No icon

ஜப்பான் கிறிஸ்தவர்கள் மன்னிப்பு வேண்டினர்…

மார்ச் 1, 2019 அன்று தென்கொரியாவில் ஜப்பானின் ஆக்கிரமிப்பை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டம் கடுமையாக நசுக்கப்பட்டதன் 100 ஆண்டு நினைவுகூரப்பட்ட வேளையில், ஜப்பான் கிறிஸ்தவர்கள் குழு ஒன்று தங்கள் நாட்டின் இந்நடவடிக்கைக்கு மன்னிப்பு கேட்டுள்ளது.
தென்கொரியாவில், ஜப்பானின் ஆக்கிரமிப்பை எதிர்த்து 1919 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட மார்ச் முதல் தேதி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டதற்கு ஜப்பான் கிறிஸ்தவர்கள் மன்னிப்பு கேட்டுள்ளனர். 1919 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி ஜப்பான் காவல்துறை மற்றும் இராணுவ துரப்புகள் ஐயீயோனி மாநிலத்தின் ஜேம்ரி கிறிஸ்தவ சபை ஆலயத்தில் நுழைந்து இருபது பேரை படுகொலை செய்தது. இதனை எதிர்த்து மார்ச் முதல் தேதி இயக்கம் தென்கொரியாவில் தொடங்கப்பட்டது. தென்கொரியர்களை ஒடுக்குவதற்கு ஐப்பானிய அதிகாரிகள் வன்முறையினைப் பயன்படுத்தினர். இதில் 7000 பேர் கொலை செய்யப்பட்டனர்.பத்தாயிரத்திற்கும் அதிகமான மக்கள் காயமடைந்தனர். ஐம்பதாயிரம் பேரின் நிலைப்பற்றி தெரியவில்லை. இச்சம்பவத்திற்கு இப்போது ஜப்பான் மக்கள் மன்னிப்பு கேட்கின்றனர்.

Comment