No icon

குடந்தை ஞானி

அருட்பணியாளர் ஸ்டான் ஸ்வாமியை புனிதர் நிலைக்கு உயர்த்த வேண்டும்

இயேசுசபை அருட்பணியாளர் ஸ்டான் ஸ்வாமி அவர்கள் இந்திய அரசுக்கு எதிராக சதி செய்கிறார் என்ற தவறான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டு, பார்கின்ச்ன் நோய் காரணமாக அவரை ஜாமினில் கூட விடுதலை செய்யாததால், அவர் ஜூலை 5 ஆம் தேதி, சிறையிலேயே அரசாங்கத்தின் கைதியாக பரிதாபமாக இறந்தார்.

இம்மாநிலத்தை ஆளும் பிஜேபி அரசு, ஜார்கண்டில் உள்ள ஆதிவாசி மக்களை நக்சலைட் கிளர்ச்சியாளர்கள் என்று முத்திரை குத்தி பாதுகாப்புப் படையை அங்கு அனுப்பி வைத்தது. இந்த பாதுகாப்புப் படை இங்கு வாழ்ந்த அப்பாவி ஆதிவாசி மக்களை காவலில் வைத்து மிருகத்தனமாக சித்திரவதை செய்தது, கொலை செய்தது, கற்பழித்தது. இப்படி இம்மக்களை ஒடுக்கி அவர்களின் வளங்களை சுரண்ட ஆரம்பித்தது. இம்மக்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு எதிராக 84 வயதான அருட்பணியாளர் ஸ்டான் ஸ்வாமி குரல் கொடுத்து போராட தொடங்கினார். இது ஆளும் பிஜேபி அரசுக்கு வளங்களை சுரண்டுவதற்கு தடையாக இருத்தால், அவர் மீது பொய்க்குற்றம் சுமத்தி, கைது செய்து, சிறையில் அடைத்தது. அவரது வயது மற்றும் அவரை பாதித்த பார்கின்ச்ன் நோய் காரணமாக அவரை ஜாமினில் கூட விடுதலை செய்யாததால், அவர் ஜூலை 5 ஆம் தேதி, சிறையிலேயே அரசாங்கத்தின் கைதியாக பரிதாபமாக இறந்தார்.

அருட்பணியாளர் ஸ்டான் ஸ்வாமிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று பலர் கோரிக்கை விடுத்துள்ளனர். 1974 ஆம் ஆண்டில் நோபல் அறக்கட்டளை மரணத்திற்குப் பிறகு இவ்விருதினை வழங்கக்கூடாது என்று தீர்மானித்ததால் அது நடக்காது. மேலும் அருட்பணியாளர் ஸ்டான் பாரத் ரத்னா விருதுக்கும் தகுதியானவர், ஆனால் அதுவும் தற்போதைய சிலையில் நடக்கப்போவதில்லை என்பதால், சாத்தியமானதை சிந்திக்க வேண்டும்’’ என்று தற்போது பெங்லூருவில் வசிக்கும் சர்வதேச பத்திரிகையாளர் என். ஜேராம் கூறுகிறார்.

ஜி. தேவசகாயம் என்பவர் இந்தியாவின் தலைசிறந்த நிர்வாகிகளில் ஒருவர். அவர் மேல்மட்ட இந்திய நிர்வாக சேவைகளில் சேருவதற்கு முன்பு இராணுவத்தில் ஒரு அதிகாரியாக இருந்தார். இவர்தான் அருட்பணியாளர் ஸ்டான் ஸ்வாமியை புனிதர் நிலைக்கு உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை முதன்முறையாக எழுப்பியவர். இப்போது அவரைத் தொடர்ந்து பலரும் இக்கோரிக்கையை ஆதரிக்கின்றனர்.

Comment