No icon

அன்பியக் கூட்டம் - 132

மையப்பொருள்: திரும்பி வருதல்
பாடல்: நான் காணாமல்போன ஆடல்லவா? 
தொடக்க வேண்டல்: நல்லுறவின் ஊற்றாக விளங்கும் தந்தையே இறைவா உம்மைப் புகழ்ந்து போற்றுகின்றோம். வாழ்வளிக்கும் வார்த்தையான மகன் இயேசுவே உம்மைப் புகழ்ந்து போற்றுகின்றோம். பிரிந்து போனவற்றை இணைக்
கின்றவரான தூய ஆவியே இறைவா உம்மைப் புகழ்ந்து போற்றுகின்றோம். இப்போது நாங்கள் எங்களது ..................... அன்பியக் கூட்டத்தை உமது பேரருளால் தொடங்க இருக்கிறோம். இதில் நாங்கள் நன்மையின் அனைத்துக் கூறுகளிலிருந்தும் பிடிவாதமாகப் பிரிந்து சென்றவர்கள் திரும்பி வருதலைப் பற்றி சிந்தித்து நல்ல செயல்பாட்டுத் திட்டங்கள் தீட்ட இருக்கிறோம். எங்களுக்கு உமது ஆசிகளை நிறைவாகப் பொழிந்தருளும். இக்கூட்டத்தில் நாங்கள் மனந்திறந்து உமது வார்த்தையின் ஆற்றல்களைப் பகிர்ந்து கொள்ளச் செய்தருளும். திரும்பி வருவதையே ஆவலுடன் எதிர்பார்க்கும் எம் திருஅவையும்  கிறிஸ்துவும் அழைப்பதை விரும்பி ஏற்கும் சூழலையும் நல்ல மனத்தையும் எங்களுக்கு வழங்கிட கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம். நல்ல தந்தையே - ஆமென்.
இறைவார்த்தை: லூக்கா 15: 1-3, 11-32
இறைவார்த்தைப் பகிர்தலுக்கு உதவியாக ஒரு நிகழ்வு
அந்தச் சீராய்வு மையம் குடி நோயாளர்களுக்காகத் தொடங்கப்பட்டு 25 ஆம் ஆண்டு விழாவைக் கொண்டா டியது. விழாவின் சிறப்பு நிகழ்வாக பயனாளர்களின் பகிர்தல் இடம் பெற்றது. உதயன் பகிர்தலுக்கு அழைக்கப்பட்டார். அவர், “ஆண்டவரால் இது நிகழ்ந்துள்ளது! நம் கண்களுக்கு இது வியப்பானது! (திபா 118:23) எனத் தொடங்கிப் பகிர்ந்தார்; என் வாழ்வில் என்னை முழுமையாக நம்பி என் படிப்புக்கு, வேலைதேட, புதிய தொழில் தொடங்க, தனிக் குடும்பத்தை வளப்படுத்த, உறவினர்களுக்கு உதவ என ஆசிரியர்கள், பெற்றோர், நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வழங்கிய பொருள்கள் அனைத்தையுமே போதைப் பொருள்களுக்கு செலவிட்டேன். அவற்றை மதிப்பிட்டால் பல லட்சம் ரூபாய்கள் வரை போகும். என் மனைவியும் நான் கேட்டபோதெல்லாம் தம் தந்தையார் வீடு போட்ட நகை, தனது சேமிப்புப் பணம் என எல்லாவற்றையும் வழங்கினார். எங்கள் இரு பிள்ளைகளையும் பராமரிக்க இயலாச் சூழல், போதையில் நான் எந்தத் தீய நடத்தையிலும் இறங்காததால் என் பெயர் கெடவில்லை. பல ஆயிரம் ரூபாய்களைத் தொலைத்தும், ஏமாந்தும், இலவசமாக கொடுத்தும், நான் ஊதாரியாய் வாழ்ந்து வந்தேன். இதை நன்கு கவனித்த சமூக ஆர்வலர் சமத்துவநாதன் என்னை இம்மையத்தில் கொண்டுவந்து சேர்த்தார். இங்கு நான் ஓராண்டு காலம் இருந்தேன். இம்மையம் தனது சீரார்ந்த செயல்பாட்டால் என்னை முற்றிலும் மாற்றியது. இப்போது நான் திருப்பூரில் ஒரு கம்பெனியில் வேலை பார்க்கிறேன். கைநிறைய சம்பளம். மனம் நிறைய சந்தோசம். ஆனால் திருந்த எனக்கு வந்த அத்தனை அழைப்புகளையும் அப்போது நான் ஏற்கவில்லை என்று கூறி, ‘திரும்பி வந்தேன்‘ என்ற தனது வாழ்க்கை அனுபவங்களைக் கொண்ட குறுந்தகட்டை (ஊனு) வெளியிட்டார்.
சிந்தனை:
    ஏமாற்ற நினைப்பவர் பிறறைவிட தன்னையே அதிகமாக ஏமாற்றிக் கொள்கிறார்.
    குடும்பக் கௌரவத்தை காற்றில் பறக்க விடல் நியாமா?
    நம்பாமல் கெடுவதைவிட பலர் வாழ்வில் நம்பிக் கொடுவதே அதிகமாகக் காணப்படுகிறது.
    என்னதான் எல்லாருடைய வழிகாட்டுதலும் இருந்தாலும் தனது ஒத்துழைப்பு இல்லா விட்டால் முன்னேற்றம் என்பது கானல் நீர்தான்.
    காப்பாற்ற ஆள் உண்டு என்ற எண்ணத்தில் எந்த எல்லைக்கும் போய்விடலாம் என எண்ணுபவர் அழிவிற்குத் தப்பிப்பது அபூர்வமே.
    திருந்தி வாழ அழைப்புகள் பல திசையிலிருந்து வந்தாலும் அசைந்து கொடுக்காமல் இருப்பது தன் தலையில் தானே மண்ணை வாரிப் போட்டுக் கொள்வதற்கு சமம்.
    குற்றஉணர்வு முற்ற முற்ற அதிலிருந்து விடுபடும் வாய்ப்புக் குறைவாகும். 
    திரும்பிப்பார்! விரும்பிப்பார்! உன் வாழ்வில் அமைதி அரும்பும் பார்!
    கொடுப்பவர்கள் ஏன்? எதற்கு? எவ்வளவு? எப்படிச் செலவழிக்கிறாய் எனக் கேட்காததால் வாங்குபவர் வாழ்வு அதாளபாதாளத்துக்குப் போகிறது.
    போதை வியாதியல்ல, விதியுமல்ல அது பாதை மாறிப்போகும் பழக்கம்தான் மனம் வைத்தால் திரும்பிவர வாய்ப்பு உண்டு.
    உடல் நலக்கேட்டை உடனே உணர்தல் அவசியம்.
நம்பிக்கையாளருக்கான மன்றாட்டுகளுக்கு
1.    திருஅவைப் பணியாளர்களின் சான்று வாழ்வுக்காக
2.    தாராளமயமாக்கப்பட்ட போதைப்பொருள் களை வழங்குதலில் அரசுகள் அதிரடித் தடையை ஏற்படுத்த
3.    அன்பியக் குடும்பங்களில் குடிபோதை, அதிகாரப் போதை, புகழ்போதை, பொருளா தாரப் போதை ஆகியவை தலையெடுக்காமல் இருக்க.
4.    சீராய்வு மையங்கள் சிறப்பாகச் செயல்பட
திருப்பாடல் 118: 18:27
பரிந்துரைக்கப்படும் செயல்திட்டங்கள்
1.     போதை பழக்க தீமைகளை விளக்கி முகாம்கள் நடத்துதல்
2.     லூக் 15: 1-3, 11-32 பகுதியை நடித்தல்.

நிறைவேண்டல்:
ஒளியும் உண்மையுமான இறைவா,
தீயனவற்றை நாடித் தேடிச் சென்று சொல்லொண்ணா துன்பங்களை அடையும்
அனைவரும் தங்களது வரவை எதிர்நோக்கி
பல்வேறு முயற்சிகளை மேற்கொள்ளும் தந்தையின் இல்லத்திற்குத் திரும்பி வர
வேண்டுமென்றும் அது கொண்டாட்டமாக்கப் பட்டு பாடமாக்கப்பட வேண்டுமென்றும் எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்.

Comment