பணமல்ல, அமைதியே தேவை!
மணிப்பூரில் 2023, மே 3-ஆம் தேதி தொடங்கிய வன்முறையில், 18,370-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 14,800-க்கும் மேற்பட்டோர் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர் என்று மணிப்பூர் முதல்வர் என். பிரேன் சிங் சட்டமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்குப் புதிய வீடுகள் கட்ட ரூ. 1,00,000 விநியோகம் செய்கின்ற திட்டத்தை அறிவித்தார். ஆனாலும், மாநிலத்தில் அமைதி நிலவாவிட்டால் இத்தகையதோர் அறிவிப்பால் எந்தப் பயனும் இல்லை என்று பாதிக்கப்பட்ட கிறிஸ்தவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
Comment