No icon

10-வது தேசிய நற்கருணை மாநாடு!

அமெரிக்காவின் இந்தியானா மாநிலத்தின் தலைநகரான இண்டியானாபொலிஸ் 10 -வது தேசிய நற்கருணை மாநாடு ஜூலை 17-21  வரை நடைபெற்றது. ஒரு வாரம் முழுவதும், நடைபெற்ற இந்த மாநாட்டில் திருவழிபாடு, திருவிருந்தின் ஆராதனை, இசை, நாடக நிகழ்ச்சிகள், குழு விவாதங்கள், ஊர்வலம் மற்றும் நற்கருணை தொடர்பான பல்வேறு தலைப்புகளில் தனிப்பட்ட விளக்கக் காட்சிகள் அளிக்கப்பட்டனஇம்மாநாடு அமெரிக்காவில் உள்ள கத்தோலிக்கத் திரு அவைக்குப் புத்துயிர் அளிக்கும். அன்றாட வாழ்வில் நற்கருணை மறைப்பணியாளர்களாக மாற ஊக்குவிக்கும் என்று திருத்தந்தையின் பிரதிநிதியான பிலிப்பைன்ஸ் கர்தினால் லூயிஸ் தாக்லே விழா நிறைவில் கூறினார். மேலும், இயேசுவின் மரணம் மற்றும் உயிர்த்தெழுதலின் 2,000 -வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் 2033 -ஆம் ஆண்டில் 11-வது தேசிய நற்கருணை மாநாடு நடத்தப்படும் என்று அறிவித்தார். இந்நிகழ்வில், 200 ஆயர்கள், 500 துறவிகள் மற்றும் நூற்றுக்கணக்கான குருக்கள் உள்பட 50,000 மக்கள் கலந்துகொண்டார்கள்.

Comment