No icon

BCC MEETING

அன்பியத் தோழன்

மையப் பொருள்: செவி சாய்ப்போம்!

பாடல்: "சம்மதமே இறைவா, சம்மதமே தலைவா - உன் மாலையிலே ஒரு மலராகவும்..."

தொடக்க வேண்டல்: எம் கூக்குரலை என்றும் கேட்டு எம்மை வாழவைக்கும் தந்தையே இறைவா உம்மை நெஞ்சாரப் போற்றுகின்றோம். இவர் குரலுக்குச் செவிசாயுங்கள் என்று தந்தையால் வாக்களிக்கப்பட்ட தவப் புதல்வனை இயேசுவே உம்மை நெஞ்சாரப் போற்றுகின்றோம். தந்தையோடும் மகனோடும் இணைந்து எமக்குக் குரல் கொடுக்கும் தூய ஆவியாரே உம்மை நெஞ்சாரப் போற்றுகின்றோம். உமது குரலுக்குச் செவிகொடுத்து உமது அன்புப் பிள்ளைகளாய் வாழும் நாங்கள் இப்போது எங்கள் ................................ அன்பிய கூட்டத்தைத் தொடங்கஇருக்கிறோம். இதில் நாங்கள் அனைவரும் கருத் தொருமித்துப் பங்கேற்கவும், பலரது வேண்டல்களுக் குச் செவிசாய்ப்பவர்களாய் வாழ்கிறோம் என்பதைக் காட்டும் விதத்தில் அனைவரது நன்மைக்காகவும் நாங்கள் தேர்வு செய்யும் செயல் திட்டங்கள் மிகவும் வெற்றிகரமாக அமைந்து பயனளிக்கவும் எங்களது உறவுகள் பலப்படுத்தப்பட்டு செயல்பாடுகள் உமது ஆட்சியின் மாட்சியாக அமையவும் எம் அன்பியக் குடும்பங்கள் அனைத்தும் தத்தமது எடுத்துக்காட்டான வாழ்வினால் உமது எண்ணங்களுக்குச் சம்மதம் தெரிவித்து சான்றுடன் வாழவும் அருள் புரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் கிறிஸ்துவழியாக உம்மை மன்றாடுகிறோம் - ஆமென்.

இறைவார்த்தை: லூக்கா 9:28-36

(இறைவார்த்தைப் பகிர்தலுக்கு உதவியாக ஒரு நிகழ்வு)

அந்த வீட்டில் உணவு உண்ணும்போது யாரும்

பேசக்கூடாது என்பது நடைமுறைச் சட்டம். அன்று

தந்தை, தாய் மற்றும் இரு பிள்ளைகள் இணைந்து

உணவருந்திக் கொண்டிருந்தனர் அப்போது அப்பாவைப் பார்த்து, "அப்பா, அப்பா" என்றான். அவர் அவனை முறைத்துப் பார்த்துவிட்டுஅமைதி

யாகச் சாப்பிடுஎனச் சொல்வதுபோல சைகை செய்துவிட்டு தான் சாப்பிடுவதைத் தொடர்ந்தார். சற்று நேரத்தில் மீண்டும் அவன் சற்று சத்தமாகவும் மூன்றுமுறை வேகமாகவும்அப்பா,

அப்பா, அப்பாஎன்றான். அப்போதும் அவர் முறைத்து விட்டுத் தனது சாப்பிடும் பணியைத் தொடர்ந்தார். சாப்பிட்டு முடித்துவிட்டுத் தம் மகனிடம் மகனே சாப்பிடும்போது நீ சொல்ல நினைத்ததை இப்போது சொல் என்றார் தந்தை. அதற்கு அவரது மகன், "இனிமே சொல்லி என்னப்பா பயன்? சோற்றோட கலந்து ஒங்க வயிற்றுக்குள் ரெண்டு கரப்பான் பூச்சிகள் போய்விட்டனவே" என்றான்.

சிந்தனைக்கு:

  • கண்டும் காணாமலும் கேட்டும் கேட்காமலும் வாழ்வது என்பது முறையற்ற வாழ்க்கை
  • செவிசாய்ப்பு இன்று எந்தக் கருத்துகளுக்கு வழங்கப்படுகிறது என்று ஆராய்ச்சி செய்த நிறுவனம் ஒன்று கீழ்க்கண்டவாறு வரிசைப்படுத்துகிறது.
  • பிறர் முன்னேற்றத்தைத் தடைசெய்ய கூறப்படும் ஆலோசனைகளுக்குகேளிக்கை, பொழுதுபோக்கு விளம்பரங்களுக்குஅதிரடி செயல்பாடுகளான, வன்முறை, போர், பேரிடர் பற்றிய செய்திகளுக்கு
  • வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு வழிகாட்டு வோருக்கு (கல்வி - மருத்துவம் - வேலைவாய்ப்பு - உற்பத்தி, சந்தைப் படுத்து பொருள்கள்)
  • இறுதியாக ஆன்மிக நெறிப்படுத்துதலுக்கு.
  • அன்பியத்தில் இந்த செவிசாய்ப்பு எந்த அளவுக்கு உள்ளது?
  • அன்பியக் குடும்பங்களில் போதுமான அளவுக்குச் செவிசாய்ப்பு இருக்கின்றதா?
  • தான் சொல்லுவதையே பிறர் கேட்கவேண்டும் என்று விரும்புகிறவர்கள். பிறர் கூறுவனவற்றுக்குத் தங்களது காதுகளைத் திறந்து வைக்கின்றனரா?
  • நம் வாழ்வின் அனைத்துமாக விளங்கும் இயேசு வுக்குச் செவிசாய்க்க வானின்று வரும் குரலை நாம் கேட்கிறோமா?

நம்பிக்கையாளர்களுக்கான மன்றாட்டுகளுக்கு

1. திருஅவைப் பணியாளர்கள் தங்களது கிறிஸ்தவ நம்பிக்கையை வெளிப்படுத்தும் விதத்தில் மேலதி காரிகளின் குரல்களுக்குச் செவிசாய்க்க வேண்டுமென்று,

2. குறுகிய மனப்பான்மையுடன் தங்களை வழிநடத்தும் கார்ப்பரேட்டுகள், மேலதிகாரிகளின் போக்கினைப் புரிந்துகொண்டு அரசு அதிகாரிகள் உண்மைக்குச் செவி கொடுக்க முன்வர வேண்டுமென்று

3. அன்பியக் குடும்பங்களில் வளர்ச்சியை நோக்கிய திட்டங்களுக்கு எல்லாரும் முழுமனத்துடன் செவிசாய்க்க வேண்டுமென்று.

4. தேவையிலிருப்போர், அனாதைகள், கைவிடப் பட்டோர், சூழ்நிலையின் கைதியாகித் தவிப்போர், தீமையின் தீயோரின் பிடியிலிருப்போரின் கதறல்களுக்குசெவிசாய்க்க வேண்டுமென்று...

திருப்பாடல்: 130:1-8

பரிந்துரைக்கப்படும் செயல் திட்டங்கள்

1. காது, மூக்கு, தொண்டை (நுசூகூ) குறையுள்ள வர்களுக்காகச் செபித்தல், சிறப்பு மருத்துவ உதவி முகாம்கள் வழியாக உதவுதல்.

2. ஒரு மாதம் முழுவதும் ஞாயிறு மறையுறைகளில் கூறப்படும் கருத்துக்களைச் சரியாக உள்வாங்கினார்களா என்பதை அறிய அன்பிய உறுப்பினர்களுக்குள் ஒரு போட்டிக்கு ஏற்பாடு செய்தல்.

நிறைவுவேண்டல்: எம் குரலுக்குக் கனிவுடன் செவி சாய்க்கும் அன்புத் தந்தையே இறைவா, இன்றைய எம்அன்பியக் கூட்டம் மிகவும் நன்றாக, எல்லாரும் தங்களதுஈடுபாட்டை வெளிப்படுத்தும் விதத்தில் செயல்பட நீர் புரிந்த அனைத்து உதவிகளுக்கும் நன்றி கூறுகின்றோம். நாங்கள் என்றும் உம் குரலுக்குச் செவிசாய்ப்பவர்களாக வாழ அருள்புரிய வேண்டுமென்று எங்கள் ஆண்டவர் கிறிஸ்து வழியாக உம்மை மன்றாடுகிறோம்.

Comment