
‘நம் வாழ்வு’ வெளியீட்டுச் சங்கத்தின் புதிய தலைவரை வரவேற்கிறோம்!
தமிழ் கூறும் நல்லுலகில், தமிழ் இலக்கியத் தடாகத்தில் நன்கு அறியப்படும் பேராளுமையாக வலம் வரும் எம் ‘நம் வாழ்வு’ பதிப்பகத்தின் மேனாள் ஆசிரியரும், சிவகங்கை மறைமாவட்டத்தின் இந்நாள் ஆயருமான மேதகு ஆயர் முனைவர் லூர்து ஆனந்தம் அவர்கள் ‘நம் வாழ்வு’ பதிப்பகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியிடத்தின் வளர்ச்சிக்கான அடுத்தபடி நிலையே!
தமிழ் ஆர்வலராக, இலக்கியச் செம்மலாக, பேச்சாளராக, படைப்பாளியாக, எழுத்தாளராக, பல நூல்களின் ஆசிரியராக மற்றும் தொகுப்பு ஆசிரியராக, பத்திரிகைத் துறையின் முதன்மை ஆசிரியராக, இறையியலாளராக, மரியியலாளராக அறியப்படும் ஆயர் லூர்து ஆனந்தம் அவர்கள் தாம் முதன்மை ஆசிரியராகப் பணி செய்த ‘நம் வாழ்வு’ பதிப்பகத்திற்கே தலைவராக நியமிக்கப்பட்டிருப்பது கண்டு ‘நம் வாழ்வு’ வார இதழ் பெரும் மகிழ்ச்சி அடைகிறது.
ஆயர் அவர்களின் வழிகாட்டுதலும், துணையிருப்பும் ‘நம் வாழ்வு’ பதிப்பகத்தையும், ‘நம் வாழ்வு’ வார இதழையும் அடுத்த படிநிலை நோக்கி இந்தப் பொன்விழா ஆண்டில் வானளவாக உயரம் தொடும் வளர்ச்சி காணும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
தமிழ்நாடு ஆயர் பேரவையின் அச்சு ஊடகப் பணியகமாம் ‘நம் வாழ்வு’ பதிப்பகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மேதகு ஆயர் லூர்து ஆனந்தம் அவர்களின் பணி சிறக்க வாழ்த்துகிறோம்.
வாழ்த்தி மகிழும்...
முதன்மை ஆசிரியர்
துணை ஆசிரியர்கள்
அலுவலகப் பணியாளர்கள்
வாசகர்கள், சந்தாதாரர்கள்
மறைமாவட்டப் பொறுப்பாளர்கள்
Comment