No icon

இராஞ்சி துணை ஆயர், Jamshedpurன் புதிய ஆயர்

இந்தியாவின் Jamshedpur மறைமாவட்டத்தின் புதிய ஆயராக, இராஞ்சி மறைமாவட்ட துணை ஆயர் Telesphore Bilung அவர்களை  திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார்.

இராஞ்சியின் துணை ஆயராகவும், 2019ம் ஆண்டு ஜூன் மாதத்திலிருந்து Jamshedpurன் அப்போஸ்தலிக்க நிர்வாகியாகவும் பணியாற்றிவந்த, இறைவார்த்தை சபையைச் சேர்ந்த ஆயர் Telesphore Bilung அவர்கள், 1961ம் ஆண்டு ஒடிசாவின் ரூர்கேலா  மறைமாவட்டத்தில் பிறந்து, 1992ம் ஆண்டு, இறைவார்த்தை துறவுசபையின் அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார்.

சம்பல்பூர் இளங்குருமட அதிபராகவும், இறைவார்த்தை துறவுசபையின் மாநிலத்தலைவராகவும் பணியாற்றியுள்ள ஆயர் Bilung அவர்கள், 2014ம் ஆண்டு ஆயராக திருநிலைப்படுத்தப்பட்டு, 2019ம் ஆண்டு ஜூன் 20ம் தேதி முதல் Jamshedpurன் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக செயலாற்றியுள்ளார்.

1997ம் ஆண்டு முதல் Jamshedpurன் ஆயராக இருந்த இயேசுசபை ஆயர் Felix Toppo அவர்கள், 2018ம் ஆண்டு இராஞ்சி பேராயராக நியமிக்கப்பட்டதிலிருந்து, தற்போது, Jamshedpur மறைமாவட்டத்தின் ஆயராக இராஞ்சி துணை ஆயர் Bilung நியமிக்கப்பட்டுள்ளார்

Comment