்று நினைக்கும்போது சந்தோசமாக இருக்கிறது. தமிழக ஆயர் பேரவை
மறை மாவட்டத்தில் பிற்பட்டோர் ஏழைகள், மதம் மாறிய தலித் கிறிஸ்தவர்கள், மீனவர்களின் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ளவர் களின் கல்வி, வேலை வாய்ப்பு திட்டங்களை உருவாக்கலாம். அதன் பயனை அநேகர் பயன்பெறு வார்கள் என்பதை பணிவுடன் தெரிவிக்கிறேன்.

Comment