No icon

இலங்கை குண்டுவெடிப்பு செய்திகள்

புனித செபஸ்தியார் ஆலய அடக்கச் சடங்கில் கர்தினால் இரஞ்சித்
இலங்கையில் உயிர்ப்புப் பெருவிழாவன்று நடத்தப்பட்ட தீவிரவாதத்தாக்குதலில் பலியான வர்களில் பதினைந்து பேரின் பொதுவான அடக்கச் சடங்கு புனித செபஸ்தியார் ஆலயத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி கொழும்புப் பேராயர், கர்தினால் மால்கம் இரஞ்சித் தலைமையில் பெரும் பாதுகாப்புடன் நடைபெற்றது.  அப்போது அவர், “உயிரை வழங்குவது இறைவன் மட்டுமே. அவருக்கு மட்டுமே உயிரை எடுத்துக்கொள்ள உரிமை உண்டு. அப்பாவி மக்களைக் கொல்வ தால் என்ன பயனை பெறமுடியும்? வெறி மிகுந்த
கொள்கைகளை அடைவதற்கு, மக்களைக் கொல்வதை நிறுத்துங்கள்” என்று கேட்டுக்
கொண்டார்.  மேலும் இந்தக் கொடுமைக்குக் காரணமானவர்களின் மனசாட்சி அவர்களுக்கு உண்மையைக் கூறியிருக்கும் என்று வருத்தத் துடன் குறிப்பிட்டார்.
நீர்கொழும்புவின் கட்டுவபிட்டியா புனித
செபஸ்தியார் ஆலயத்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 102 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் 86 பேரின் அடையாளம் உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும், இவ்வாலயத்தின் பங்கு அருள்பணியாளர், சிரிலால் பொன்சேக்கா குறிப்பிட்டார்.
வேதனையை மூலதனமாக்கி அரசியல் இலாபம் வேண்டாம் - இலங்கை ஆயர் பேரவை
உயிர்ப்பு ஞாயிறன்று இலங்கையில் நடை
பெற்ற தாக்குதல்களை, அரசியல் தலைவர்கள் தங்கள் சுயநலத் தேவைகளுக்குப் பயன்படுத்த வேண்டாமென்று இலங்கை ஆயர் பேரவையின் தலைவர், ஆயர்  ஜூலியன் வின்ஸ்டன் செபாஸ்டின் பெர்னாண்டோ கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையின் துயர நிகழ்வுகளையொட்டி, வத்திக்கான் செய்திக்குப் பேட்டியளித்த ஆயர் பெர்னாண்டோ அவர்கள், இலங்கை அரசு, தேவை யான அளவு பாதுகாப்பினை உறுதி செய்யாமல் இருந்தது மிகுந்த வேதனையாக உள்ளது என்று கூறினார்.
இந்தப் பெரும் துயரங்கள் நடுவே, கிறிஸ்தவ மக்கள், அருள்பணியாளர்கள், மற்றும்  துறவியர் காட்டிய பொறுமை, இறைவன் தங்களுக்கு வழங்கிய அருள் என்று ஆயர் பெர்னாண்டோ என்று அப்பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய துயரமான சூழலிலும், அரசியல் தலைவர்கள் ஒருவரை ஒருவர் குறை கூறி, பழைய பகைமையை மீண்டும் கிளறிவிடுமாறு பேசி
வருவது வேதனையளிக்கிறது என்று ஆயர் பெர்னாண்டோ வருத்தத்துடன் குறிப்பிட்டார்.
அன்பு நிறை இலங்கை நாட்டிற்கு தேவையானதை ஆற்ற....திருத்தந்தை அழைப்பு
குண்டு வெடிப்புக்களால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களோடு தான் மீண்டுமொருமுறை தன் ஆன்மிக மற்றும் ஒரு தந்தைக்குரிய நெருக்கத்தை வெளியிடுவதாக, இத்திங்களன்று வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலி உரையின் இறுதியில் திருத்தந்தை பிரான்சிஸ் தெரிவித்தார்,
என் அன்புக்குரிய சகோதரர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்களோடும், கொழும்பு பெரு
மறைமாவட்ட விசுவாசிகளோடும் தான் மிக நெருக்க
மாக இருப்பதாக தன் செய்தியில் கூறியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உயிரிழந்துள்ளோர் மற்றும் காயமடைந்துள்ள அனைவருக்காகவும் தான் செபிப்பதாக உறுதியளித்தார். குண்டு வெடிப்புத் தாக்குதலால் துன்புறும் இந்த அன்பு நிறை நாட்டிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் அனைத்து சமுதாயமும் வழங்க முன்வரவேண்டும் என்ற அழைப்பையும் திருத்தந்தை பிரான்சிஸ் விடுத்துள்ளார்.
மனிதாபிமானமற்ற, அதேவேளையில் எவ்வகை யிலும் நியாயப்படுத்தப்பட முடியாத இந்த பயங்கர வாத நடவடிக்கைகள் குறித்து அனைவரும் தங்கள் கண்டனங்களை வெளியிட வேண்டும் எனவும், திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
இத்தாக்குதல்கள் குறித்து கொழும்புப் பேராயர் கர்தினால் மால்கம் இரஞ்சித் அவர்கள் தன் வன்மையான கண்டனத்தை வெளியிட்டிருக்க, இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜியோ மத்தரெல்லா, இத்தாலி
யின் சான் எஜிதியோ அமைப்பு,  கூhந ஊhரசஉh in சூநநன என்ற உதவி அமைப்பு, புனித பூமியின் கத்தோலிக்க அமைப்பு, றுஊஊ என்ற உலக கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு, ஹங்கேரி ஆயர் பேரவை, அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவை ஆகியவைகளும் தனித்தனியாக இலங்கைக்கு தங்கள் அனுதாபங்களை வெளியிட்டு செய்திகளை அனுப்பியுள்ளன. 2013ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையின் ஏறத்தாழ 2 கோடியே 20 இலட்சம் மக்களுள் 70 விழுக்காட்டினர் புத்த மதத்தினர், 12.6 விழுக்காட்டினர் இந்துக்கள், 9.7 விழுக்காட்டினர் இஸ்லாமியர், மற்றும், 7.6 விழுக்காட்டினர் கிறிஸ்தவர் ஆவர்.
இலங்கை மக்களுடன் ஒருமைப்பாடு
கொண்ட திருத்தந்தை
இலங்கையில், ஏப்ரல் 21, இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழாவான, ஞாயிறு காலையில், சில ஆலயங்கள் மற்றும் ஏனைய இடங்களில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புகள் பற்றி, ‘ஊர்பி எத் ஓர்பி’ ஆசீருக்குப் பின்னர், மிகுந்த கவலை மற்றும் வேதனையோடு திருத்தந்தை பிரான்சிஸ் பேசினார்.
மிகவும் கொடூரமான இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சமுதாயம் மற்றும் ஏனையோருக்கு எனது ஆழ்ந்த ஒருமைப்பாட்டு ணர்வைத் தெரிவிக்கின்றேன். அத்தாக்குதல் சமயத்தில் கிறிஸ்தவர்கள், செபத்தில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதில் இறந்தவர்கள் மற்றும் காயமுற்றவர்களுக்கும், இதனால் துன்புறும் அனைவருக்காகவும் செபிக்கின்றேன் என்று திருத்தந்தை தம் தோழமையை வெளிப்படுத்தினார்.
 

Comment