No icon

உலகளாவிய மொழி விளையாட்டு!

பிரான்சின் தலைநகர் பாரிசில் 2024, ஜூலை 26 முதல் ஆகஸ்டு 11 வரை நடைபெறவுள்ள கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளுக்கு முன்னதாக, மெடலின் ஆலயத்தில் நடைபெற்ற அமைதிக்கான திருப்பலிக்கு, தன் வாழ்த்துச் செய்தியை வழங்கியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். “மதிப்புமிக்க சர்வதேச விளையாட்டு நிகழ்வு, உலகில் அமைதி மற்றும் நட்புறவை நோக்கி இவ்வுலகை இட்டுச் செல்லட்டும். மேலும், இந்த விளையாட்டுகளின் வழியாக நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்தி, சகோதரத்துவ நல்லிணக்கத்தை அடைய பிரான்ஸ் மக்கள் அனைவருக்கும் ஒரு வாய்ப்பாக அமையட்டும். எல்லைகள், மொழிகள், இனங்கள், தேசிய இனங்கள், மதங்கள் ஆகியவற்றைக் கடந்து விளையாட்டு என்பது உலகளாவிய மொழி என்பதால், மதிப்புமிக்க சர்வதேச விளையாட்டுப் போட்டியை நடத்தும் பாரிஸ் நகர் மக்கள் அனைவருக்கும் தன் வாழ்த்துகள்என்று தெரிவித்துள்ளார்.

Comment