No icon

இலங்கை: மே 14ல் இலங்கையில் கத்தோலிக்கப் பள்ளிகள் திறப்பு

இலங்கையில், இவ்வாண்டு உயிர்ப்பு ஞாயிறன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், பாதுகாப்பு காரணங்களுக்காக கொழும்பு நகரில் உள்ள அனைத்து ஆலயங்களிலும் திருப்பலி நிறைவேற்றப்படவில்லை. பள்ளிகளும் விடுமுறைக்குப் பிறகு திறக்கப்படவில்லை. மே 9 ஆம் தேதி இலங்கை அதிபர் மைத்திரி பால ஸ்ரீசேனேவை இலங்கையில் உள்ள 12 ஆயர்கள் சந்தித்து உரையாடினர். அதன்படி. கொழும்பு நகரிலுள்ள அனைத்து கத்தோலிக்க ஆலயங்களிலும், மே 12, ஞாயிற்றுக்கிழமை முதல் திருப்பலிகள் நிறைவேற்றப்படுகின்றன. மூடப்பட்டிருந்த கத்தோலிக்கப் பள்ளிகள், மே 14 ஆம் தேதி செவ்வாய் முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
மே 16, வியாழக்கிழமையன்று நீர்கொழும்புவில், பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பலியானவர்களின் நினைவாக, கர்தினால் இரஞ்சித் அவர்களின் தலைமையில் ஆயர் பெருமக்களும் திரளான எண்ணிக்கiயில் இறைமக்களும் பங்கு பெற்ற சிறப்புத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. நீர்கொழும்பு புனித செபஸ்தியார் ஆலயத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்புகளுக்குப் பின்னர், பொதுவில் நடைபெறும் முதல் திருப்பலி இதுவே என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Comment