No icon

இந்தோனேசியாவிலும் பெரிய வியாழக்கிழமையன்று தேர்தல்

இந்தோனேசியாவில் புனித வாரத்தில் தொடங்கும் பொதுத்தேர்தலில் பங்கு பெறுவதிலிருந்து தடைசெய்யும் அனைத்து நடவடிக்கைகளையும் தவிர்க்குமாறு, போகோர் ஆயர் பாஸ்காலிஸ் புருனோ சிக்கூர் கத்தோலிக்க கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பெரிய வெள்ளிக்கிழமையான ஏப்ரல் 19, இந்தோனேசியாவிற்கு தேசிய விடுமுறை நாளாக இருப்பதால், அந்நாளில் மக்கள் விடுமுறையைச் செலவிடவே விரும்புவார்கள் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.  இஸ்லாமிய தீவிரவாதத் தால் அச்சுறுத்தப்பட்டுள்ள இந்நிலையில்,  சனநாயகத்தின் நல் எதிர்காலத்திற்கு இந்தப் பொதுத்தேர்தல் மிக முக்கியமானது என ஆயர் பாஸ்காலிஸ் சிக்கூர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் புனித வாரத்தில், ஆயிரக்கணக்கான கத்தோலிக்கர், புனித பூமிக்கும், உரோம் நகருக்கும் திருப்பயணம் மேற்கொள்வார்கள் என்ற நிலை ஏற்பட்டுள்ளதால், நாட்டின் மீதும், குடிமக்கள் மீதும் அன்பு செலுத்தி, கத்தோலிக்கர் அந்நாள்களில் பயணம் மேற்கொள் வதைத் தவிர்க்குமாறு ஆயர் வலியுறுத்தியுள்ளார்.
 

Comment