No icon

ஜூலை 18 

புனித ஃபிரட்ரிக்

புனித ஃபிரட்ரிக் 780 இல் ஃபிரிஸ்லாந்தில் பிறந்தார். இறையன்பிலும், பிறரன்பிலும் வளர்ந்து திருநூல் கற்க ஆர்வம் கொண்டு, உட்ரெக்ட் நகர் சென்றார். ஆயர் ரிக்ஃபிரிட் கரங்களால் குருவானார். வால்செரன் பகுதியில் கிறிஸ்துவை அறியாத மக்களுக்கு கிறிஸ்துவின் விழுமியங்களையும், நலம் தரும் நற்செய்தியையும் போதித்தார். சமூகத்தில் நிலவிய தவறுகளையும், ஒழுக்கமற்றவர்களின் வாழ்வையும், சுட்டிக்காட்டியபோது மக்களின் எதிர்ப்பையும், துன்புறுத்தலையும் சந்தித்தார். 816 ஆம் ஆண்டு உட்ரெக்ட் மறைமாவட்ட ஆயரானார். 829 ஆம் ஆண்டில் மைன்ஸில் நடந்த ஆயர் மன்றத்தில் கலந்துகொண்டு, இறைஞானம் மிகுந்த வார்த்தைகளை பேசினார். இவரது பணிகளை விரும்பாதோர் இவர்மீது பொய்குற்றம் சுமத்தியபோது, இறையருளால் அமைதி காத்தார். 838 ஆம் ஆண்டு, ஜூலை 18 அன்று திருப்பலி நிறைவேற்றி, கடவுளுக்கு நன்றி கூறியபோது, எதிரிகள் இரண்டு பேர் அவரை வெட்டிக் கொலை செய்தனர்.

Comment