No icon

ஹாங்காங்: உயிர்ப்புப் பெருவிழாவில், 2,800 திருமுழுக்குகள்

இவ்வாண்டு உயிர்ப்பு ஞாயிறன்று,
ஹாங்காங் தலத்திருஅவையில் 2,800க் கும் அதிகமானோர் திருமுழுக்குப் பெற்று, கத்தோலிக்கத் திருஅவையில் இணைக்கப் பெற்றனர். இவர்களில் பெரும்பாலானோர் முதியோர் திரு முழுக்குப் பெற்றனர் என்று  ஆசிய செய்தியொன்று கூறுகிறது.
மார்ச் 24 ஆம் தேதி, ஞாயிறு முதல், கடந்த மூன்று ஞாயிற்றுக் கிழமைகளில், ஹாங்காங் அப்போஸ்தலிக்க நிர்வாகி யான கர்தினால் ஜான் டாங்க ஹான் துஅவர்களும், ஹாங்காங் முன்னாள் ஆயரான கர்தினால் ஜோசப் சென் சே குயின்  அவர்களும், திருமுழுக்கு பெற விழைவோரைச் சந்தித்து, அவர்கள் திருமுழுக்குப் பெறுவதற்குரிய தகுதியை ஆய்வு செய்தனர்.
திருமுழுக்கு பெற விழைவோரில் பலர், ஏற்கனவே ஹாங்காங் பங்குத்தளங் களில் தன்னார்வத் தொண்டர்களாகப் பணியாற்றியுள்ளனர் என்றும், இவர்களது வருகையால் தலத்திரு அவை இன்னும் உற்சாகத்துடன் செயலாற்ற முடியும் என்றும் பாப்பிறை மறைபரப்புப் பணியாளர்களான ஞஐஆநு சபையின் தலைவர், அருள்பணி ஜியார்ஜியோ பாசினி கூறினார்.
உயிர்ப்பு ஞாயிறன்று திருமுழுக்குப் பெற்றோரில் பலர், அலுவலகங்களில் பணியாற்றுவோர்;  இவர்கள், தங்கள் நண்பர்கள், உறவினர்கள், அல்லது வலைத்தளங்கள் வழியே, கத்தோலிக்கத் திருமறையைக் குறித்து அறிந்து ஆர்வம் கொண்டு, திருஅவையை நாடி வந்துள்ளனர் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
 

Comment