No icon

திருத்தந்தை: பிரேசில் நாட்டுக்கு உயிர்காக்கும் மருத்துவ கருவிகள

பிரேசில் நாடு, கோவிட்-19 கொள்ளை நோயால் அதிகம் தாக்கப் பட்டுள்ளவேளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாட்டின் மருத்துவமனைகளுக்கு, உயிர்காக்கும் மருத் துவக் கருவிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார் என்று, திருத்தந்தையின் தர்மச் செயல் களை ஆற்றுகின்ற, கர்தினால் கொன்ராட் கிராஜூவ்ஸ்கி  அவர்கள், ஆகஸ்ட் 17 ஆம் தேதி அறிவித்தார்.

டிரேக்கர்  நிறுவனம் தயாரித்த எட்டு சுவாசக்கருவிகள் மற்றும், Fuji நிறுவனம் தயாரித்த, உடலுறுப்புக்களை ஆய்வுசெய்யும் அலட்ராசவுண்ட் ஸ்கேன்னர் ஆறு கருவிகள் ஆகியவற்றை, திருத்தந்தை வழங்கியுள்ளார் என்றும், இவை, திருத்தந்தையின் பெயரால், கப்பல் வழியாக பிரேசில் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும், கர்தினால் கொன்ராட் கிராஜூவ்ஸ்கி  அவர்கள் கூறினார்.

தற்போதைய கொள்ளைநோயால் கடுமையாய்த் தாக்கப்பட்டுள்ள, குழுமங்கள் மற்றும், நாடுகளுக்கு, தாராளமாய் உதவிகள் வழங்கப்படுமாறு, உருக்கமாய் தொடர்ந்து அழைப்பு விடுத்துவரும் திருத்தந்தை, அதற்கு எடுத்துக்காட்டாய் அவரே இருந்து வருகிறார் என்றும், கர்தினால் கிராஜூவ்ஸ்கி   கூறினார்.

கொரோனா கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டுள்ள பல்வேறு ஏழை நாடுகளுக்கு  திருத்தந்தை வழங்கிவரும் இந்த உயர்தர தொழில்நுட்ப மருத்துவக்கருவிகள் கிடைப்ப தற்கு, “நம்பிக்கை” எனப்படும் இத்தாலிய அரசு-சாரா அமைப்பு உதவி வருகிறது எனவும், கர்தினால் கிராஜூவ்ஸ்கி   கூறினார்.

மனிதநலம் மற்றும், கல்வி சார்ந்த மனிதாபிமானத் திட்டங்களைச் சிறப்பாக ஆற்றிவரும், இந்த இத்தாலிய அமைப்பு, இந்த மருத்துவக்கருவிகள், நன்கொடையாளர்கள் வழியாக கிடைப்பதற்கு வழியமைப்பதோடு, அவற்றைப் பெறுகின்ற நாடுகளின் மருத்துவ மனைகளில், அவற்றைக் கொண்டுசேர்க்கவும் உதவி வருகிறது என்பதையும், கர்தினால் கிராஜூவ்ஸ்கி   நன்றியுடன் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 17 ஆம் தேதி நிலவரப்படி, பிரேசில் நாட்டில், 33 இலட்சம் பேர் கொரோனா தொற்றுக்கிருமியால் தாக்கப்பட்டுள்ளனர்;1,07,852 பேர் உயிரிழந்துள்ளனர். உலகில் இந்த கொள்ளைநோயால் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளுள், அமெரிக்க ஐக்கிய நாட்டிற்கு அடுத்த நிலையில் பிரேசில் நாடு உள்ளது.

Comment